புதிய வாகனம் ஒன்றை வழங்குவதாக கூறி ஏமாற்றிவிட்டனர் - ஆதிவாசி தலைவர் கவலை
தமக்கு புதிய வாகனம் ஒன்றை வழங்குவதாக ஆதிவாசிகளை அதிகாரிகள் ஏமாற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலே எத்தன் முன்வைத்துள்ளார். புதிய வாகனம் தொடர்பாக கலாச்சார அமைச்சர் மற்றும் ஏனைய அதிகாரிகள் ஒன்றுக் கொன்று முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆதிவாசிகளின் தலைவரது போக்குவரத்திற்காக வாகனம் ஒன்றை பெற்றுத் தருவதாக கலாச்சார நடவடிக்கைகள் அமைச்சர் டீ பி ஏக்கநாயக்க 2012 ஆம் ஆண்டு உறுதியளித்திருந்தார். அது கடந்த ஒன்பதாம் திகதி வழங்கப்படுவதாக தெரிவித்த போதும், இதுவரை வழங்கப்படவில்லை என ஆதிவாசிகளின் தலைவர் ஊரி வரிகே வன்னிலே எத்தன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஆதிவாசிகளின் தினத்தன்று வெற்றிலை பாக்குக்காக 4 லட்ச ரூபா செலவிடப்பட்டதாக கலாச்சாரத்துறை அமைச்சர் தெரிவித்ததாக ஆதிவாசிகளின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், கேகாலையில் உள்ள தமது உறவினர் ஒருவரே வெற்றிலை பாக்கினை வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். sfm
இந்த ஏமாற்றம் ஆச்சிரியமான விடயம் இல்லை. தலைவன் ஏமாற்றும் போது குடிமக்கள் ஏமாறுவதில் ஆட்சோபனை இல்லையே!
ReplyDeleteமடையா புனித பூமியில் நடந்துதான்டா செல்லேவேண்டும் வேடுவனான உனக்கு கழுதை வாகனம் மிகப் பொருத்தம்
ReplyDelete