Header Ads



கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் - பொலிஸ்மா அதிபருக்கு ஆதாரங்களுடன் கடிதம்

கிரான்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற மோதல் நிலையின்போது பொலிஸாரின் அலட்சியப்போக்கு தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிசாத் பதியூதின் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

பொலிஸார் அலட்சியமாக நடந்து கொண்டதற்கான பாதுகாப்பு கமரா காட்சி ஆதரம் அடங்கிய ´டிவிடி´ இருவட்டு ஒன்றினையும் இணைத்து ரிசாத் பதியூதின் இக்கடிதத்தை அனுப்பியுள்ளார்.

´பொலிஸார் மக்களை பாதுகாக்க தவறியதை கிரான்ட்பாஸ் மக்கள் நேரடியாக அவதானித்துள்ளனர்.  அத்துடன், தாக்குதல் நடத்த வந்தவர்களுடன் பொலிஸார் இணைந்து செயற்பட்டதாக முஸ்லிம் மக்கள் கருதுகின்றனர்.

அரசாங்க அமைச்சர் என்ற அடிப்படையில் நான் இது குறித்து கவலை அடைகிறேன். பொலிஸாருக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடாத்தப்பட வேண்டும்.  மசூதி குண்டர்களால் தாக்கப்பட்ட போது பொலிஸார் அதனை பார்த்துக் கொண்டிருந்ததை மக்கள் அவதானித்துள்ளனர்.

குற்றவாளிகளை தண்டிக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவல்ல. இந்நிலை தொடர்ந்தால் நாட்டில் இனவாதத்தை தூண்டிவிடத் துடிக்கும் நபர்களுக்கு அது வாய்ப்பாகவும் ஊக்கமாகவும் அமைந்துவிடும்.

எனவே கிரான்ட்பாஸ் சம்பவத்தில் கடமையை செய்யத் தவறிய பொலிஸார் மீது உடன் விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். அத்துடன் தாக்குதல் நடாத்தியவர்களை இனங்கண்டு தண்டிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

உங்களுக்கு மேலதிக தகவல் தேவைப்படுமாயின் தயவு செய்து தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளவும். நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் உங்கள் நடவடிக்கைக்காக காத்திருக்கின்றோம்.

இவ்வாறு ரிசாத் பதியூதின் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

5 comments:

  1. mr.rishad nothing will happend this is political game

    ReplyDelete
  2. Oh!.... avarukku innum vishayam theriyaathu pola

    ReplyDelete
  3. MR.RISHARD IS IS BEST POLITISION IIN THIS SITUATION.HE DONT WANT PLAY POLITICAL GAME.PROMIS HE IS NOW SRI LANKA BEST AND RELIGIOUS POLITISION.NOT LIKE OTHERS.

    ReplyDelete
  4. நீங்கள் மட்டும்தான் உண்மையாக ஓரளவுக்கு நடக்குரிங்க சார் ... அல்லாஹ் உங்களுக்கு இன்னும் இன்னும் பறக்கத் செய்வான் . உங்களின் முயற்சி பாராட்ட தக்கது சார்.

    ReplyDelete
  5. Best Of Luck For Our Leader

    ReplyDelete

Powered by Blogger.