Header Ads



மஹிந்தவின் இப்தாரில் சுவாரசிய சம்பவங்கள் - முஸ்லிம் அரசியல்வாதிகள் திரண்டுவந்து பங்கேற்பு

(J.M.Hafeez, Mohamed Asik, நளீர், இக்பால் அலி)

ஆசியாவின் வியற்பிற்குறிய நாடாக இலங்கையை மாற்றும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிய வேண்டுமென்று கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து முஸ்லிம்கள் பிராத்தனை புரிந்தனர்.

(3.8.2013) இன்று கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம் பெற்ற நோன்பு திறக்கும் 'இப்தார்' நிகழ்வின் போது கண்டி சிட்டி ஜம்மியத்துல் உலமா சபைத்தலைவர் மௌலவி எம்.எப்.பஸ்லுல் நடத்திய துவாப் பிராத்தனையின்போது இவ்வாறு பிராத்தனை புரிந்தார்.

அங்கு அவர் பிராத்தனைக்கு முன்  உரையாற்றும் போது தெரிவித்ததாவது,

தான் தபால் நிலையத்திற்கு சிவ தினங்களுக்கு முன் ஒரு கடிதத்தை பதிவுத் தபாலில் இடச்சென்ற சமயம் அதற்கு 55 ரூபா முத்திரை ஒட்டும்படி  ஒரு பெண் ஊழியர் தெரிவித்து விட்டு பின்னர் தமது மேலதிகாரியுடன் கதைத்து விட்டு 'தாங்கள் சமய ஸ்தாபனம் ஒன்றைச் சேர்ந்தவரல்லவா? நீங்கள் உலமா சபையைச் சேர்தவரே. எனவே சமய நிறுவனங்களுக்குறிய கட்டணமான 30 ரூபாயைச் செலுத்தினால் போதும்' என்று இரண்டு பெண் பௌத்த பெண் மணிகளிலும் வேண்டிக் கொண்ட சந்தர்பத்தை நினைவு கூர்ந்தார். இது ஜனாதிபதி காட்டி உள்ள வழிமுறை என்றும் இவ்வாறே இலங்கையில் சகலருக்கும் சம அந்தஸ்த்து வழங்கப் படுவதாகவும் தெரிவித்தார்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் யுத்த வெற்றியை அடுத்து உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் 'எனக்கு முதலாவதும் தாய்நாடு! இரண்டாவும் தாய்நாடு! மூன்றாவதும் தாய்நாடு!' என்று கூறிய வார்த்தை எம் எல்லோரையும் புல்லரிக்கச் செய்தது என்பதையும் நினைவு படுத்தினார்.
அதேபோல் மௌலவி எச்.சலாகுதீனின் மறைவின் பொழுது முதலாவது கிடைக்கப் பெற்ற அனுதாபச் செய்தி ஜனாதிபதியின்  அனுதாபச் செய்தியாக இருந்தது. இவ்வாறு பல வழிகளிலும் ஜனாதிபதி எம்மை வழி நடத்துகின்றார். முன்மாதரியாக இருக்கிறார்.

அது மட்டுமல்ல ஒரு நோன்பாளிக்கு எவன் நோன்பு திறக்க உதவுகிறானோ அவனுக்கு மறுமையில் பல்வேறு கூலிகளை அல்லாஹ் வைத்துல்லான். 'ரைஹான்' என்ற வீ.ஐ.பி. வாசல் மூலம் சுவர்க்த்தை சென்றடையும் மக்களுக்கு உணவளிக்கும் பாக்கியத்தை நல்கிய ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி கிடைக்க தாம் பிராத்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எகிப்தைச் சேர்ந்த காரி ஹாலிக் பின் மிசிரி ன் கிராத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூவின மக்களும், பிரதமர் டி.எம்.ஜயரத்ன, அமைச்சர்களான ரவூப் ஹகீம், பௌசி, பசீர் சேகுதாவூத், பிரதி அமைச்சர்களான ஹிஸ்புல்லாஹ், மற்றும் அப்துல்காதர், பாராளுமன்ற அங்கத்தவர்களான ஏ.எச்.எம்.அஸ்வர், லொகான் ரத்வத்தை, முன்னாள் மத்திய மகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா, முஸ்லிம் சமய விவகார திணைக்களப் பணிப்பாளர் முஹமட் சமீல், ஜனாதிபதியின் முஸ்லிம் விவகார ஆலோசகர் அஸ்லம் மௌலனா உற்பட இன்னும் பலரும், மாகாண சபை அங்கத்தவர்கள், பிரதேச சபை அங்கத்தவர்கள் அரசியல் பிரமுகர்கள் எனப் பலர் இதில் கலந்து கொண்டனர். அங்கு இராப்போசனமும் வழங்கப்பட்டது.

