Header Ads



ஈரானில் ஆட்சிக் கவிழ்ப்பு - தொடர்பு இருப்பதை சி.ஐ.ஏ. முதல் முறையாக ஒப்புக்கொண்டது.

ஈரானில் 1953ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் தனக்குத் தொடர்பு இருப்பதை அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.

ஈரானில் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக விளங்கிய முகமது மொசாடேக்கின் ஆட்சி 1953ஆம் ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டது.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் தனக்குத் தொடர்பு இருந்ததை சிஐஏ ஒப்புக் கொண்டுள்ளது ரகசிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த ஆவணங்களை அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆவணக் காப்பக ஆய்வு மையம் திங்கள்கிழமை வெளியிட்டது. இந்த ஆவணங்களில், ஈரான் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் பிரிட்டனும் அமெரிக்காவும் எவ்வாறு சதி செய்தன என்ற விவரம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைப்படி சிஐஏ இந்த முயற்சியை மேற்கொண்டதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. அமெரிக்காவும் வேசைகளின் நாடுதானே இதில் வெளிப்படையாக வேற சொல்லவேண்டுமா? உலகில் நடக்கும் பயங்கரவாதங்களுக்கெல்லாம் சிலவேசைகளின் புதல்வர்கள் நாடு உள்ளன அவைகளின் பொண்ணைத்தனமான வியாபாரம்தான் இன்றைய பிரச்சினை. முடிவுக்கு வந்து முஸ்லிம்கள் உமக்கு ஆப்பு வைக்கும் நாட்கள் வரும் வரை ஆடட்டும் முஸ்லிம்களுக்கும் கண் திறக்கவேண்டுமல்லவா?

    ReplyDelete

Powered by Blogger.