Header Ads



பொலிஸ் சேவையில் முதலாவது உயிர்தியாகம் செய்த துவான் ஜாபரின் நினைவாக முத்திரை வெளியிட கோரிக்கை

(JM.Hafeez)

இலங்கை பொலீஸ் திணைக்கள வரலாற்றில் முதலாவது உயிர்தியாகம் செய்த துவான் ஜாபர் நினைவாகவே பொலீஸ் நினைவு தினம் கொண்டாடப்பட்டு வருகிற போதும் அவரது தியாகத்தை கௌரவித்து புதிய தலை முறையினருக்கு எடுத்துக் காட்டும் வகையில் நினைவு முத்திரை ஒன்று வெளியிடப்படவேண்டும் என்று கண்டி மலாய் சங்கம் வேண்டு கோள் விடுத்துள்ளது.

இலங்கையின் ரொபின்வூட் என வர்ணிக்கப்பட்டவனும் உதுமான் கந்தையில் மறைந்து பல்வேறு வீர தீரச் செயல்களைப் புரிந்து வந்த சூர சரதியல் என்பவனைக் கைது செய்யச் சென்ற சமயமே 1864ம் ஆண்டு மாவன்னையில் வைத்து சரதியலின் துப்பாக்கிச் சூட்டிற்கு பொலீஸ் காண்ஸ்டபிலான துவான் ஜாபர் இலக்கானார்.

அக்காலப் பகுதியில் ஏகாதிபத்திய வாதிகளால் பயங்கரவாதி என இனம் காணப்பட்ட போதும் சுதேசிகளால் வீடுதலை வீரன் என வர்ணிக்கப்பட்ட சரதியல், உத்துமான் கந்தை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மலைக்குன்றில் தனது சகாக்களுடன் மறைந்திருந்து கண்டி, கொழும்பு பிரதான வீதியில் பல்வேறு வழிப்பறிக் கொள்ளைகளிலும் ஈடுபட்டும் பிரித்தானிய அரசிற்குச் சொந்தமான களஞ்சியங்களை உடைத்தும் வரிய மக்களுக்கு உதவி செய்ததாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.

மேற்படி சரதியலைக் கைது செய்ய அல்லது சுட்டுக்கொள்ள வேண்டும் என பிரித்தானியாவின் இலங்கைக்கான ஆல்பதி நாயகம் கங்கனம் கட்டிக் கொண்டிருந்த சமயமே அவர் உயிர் நீத்தார். இது தொடர்பாக மாவனல்iயில் ஒரு நினைவுத்தூபி நடப்பட்டு அது கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இவ் வரலாறுகளை நினைவு படுத்தும் காணப்பட்ட போதும் சுதேசிகளால் வீடுதலை வீரன் என வர்ணிக்கப்பட்ட சரதியல், உத்துமான் கந்தை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மலைக்குன்றில் தனது சகாக்களுடன் மறைந்திருந்து கண்டி, கொழும்பு பிரதான வீதியில் பல்வேறு வழிப்பறிக் கொள்ளைகளிலும் ஈடுபட்டும் பிரித்தானிய அரசிற்குச் சொந்தமான கலஞ்சியங்களை உடைத்தும் வரிய மக்களுக்கு உதவி செய்ததாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.

மேற்படி சரதியலைக் கைது செய்ய அல்லது சுட்டுக் கொள்ள வேண்டும் என பிரித்தானியாவின் இலங்கைக் கான ஆல்பதி நாயகம் கங்கனம் கட்டிக் கொண்டிருந்த சமயமே அவர் உயிர் நீத்தார். இது தொடர்பாக மாவனல்iயில் ஒரு நினைவுத்தூபி நடப்பட்டு அது கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இவ் வரலாறுகளை நினைவு படுத்தும் வகையில் அவருக்கு ஒரு நினைவு முத்திரை வெளியிட வேண்டு மென கண்டி மலாய் சங்கம் தனது வருடாந்தக் கூட்டத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

மேற்படி சங்கம் ஏகமனதாக நிறைவேற்றி தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அகுப்பிவைத்துள்ளது.

கண்டி அல் இம்ரான் சர்வதேசப் பாடசாலை மண்டபத்தின் கண்டி மலாய் சங்க்தின் 45 வது வருடாந்தக் கூட்டம் அதன் தலைவர் பைசல் டூல் தலைமையில் இடம் பெற்றது. அதன் போது சங்கத்தின் நிறைவேற்றுக் குழு அங்கத்தவரான நிகார் அஸ்மான் மேற்படி பிரேரணையை முன் மொழிந்து உரையாற்றினார்.

நடப்பு வருட நிர்வாக அங்கத்தவர்களாக பெண்களையே தெரிவு செய்ய வேண்டும் என்ற அபிப்பிராயத்தை ஏற்றுக் கொண்ட சபை பின்வருவோரைத் தெரிவு செய்தது. தலைவர்- திருமதி. டொரின் பக்ஸ், செயலாளர்-திருமதி. மும்தாஜ் சொன்டோன். பொருளாலர்- திருமதி நளீபா மொகமட் ஆகியோர் தெரிவாகினர்.

No comments

Powered by Blogger.