Header Ads



அக்கரைப்பற்றில் வித்தியாசமான முறையில் பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டு (படங்கள்)


(ஏ.ஜி.ஏ.கபூர்)

தேயட்ட கிருள வேலைத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட முப்பத்தியேழு இலட்சம் (37 லட்சம்) ருபா நிதியின் முலம் அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி ஜும்ஆ பள்ளி புனர்நிர்மானம் செய்யப்படவுள்ளது. ஜும்ஆப் பள்ளி புனரமைப்பு வேலைகளை (16.08.2013) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.றாஸீக், பிரதேச செயலாளர் எம்.வை சலீம், உதவிப் பிரதேச செயலாளர் எம். எஸ்.எம்.றஸ்ஸான், மௌலவி எம்.ஏ.அப்துல் லெத்தீப், பட்டியடிப்பிட்டி ஜும்ஆப் பள்ளி தலைவர் எம்.ஏ.அப்துல் மஜீத் மற்றும் மௌலவிகள் ஊர்ப் பிரமுகர்களுடன் இணைந்து முதல்கற்களை வைத்துப் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைப்பதையும் மௌலவி எம்.ஏ.அப்துல் லெத்தீப் அவர்கள் துஆப் பிரார்த்தனை செய்வதையும் படத்தில் காணலாம். ஒரு துண்டில் அடிக்கல் கற்களை வைத்து, அந்த துண்டை பிரமுகர்கள் எல்லோரும் சேர்ந்து பிடித்து அடிக்கல்லை நாட்டினர்.



3 comments:

  1. இதத்தான் சொல்லுறது அடிக்கல் கொட்டுரெண்டு.

    ReplyDelete
  2. திருந்தமாட்டன்கள் பித்தம் தலைக்கேறிவிட்டது....

    ReplyDelete
  3. அக்கரைபப்பற்ற பெரிய பள்ளியும் புனருத்தாணம் என்டு தொடங்க ஏதொ மக்களின் அவசரத்தால் ஓரளவுக்கு வேல நடக்குத. நடக்கும். அக்கரைபப்பற்று நகரப்பள்ளியும் புனருத்தாணம் என்டு தொடங்கி என்னெமோஎல்லாம் சொல்லி காசும் ஒன்டுபடுத்தி அரகொறையில கெடக்கு,அடுத்த தேர்தல் வரைக்கும் இழுபடும். அத முடிக்க வாக்கு கேள்படும், வாக்கும் போடுபடும், ஆனா பள்ளிவேல மட்டும் முடியுமா இருந்து பாப்பம். இப்படித்தான் அக்கரைப்பற்று புதுப்பள்ளி கட்டியதிலும் எல்லாரும் அரசியல் செய்த.......‌

    ReplyDelete

Powered by Blogger.