நிகழ்வுக்கு வருகை தந்திருந்த அஸ்வர் ஹாஜியாரிடம் தமிழ்ப் பெண்களை விமர்சித்தது தொடர்பாக வினவிய போது; 30 வருட காலமாக ஒடுங்கியிருந்த தமிழ்ப் பெண்கள் இன்று பூவும், பொட்டுமாக சுதந்திரமாக நடமாடும் சுமுகமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளமை பற்றியே தான் கூறியதாகவும், தான் ஒரு கருத்தைக் கூறும் போது தமிழ் கட்சிகளும், ஊடகங்களும் அதனை எப்பொழுதும் திரிபு படுத்துவதாகக் கூறிய அவர் மேலும், இது குறித்து மறுப்பறிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேரடி அஞ்சல் செய்தது.

32 comments:

  1. M S Faslul

    What you are trying to tell us.
    will president (non Muslim) get various rewards hereafter?

    ReplyDelete
  2. This maulavi dua Allah will not accept because he is kafeer who attend this program they are not muslims because mahinda is kafeer how can they joint with this munafiqs this not ifthar this buddithar Asver shameless man with mahinda knowledge 17 mosque destroyed we Muslims not support any more for mahida government this program drama show who attend this ifthar all of them rubbish people

    ReplyDelete
  3. ILANGKAI MUSLIMKAL PORUMAIYAAGA IRUKKIRAARKAL ENRU SOLLIKKOLVTHU POI AVARKAL PAYATTHIL IRUKKIRAARKAL ENBATHUTHAAN ENBATHU ITHAN MOOLAM DELIVAAGIRATHU..IN NIGALVIL KALANTHU KONDAVARKAL MEENDUM EEMAAN KOLLA VENDUM. JANATTHIBATHI SORKKAM POVAAR ENRU THUVAA VERU KETTATHUPOL ATHATKU AAMEENUM SOLLI IRUPPAARKAL INTHA KUFFUR KOODDAM....

    ReplyDelete
  4. பள்ளிவாசல்களை மூடி உடைத்து அட்டகாசம் செய்யும் குழுவினருக்கு மறைமுக ஆதரவு தரும் ஒரு விசுவாசம் கொள்ளாதவருக்கு சுவர்க்கம் வேண்டி பிராத்தித்த மௌலவி முகஸ்துதிக்காக எதுவும் செய்வாரோ ????

    ReplyDelete
  5. முடியல்ல இவனுகளின் கூத்த பார்க்க

    ReplyDelete
  6. MUSLIMKALIN PIRACHCHINAIKALAI SOLLA SANTARPAM KIDAIKKUM POTELLAM "MAHINTA MANAKIBU"OTI NALLA PERU WANGKUREENGKALE..?KONJAMAWATU UNGKALUKKU EMANIYA UNARWU WENDAMA MOULAVI AWARKALE? ITE SANTARPAM TAMIL TALAMAIKALUKKU KIDAITTIRUNTAL ATAI AWARKAL PAYANPADUTTUM VITAME WERAKA IRUNTIRUKKUM..UNGKALAI PONTAWARKALAI NINAITTALE ARUWARUPPAKA IRUKKIRATU.AZWARAI HAJIYAAR EANTU SOLLI ANTA PUNITA PATTATTITKU TAYAWU SAITU KALANGKAM EATPADUTTA WENDAM.ATU KOMAALI AZWAR

    ReplyDelete
  7. Useless fellows. These Moulavis will talk big about religion and society, but in front politicians, they will praise them. These are features of a Munafiq

    ReplyDelete
  8. APPADIYAANAAL M.F PASLU KUTRUPPADI MAHINDE SUVARKKAM SELVAAR APPADIYA....

