Header Ads



முஸ்லிம் பிரநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு நாம் பாடுபாட வேண்டும் - ஹலீம் எம்.பி.

(ஜே.எம்.ஹாபீஸ்)

ஆஸாத் சாலியை நான் தீவிர வாதி என்று சொல்லவில்லை. சில பேரின வாத மக்கள் அவரை அடிப்படைவாதி என்று நினைக்கின்றனர் என்றுதான் கூறினேன் என் கண்டி மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார். (19.8.2013) கண்டி அவரது காரியாலயத்தில் கட்சி ஆதரவாளர்களுக்கு மத்தியில் உரயாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

மத்திய மாகாண சபையின் கண்டி மாவட்ட ஐ.தே.க. வேட்பாளர் ஆஸாத் சாலி தொடர்பாக சில ஊடகங்களிலும் இணையங்களிலும் என்னை சம்பந்தப் படுத்தி வெளியான செய்திகளில் உண்மைத் தன்மை இல்லை என்பதை கண்டி மாவட்ட முஸ்லீம் வாக்காளர்களுக்குத் தெரிவிக்க விரும்பு கிறேன். அஸாத் சாலி ஒரு தீவிரவாதி என்று நான் தெரிவித்ததாக ஒரு செய்தியும், நான் பாராளுமன்றத்திலோ அல்லது ஏனைய பொது இடங்களிலோ வாய் திறப்பதில்லை என்பவைகளே அண்மைகால மாக என் மீது சுமத்தப்படும்; முக்கிய இரு விமரிசனங்களாகும்.

ஆஸாத் சாலியை நான் ஒரு தீவிரவாதி என்று சொல்லவில்லை. ஆனால் பேரினவாத மக்கள் அவரை ஒரு அடிப்படைவாதியாகச் சித்தரிக்கின்றனர். எனவே பேரின வாதிகளின் விமரிசனத்திற்கும் நான் கூறியதாகக் கூறப் படும் விடயத்திற்கும் தொடர்பு இல்லை. ஆனால் கண்டி மாவட்டத்தில் ஏழு முஸ்லிம்கள் ஐ.தே.க. சார்பாக போட்டியிடுவது தொடர்பாக நான் வெளியிட்ட சில கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன. போட்டிடுபவர்களது எண்ணிக்கை மட்டுப் படுத்தி போட்டியாளர்களது வெற்றியை உறுதிப்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது.

ஏனெனில் ஐ.தே.க.யிற்கு வாக்களிக்கும் பேரின சமுகத்தின் விகிதம் குறையும் போது எமது அங்கத்தவர்களுக்கிடையே போட்டி அதிகரிக்கும் என்பதனாலே நான் எண்ணிக்கையைக் குறைக்கும்படி கருத்து வெளியிட்டேன்.

தனிப்பட்ட முறையில் ஆஸாத் சாலி எனது நண்பர். எனக்கு பல வழிகளில் உதவி செய்துள்ளார். சிங்கள முஸ்லீம் உறவு பாதிக்காத வகையில் கண்டி மாவட்டத்தில் எமது பிரதி நிதித்துவத்தை அவர் மூலம் அதிகரிக்க முடியுமாயின் அவரை நான் எந்த வகையிலும் விமர்சிக்க முடியாது.

இதுகாலவரை நான் போட்டி இட்ட எந்த ஒரு தேர்தலிலும் தோல்வி அடைந்தது கிடையாது. மத்திய மாகாண சபை உருவான காலம் முதல் (1988) 2000 ஆண்டு வரை மத்திய மாகாண சபையில் அங்கத்தவராகவும் மாகாண அமைச்சராகவும் இருந்து வந்தேன். அதன் பின் கடந்த நான்கு பாராளுமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளேன். எனது வெற்றிக்கு முஸ்லீம்களது அமோக ஆதரவும் சிங்கள தமிழ் மக்களது சுமாரான ஆதரவும் உண்டு. இவர்களுடன் நான் இருக்காவிட்டால் என்னுடன் அவர்களும் இருக்க மாட்டார்கள்.

துர்ரதிஷ்ட வசமாக நான் பாராளுமன்றம் சென்ற காலம் முதல் இன்று வரை எதிர் கட்சியிலே இருக்கிறேன். இதன் காரணமாக மற்றவர்கள் நினைப்து போல் நான் கட்சியை விட்டுத்தாவி பொது சேவை செய்ய முடியாது. நான் கட்சிக்கு விசுவாசமானவன்.

