'முஸ்லிம் இளைஞர்சள் இணையத்தளங்களில் வீணாக காலத்தை கழிக்கின்றர்'
(மொஹமட் பாயிஸ்)
முஸ்லிம்களுக்கு, இஸ்லாத்திற்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இஸ்லாத்தை கொச்சை படுத்துமுகமாக 20 க்கும் மேற்பட்ட பெரும்பான்மை வெப் தளங்கள் இருந்து வருகின்றன. முஸ்லிம்களுக்கென்று தனியான இலத்திரனியல், அச்சு ஊடகங்கள் இல்லை. அதற்கான செலவுகளும், எம்மால் தாங்க முடியாதளவு உள்ளது. அதற்கென்று எமது தனவந்தர்களும் முன்வருவதில்லை என மௌலவி இஸ்மயில் ஸலபி தெரிவித்தார்.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழக மாணவர்கள் ஏற்பாடு செய்த புனித இப்தார் நிகழ்வு பதுளை 2ம் கட்டை ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற போது அதில் சிறப்பு உரை நிகழ்த்தும் போது அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இன்றைய எமது முஸ்லிம் இளைஞர்சள் இணையத்தளங்களில் வீணாக காலத்தையும், நேரத்தையும் கழித்து கொண்டிருக்கின்றர். பயனுள்ள வகையில் அவர்களின் முயற்சிகள் திசை திருப்பபட வேண்டும். எமது இளைஞர்கள் வீணாக கழக்கும் நேரத்தை இஸ்லாத்திற்கெதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும். பல்கலைகழக மாணவர்கள் என்ற வகையில் உங்களுக்கு தார்மீக பொறுப்பொன்று எம் சமூகத்தின் மீதுள்ளது.
உங்களுக்குறிய ஓய்வு நேரங்களை சிந்தித்து பயன்படுத்துவதன் மூலம் எமக்காக மேற்கொள்ளப்படும் பொய் பிரசாரங்களுக்கு இஸ்லாத்தின் ஆலயமான பதில்களை அவைகளுக்கு வழங்க முன்வர வேண்டும். விசேடமாக எமது பல்கலைகழக மாணவர்கள் இளைஞர்கள் சிங்கள மொழியில் இணையத்தளங்களை கையாள்வது கூடுதலான கரிசனை காட்ட வேண்டும். சோதனைகள் வருவது எமது பாவங்களை மன்னிப்பதற்காக. பிரச்சினைகளுக்கு பயந்து இஸ்லாத்தை விட்டு துறந்தோட முடியாது. எமது மார்க்கத்தில் அவ்வாறு விட்டு கொடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை.
அன்று பலஸ்தீனத்தில் போராட்டத்தில் ஓடி ஒழிந்த பெண்கள் இன்று போராட முன்வருகின்றார்கள். அதற்கு காரணம் அவர்கள் மார்க்கத்தில் உள்ள உறுதியேயாகும். இந்த நாடு எமது நாடு. நாட்டுக்கு விசுவாசமான இளைஞர்களாக நாங்கள் எங்களை அடையாளப்படுத்தி கொள்ள வேண்டும். இந்த நாட்டின் முஸ்லிம்கள் ஒரு போதும் துரோகிகளாக இருந்ததில்லை.
மாவனெல்ல போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்கள் மீது ஏற்பட்ட இன முறுகளின் போது வடக்கில் யுத்தம் இடம்பெற்று கொண்டிருந்தது. ஆனால் தென் பகுதியில் எங்கள் மீது இன வேறுபாடு காட்டப்படுகிறது என கூறி முஸ்லிம்கள் பயங்கரவாததிற்கு ஒரு போது துணைபோக வில்லை. எப்பொழுதும் நாட்டிற்கு விசுவாசமாக நடந்திருக்கிறார்கள். ஆனாலும் இன்று நிலைமை வேறாகியுள்ளது. நாளுக்கு நாள் முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் கொடுரமான அம்பட்டமான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவைகளுக்கு பதில் கொடுப்பதென்றால் எமது இளைஞர்கள் ஊடகத்துறையை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். அதற்காக இளைஞர்கள் முன்வர வேண்டிய தேவையும். தற்போது இருந்துள்ளது என்றால். இந்நிகழ்வில் பள்ளிவாசல் இமாம் மற்றும் பொது மக்கள் பல்கலைகழக மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

If Muslim youths spend time on internet,good for them.Not only against Islam and Muslims,there
ReplyDeleteare websites that promote discussion about all religions and how they came into existence and
whether it's worth killing a fellow human being in the name of any religion.All priests belonging
to all religions find themselves stuck when they face more sophisticated barrage of questions
thrown at them by both intelligent and sometimes atheist youths.Nobody needs to worry about
internet use if ready to face challenges.
sakotharere nangalum vita villai internet moolam islathai sakothara moli makkaluku theriyap patuthukirom face book il (peace islam) wanthu paruga awar kalathu santhekangal kelvikal poi oirasarangaluku theliwu kotuka muyalukirom but sinhala moli bayangal hathis kiranthangal internet il illaye anpathu perum kawalai
ReplyDelete