    ReplyDelete
  9. All have gone to beg from the President, and not to cut their name list from the goverment.

    ReplyDelete
  10. எமது முக்ஷ்லிம் சமூகம் ஜும்மா தொழுவதட்கு அரசான்கத்தை கெட்க வென்டிய சூழ் நிலை எட்பட்டு விட்டது. அப்படியானால் எல்லாம் வல்ல அல்லாஹ் உக்கல் சமூகத்திட்கு எவ்வாரு வெட்டி யை கொடுப்பான். முடிந்தால் அடுத்தஜும்மா வை சரி அல்லாஹ் வுக்கு பயந்து மஹியன்கனையில் தொழுகை நடதுன்க்ல். முடிவு அல்லாஹ் வின் நாட்டப்படி நடக்கும்.

    ReplyDelete
  11. 30/= stamp patri perithaip peysum aalim perumathi koora iyalaatha pallikal moodap paduwathai konjam sollik kaatawillaiye.janathipathi ifthar aerpaadu saiyum pothu dehuwala aththiyadi palliwaasalai therarkal kulumi wanthu mooda cholliyathu LATERST NEWS.

    ReplyDelete
  12. ஒரு இணைவைப்பளனுக்கு எப்படி சுவர்க்க வாசல் திறக்கப் படும்..?

    ReplyDelete
  13. இவ்வாறே இலங்கையில் எல்லோருக்கும் சமஅந்தஸ்த்து வழங்கப்படுவதாக.... என்னாது சம அந்தஸ்த்தா புரியல? ஏதேனும் பார்டியா? தூக்க கலக்கத்துல வாசிச்சிட்டேனோ! இப்படியே துதிபாடி துதிபாடியே உசுப்பேத்துங்க....

    ReplyDelete
  14. enga ellarukkum vilanguthu..but ketttal ulama sapai inaggalukku idayil pirachanai varamal irukkka ippadi pesukirath enparhal..ivwnellam ulama sapai thalaivar..

    ReplyDelete
  15. முஸ்லிம்களுக்கு என உறுப்படியான ஒரு அரசியல் தலமை இல்லாதபோதும் ஜம்மிய்யதுல் உலமாவின் முன்னெடுப்புக்களும், அரசுதரப்பில் இருந்து யாருமே தட்டிக்கேக்காமல் இருக்கும் இந்த சந்தர்ப்பத்திலும் இவ்வாரான சம்பவங்கள் மிகவும் இருதரப்பாரிடமும் நல்லவித தாக்கத்தையே உண்டுபன்னும். மறைமுகமாக சூல்ச்சிகள் செய்வதை சூல்ச்சிகாரர்களுக்கெல்லாம் சூல்ச்சிகாரனான அல்லாஹ்வால் மாத்திரமே எதையும் செய்ய முடியும். ஏர்கனவே தோற்றுப்போன இனவாதிகள் நாட்டை பிலவுபடுத்த அல்லது முஸ்லிம் சமூகத்தையும் சிங்களசமூகத்தையும் மோதவிட்டு பழிதீர்த்துக்கொள்ள வெளிநாட்டிலிருந்தும் நோர்வே ஊடாக இயங்கிக்கொண்டிருக்கும் தீய சக்திகளுக்கே நமது மோதல்கள் வெற்றிடைய இருக்கின்றன என்பது ஜம்மிய்யத்துல் உலமாவும் ஜனாதிபதியும் நன்கு விளங்கிக்கொண்டுள்ளார்கள் போலும். தீய சக்திகளை முற்றாக அழித்தொழிக்க முடியாது என்பதும் நன்மைகளை உடனே நிலைநாட்ட முடியாது என்பதும் வரலாற்று உண்மைகள். எனினும் நாம் நடந்த சம்பவங்களை ஆதாரங்களோடு (Fashion Bug சம்பவம்போன்று) உறிய இடத்தில் முறைப்படி முறையிட்டுள்ளோமா என்றால் சந்தேகம்தான். தீய சக்திகள் கொக்கரிக்கின்ற எந்த சட்டமும் இதுவரை நாட்டுடைய சட்டமாக இன்னும் இல்லை என்பது ஓரளவு ஆறுதலே. தற்போது நாம் அனுபவிக்கும் எந்த விடயங்களும் அந்தக்கால எம்முன்னோர்கள் ஆட்சியில் உள்ளவர்களோடு இணைந்து சாதித்தவைகளே . அக்கால மன்னர்கள் முஸ்லிம்களுக்கென கிராமங்களை வழங்கியது இந்த ஒற்றுமை என்னக்கருவிலாகும் என்பதை பறுப்பதற்கில்லை. சமூக ஒற்றுமையில் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் நமது அரசியல் தலைமைகளை விட ஜம்மிய்யத்துல் உலமா மீதே நம்பிக்கை வைத்துள்ளது தெரிகிறது. தீயசக்கதிகள் தீய சட்டங்களை நிலைநாட்ட பலம்கொண்டுள்ளதுபோல் நாமும் நன்மைகளை வாழவைக்க பலம்பெரவேண்டும் என்பதே இதற்குத் தீர்வாகும். நடந்த சம்பவங்களை பொது இடங்களிலும் விருந்துபசாரம் நடைபெறும் இடங்களிலெல்லாம் முறையிட முயற்சிப்பது (மூன்று அமைச்சர்கள் மஹியங்கனை விவகாரத்தை ஒரு விருந்து நிகல்வில் ஜனாதிபதியிடம் முறையிட்டது அதை அவர்கண்டுகொள்ளாமல் விட்டதும்)பாரதூரமான விளைவையே ஏற்படுத்தும். எனவே கருத்துக்கள் வெளியிடமுன் அது எங்கிருந்து எவ்வாறு ஆரம்பமானது தவறு எங்கே இருக்கிரது என்பதை ஆராய்ந்து செயல்படுவதே பொருத்தமானதாக அமையும்

