Header Ads



அல்குர்ஆன் மதராஸாவை தீவிரவாத பயிற்சி முகாமென அமெரிக்கா பிரகடனம்


பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் கஞ்ச் மதரசா என்ற கல்விக்கூடம் இயங்கி வருகிறது. இந்த மதராசாவின் தலைவரான ஷைக் அமீனுல்லாவுக்கு இயக்கங்களான அல்-கொய்தா மற்றும் தலிபான் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புள்ளதால் இவரையும் தீவிரவாதியாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்க அரசு கடந்த 2009-ல் அறிவித்தது.

இவரது தலைமையிலான கஞ்ச் மதரசாவில் மதக்கல்வி என்ற பெயரில் தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்டதால் இந்த கல்விக் கூடத்தை தீவிரவாத பயிற்சி மையமாக அமெரிக்க அரசு நேற்று அறிவித்தது.

மேலும், இந்த மதரசாவின் மீது பொருளாதார தடையையும் விதித்துள்ள அமெரிக்கா, தங்களது ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மேற்படி மதரசாவின் சொத்துகள் மற்றும் வங்கி சேமிப்புகளையும் முடக்க உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள மதரசா ஒன்றை தீவிரவாத பயிற்சி முகாம் என அமெரிக்கா அறிவித்துள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. உலகமகா கண்டுபிடிப்பு

    ReplyDelete
  2. பாகிஸ்தானில் உள்ள மதரசாவை தீவிரவாத மத்தரசாவென்று அறிவித்து பொருளாதார தடைவிதிக்க உனக்கென்ன பைத்தியமோ அல்லது விசரோ? bloody fucking stupid America.

    ReplyDelete

Powered by Blogger.