அது மட்டுமல்ல எனது அரசியல் குருவான எனது மாமனாரான ஏ.சீ.எஸ்.ஹமீட் அவர்களது வழிகாட்டலின்படி பொதுமக்களை ஆவேசமடையச் செய்யும் பேச்சுக்களில் நான் நம்பிக்கை வைத்தது கிடையாது.  ஆனால் மர்ஹூம் ஏ.சி.எஸ். ஹமீட் காலம் முதல் நாம் மறைமுகமாக சமூகத்திற்கு அதிக சேவை புரிந்துள்ளோம். அவற்றை நாம் பகிரங்கப் படுத்துவது கிடையாது. அப்படி பகிரங்கப் படுத்துவதானால் ஏற்பட்ட விளைவுகளை அறியும் போது அது ஆரசியலில் சாணக்கியம் இல்லை என்பதை உணர்வீர்கள்.

உதாரணமாக மாணவர்களுக்கு வெளிநாட்டுப் புலமைப் பரிசில் வழங்கினோம். இதனால் இன்று எமது சமூகத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் நன்மையடைந்துள்ளனர். ஆனால் அவற்றை சிலர் பகிரங்கப்படுத்தியதன் காரணமாக இன்று அப்படியான சூழல் இல்லாமல் போனது மட்டுமல்ல அப்படி கல்வி பயின்றவர்களும் சில சிக்கள்களை எதிர் நோக்கியுள்ளனர்.

ஆவேசமாகப் பேசி மக்களை கவரமுடியும். ஆனால் அதை தவிர்ந்து நிதானமாகச் செயல்பட்டு தீர்வு காண்பதையே நான் விரும்புகிறேன். இப்போது பிரச்சினை தீர்ந்து விட்டதாகச் சிலர் கூறலாம். ஆனால் அப்படி ஏதும் தீர்ந்து விட வில்லை. தினம் தினம் முஸ்லிம்கள் மீது புதிதாகப் பிரச்சினைகள் உருவாக்கப் படுகின்றன.

ஒரு சந்தர்பத்தில் பாராளுமன்ற அங்கத்தவர் கபீர் ஹாசிம், மேல் மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜியார், மேல்மாகாண சபை அங்கத்தவர் முஜீபுர் றஹ்மான் மற்றும் கொழும்பு மேயர் முஸம்மில் ஆகியோர்களுடன் நானும் இணைந்து பாராளுமன்றக்கட்டிடத்தில் பொது பலசேனா அங்கத்தவர்களுடன் ஒரு பேச்சு வார்த்தை நடத்தி சமரசத்திற்கு முயற்சித்தோம். இவற்றை எல்லாம் வெளியில் கூறி விளம்பரம் தேடி அது நடைபெறாமல் தடையாகுமாயின் அதனால் பயன் இல்லாது போகும். எனவே அப்படியான நேரங்களில் நாம் அமைதியாக எமது பணியை முன் எடுப்பதுண்டு.

எமது சமூகம் பாதிக்காத வாறு சமயோசிதமான முடிவு எடுப்பதே எனது நோக்கமே தவிர ஆவேச வார்த்தைகளைக் கூறி எனக்கு விளம்பரம் தேடுவது அல்ல. அதுமட்டுமல்ல நான் எந்த ஒரு அரசியல்வாதியையும் பகைத்துக் கொண்டதில்லை. நான் எல்லேருடனும்  நற்பாகப் பழகுபவன்.

எனவே ஆஸாத் சாலி கண்டி மாவட்டத்தில் ஐ.தே.க. சார்பாகப் போட்டி இட்டு கட்சிக்கு கனிசமான ஆதரவைப் பெற்றுத் தருவாராயின் அது பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. முஸ்லிம்கள்  நன்கு திட்டமிட்டு எமது வாக்குகளை சிதரடிக்காது முறையாகப் பகிர்ந்து எமது பிரதி நிதித்துவத்தை அதிகரிப்பதற்கு நாம் இத்தேர்தலில் பாடுபாட வேண்டும். அதை விட்டு சில  ஊடகங்கள் கூறுவது போல் நாம் ஒருவரை ஒருவர் எதிர்த்துக் கொள்ள எமக்கு எத்தேவையும் இல்லை என்றார்

3 comments:

  1. முஸ்லிம் சமூகத்திற்காகத் துணிந்து குரல் கொடுக்கும் ஆஸாத் சாலி அவர்களை நாம் அனைவரும் அரவணைத்து ஆதரிக்க வேண்டும் என்பது காலத்தின் தேவையாகும்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. Br. Azath Saih is the voice of Muslims. He sould be give all supports, also he does not do politics for perks and privillage.

    ReplyDelete

Powered by Blogger.