கொழும்பில் மஹிந்த ராஜபக்ஸ திறந்துவைத்தது சீனாவின் துறைமுகத்தையே..!
கொழும்பில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட துறைமுகம் கொழும்புத் துறைமுகமல்ல. அதனை சீனத் துறைமுகமென்றே கூற வேண்டும்.அதன் வருமானம் அனைத்தும் சீனாவையே போய் சேரும் என்று ஐ. தே. கட்சி எம்.பி ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார். நாட்டின் ஒவ்வொரு பிரஜையையும் அரசாங்கம் ரூபா 4 இலட்சம் கடனாளியாக்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
ராஜகிரியவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி. இதனைத் தெரிவித்தார். அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
கொழும்புத் துறைமுக நிர்மாணத்திற்கு அரசாங்கம் ஐந்து சதத்தையேனும் செலவழிக்கவில்லை. அனைத்தையும் சீனாவே செய்து முடித்தது. எனவே, இது கொழும்புத் துறைமுகமல்ல. சீனத் துறைமுகமென்றே அழைக்கப்பட வேண்டும்.
அது மட்டுமன்றி, இதன்மூலம் கிடைக்கும் வருமானம் சீனாவையே போய் சேரும்.அத்தோடு சீனத் தொழிலாளர்களும் இங்கு வந்து தொழில் புரியும் நிலைமை உருவாகும். இதனைத்தான் கோலாகலமாக திறந்து வைத்து கண்காட்சி நடத்தப்பட்டு மக்களை அரசாங்கம் ஏமாற்றியது. vi


Post a Comment