    ReplyDelete
  16. soodu sorani illatha komalihal.

    ReplyDelete
  17. Muthukelumbu Illatha Musleem? Amaichcharkal Muthukelumbillatha Ulamaakkal Intha 2 Kaluthayyayyum Nambi Velayilla,,,,,,.

    ReplyDelete
  18. நாளை மறுமையில் மூன்று கூட்டத்தை முதலில் அல்லாஹ் நரகத்தில் போடுவான் அதில் ஒரு கூட்டம் எது தெரியுமா? உலமாக்கள் அல்லாஹ் என்னையும் உண்மையான முஸ்லிம்களையும் பாதுகாப்பானாக!.

    ReplyDelete
  19. Dear muulavi

    First of all can you enter paradise How can a kafir and hypocrite enter paradise.You are a very good actor da. Nakku thinpathu taste aathn irukkum.... Innu thruwar Nanraha sappidunga...

    ReplyDelete
  20. WETKAM KETA LEBAMARUM ,ARASIYAL WATIYALAYUM NAM SAMUKAM ALINTHU POKUTHU

    ReplyDelete
  21. சொரணை இல்லாத சோனகன் என கவிதை எழுதிய கவிஞர் ஹசீர் எங்கே போனார். அவரது சகோதரன் ரஊப் ஹக்கீமும் சொரணை இல்லாத சோனகன் என்பதை இப்போது ஏற்றுக்கொள்கிறாரா?

    ReplyDelete
  22. what fool this mowlavi while he is not accept islam he asking Suwarkam for him, this mowlavi half boil

    ReplyDelete
  23. 'நக்குண்டார் நாவிழந்தார்' வரிசையில்

    இக்கஞ்சிக் கோப்பை விருந்துக்காகச் சென்று உட்கார்ந்தவர்களும் சமூக உணர்விழந்தார்களே! தூ....!!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  24. thuoooo,,,,,,,,,,,,,,,,,,,,,,

    ReplyDelete
  25. "சொரணை இல்லாத சோனகன்"

