Header Ads



பள்ளிவாசல் தாக்குதலை பொலிஸார் தடுத்திருக்கலாம் - அமைச்சர் றிசாத்

கிரணட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதலை பொலிஸார் நினைத்திருந்தால் தடுத்து நிறுத்தியிருக்கலாமென அமைச்சர் றிசாத் பதியுதீன் குறிப்பிட்டார். அவர் இதுதொடர்பில் மேலும் கூறுகையில்,

இன்று ஞாயிற்றுக்கிழமை, 11 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் நான் பள்ளிவாசலுக்கு சென்றேன். அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இனவாத கும்பலினால் தாக்கப்பட்ட பள்ளிவாசலை பார்க்கையில் வேதனையாக உள்ளது. உண்மையில் பொலிஸார் இங்கு கண்டிக்கப்பட வேண்டிவர்கள் மாத்திரமல்ல, தண்டிக்கப்பட வேண்டியவர்களும் ஆவர்.

பொலிஸார்  நினைத்திருந்தால் இனவாத கும்பலின் பள்ளிவாசல் தாக்குதலை தடுத்து நிறுத்தியிருக்கலாம். பொலிஸார் தமது கடமையிலிருந்து தவறியுள்ளனர். பொலிஸ்மா அதிபர் இளங்ககோனுடன் இதுதொடர்பில் எனது அதிருப்தியை வெளியிட்டேன். பொலிஸாருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளும் ஆதாரங்கள்கூட கிடைக்கப்பெற்றுள்ளன.

பொலிஸாரில் முஸ்லிம் நம்பிக்கை இழப்பது பாரிய பின்வளைவுகளுக்கு வழிவகுக்குமென பொலிஸ் மா அதிபரிடம் சுட்டிக்காட்டினேன். இதுதொடர்பில் அரசாங்கத் தரப்பும், பாதுகாப்புத் தரப்பு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றார்.

4 comments:

  1. ஒளுங்கான முஸ்லிம் என்றால் இனியும் அரசுக்கும் குடும்பத்துக்கும் காட்டிக்கொடுக்காமல் உடனடியாக வெளியேற வேண்டும். சொரணை கெட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் நீங்கள் எல்லோரும்..

    ReplyDelete
  2. Appedi nadevedikkei edukkadi ????????????????????

    ReplyDelete
  3. என்னமோ பெரிசா கிழிச்சதா சொன்னீங்க எல்லாம் எலெக்சன் பேக்காட்டலா?

    ReplyDelete
  4. பொலிசார்தான் அரசாங்கம் அரசாங்கம் தான் பொலிசார்.முதலில் பாதுகாப்பு செயலாளருடன் பேசுங்கள் அவர்தானே பொறுப்பு தாரி

    ReplyDelete

Powered by Blogger.