Header Ads



தெற்காசிய நாடுகளின் வர்த்தக அமைச்சர்களின் தலைமை பதவி றிசாத் பதியுதீனிடம்


(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

தெற்காசிய நாடுகளின் வர்த்தக அமைச்சர்களின் வருடாந்த மாநாடு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு சினமன்ட் கிரேண்ட் ஹோட்டலில் இடம் பெற்ற போது,2013-2014 ஆம் ஆண்டுக்கான அமைப்பின் தலைமை பதவி இம்முறை இலங்கையின் வர்த்தக ,கைத்தொழில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான நாடுகளின் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமானது.இதில் இலங்கை இந்தியா ,பூட்டான்,நேபாளம் ,மாலைத்தீவு,பங்களாதேஷ்,பாகிஸ்தான்  ஆகிய நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி சூழ்; நிலையில் இலங்கைக்கு இந்த தலைமைப்பதவி கிடைத்துள்ளது.அதே வேளை தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையின் வர்த்தக,கைத்தொழில் அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராபஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பினை வழங்கும் அமைச்சாக கைத்தொழில்,மற்றும் வணிகத்துறை அமைச்சு விளங்குகின்றது.

தெற்காசிய வர்த்தக அமைச்சர்களின் வரிசையில் இலங்கைக்கு அதனது தலைமைத்துவம் கிடைக்கப் பெற்றுள்ளதுடன்,எதிர்கால இலங்கையின் வர்த்தக மேபாடுகளுக்கு இதுபெரும் பலமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

Powered by Blogger.