    ReplyDelete
  26. நோன்பாளிகளுக்கு நோன்பு துறக்க ஏற்பாடு செய்பவர்களுக்கு பல கூலிகளை வைத்திருப்பதாக வம்பளக்கும் இந்த மௌலவியார் நோன்பாளிகள் சுவர்க்கத்தில் ரையான் எனும் "வீ.ஐ.பீ. வாசலால்" என்று ஏதோ கிண்டல் தொனிக்கும் பாணியில் பேசுகின்றாரா என்ற ஐயம் ஏற்படுகின்றது. நோன்பாளிகளுக்கு நோன்பு துறக்கச் செய்வதனால் பாரிய நன்மைகள் உண்டு என்றாலும் அது அன்றாடம் தம் வயிற்றுக்கே வழியின்றிக் கஷ்டப்படும் ஒரு சோற்றுக் கவளத்துக்காக அல்லல்படும் வறியவர்களுக்காகக் கூறப்பட்டதேயன்றி வயிறும் கன்னமும் வீங்கி விம்மிப் புடைத்த நமது சமூகத்தில் பெரிய பந்தியினர் அரசியல் தலைவர்களுடன் ஜால்ரா பண்ணுவதற்காக ஏற்பாடு செய்த இப்தார் எனப்படும் தற்கால நவீன கலப்பட விருந்துபசாரத்துக்காகக் கூறப்பட்டது அல்ல. அது சரி எந்த உலமாவுக்காவது அரசியல்வாதிக்காவது அல்லது சமூக பிரமுகர்களுக்காவது நமது பள்ளிவாயல்களுக்கெதிராக முஸ்லிம்களுக் கெதிராக நடைபெறும் அநியாயங்களுக்கெதிராக ஒரு வார்த்தை தானும் கேட்பதற்கு முதுகில் சீவன் இருந்ததா ? சோனகன் சோத்தைக் கண்டால் தனது சகல மானங்களையும் கப்பலில் ஏற்றுவான்............

    ReplyDelete
  27. சொரணை கெட்ட சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறிவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகின்றது?.இப்படி வெட்கம் மானம்,ரோஷம் ,சமுதாய சிந்தனை , சமூக பற்று ஒன்றுமே இல்லது பல்லிளிக்கும் ஒரு சமூகமாக இவர்கள் மாரியுள்ளனரே எனும்போது வேதனைதான் வருகின்றது. மௌலவியாம் மௌலவி இவருக்கு சிங்களத்திலே சற்று பாண்டித்தியம் என்பதற்காக இப்படியா புகழ்வது.கூத்து துஆவுக்கு வக்காலத்து வாங்கும் கைஎந்திகள் கூட்டத்தில் உள்ளவர்தானே ஐவரும் இவர் சார்ந்திருக்கும் (ஜஹிலியதுல் )ஜம்மியத்துல் உலாமா சபையும்.மார்க்கத்தினை அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறிய படி மக்கள் மன்றத்திலே வைத்தால் இந்த மாதிரியெல்லாம் நடக்காது. ஒளித்து மறைப்பதினால்தான் அல்லாஹ்வின் உதவியும் கிடைப்பதில்லை,உதரணத்துக்கு ஒன்று வருகின்றது பெருநாள், தெளிவாகவே ஹாதீஸ் வந்துள்ளது திடலில்தான் தொழவேண்டும் என்று சஹனுக்கு நிறைய வரவேண்டும் என்று தானே இன்னும் இந்த நபி மொழியினையும் மறைத்துக்கொண்டுள்ளனர்.இனி எங்கே அல்லாஹ்வின் உதவி வரும்.அல்லாஹ்வுக்கு மாத்திரம் அஞ்ச வேண்டியவர்கள் யார் யாருக்கு அஞ்சுகின்ரனர்.இவர்கள் maaratha வரை அல்லாஹ்வும் மாற்ற மாட்டான்.

    ReplyDelete
  28. Dear Mr. Hakeem Soa

    Do not criticize Ulama..... Do you remember.....

    ReplyDelete
  29. சகோ. ஒஸ்ஸான் ஸலாம் சொன்னது சரி. அதனால்தான் வழிமொழிகிறோம், ஹஸீர் சொன்னது போல, சொரணையில்லாத சோனகன் என்று. தன் தம்பி அமைச்சரின் பின்னால் போகாமல் அல்லாஹ்வுக்காக் அல்லாஹ்வின் நேர்வழிக்குத் திரும்ப வேண்டும் அவர். அல்லாஹ்வுக்காகக் குரல் கொடு நீ கைவிடப்பட மாட்டாய்.

    ReplyDelete
  30. Very suitable HEADLINE.

    ReplyDelete

Powered by Blogger.