Header Ads



பள்ளிவாசல் வெடிப்பதுபோல் பச்சை குத்தியவர் கைது

(Tn) பள்ளிவாசல் வெடிப்பதுபோல் பச்சை குத்தியிருந்த ஒருவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இன எதிர்ப்பை தூண்டும் செயலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியே சீன் ரீட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பெர்மிங்காமில் இடம்பெற்ற முஸ்லிம் எதிர்ப்பு இங்கிலிஷ் டிபென்ஸ் லீக் அமைப்பின் பேரணியின்போது 39 வயது ரீட், தனது விளாப்பகுதியில் குத்தப்பட்டிருந்த பள்ளிவாசல் வெடிப்பது போன்ற பச்சையை ஊடகங்களுக்கு காண்பித்தார். இதனைத் தொடர்ந்து குறித்த நபர் பற்றி தகவல் கோரிய வெஸ்ட் மிட்லான்ட் பொலிஸார் சீன் ரீட்டை கைது செய்துள்ளனர்.

இங்கிலிஷ் டிபன்ஸ் லீக் கடந்த சனிக்கிழமை நடத்திய பேரணியின்போது முஸ்லிம்கள் தலையில் அணியும் தொப்பியை எரித்து அதன்மீது சிறுநீர் கழித்து எதிர்ப்பை வெளியிட்டதோடு, இதன்போது ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து 20 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

2 comments:

  1. Its never going to happen in Sri Lanka, because it is A buddhist Country!

    ReplyDelete
  2. சட்ட அமுலாக்களில் அரசியல் தலைமைகளுக்கு இடமில்லை. சட்டத்தை மீறும் எவராயினும் உடனடியாகக் கைது செய்து நீதியின் முன் நிறுத்துவதுதான் ஒரு நீதிக்கான ஆட்சியின் பொறுப்பு. அங்கெல்லாம் ஆட்சித்தலைவனின் மனோ இச்சை சட்டமாக இல்லை. அதனால்தான், சட்டத்தை மீறியவன் கைது. இங்கெல்லாம் ~ சொரணையில்லாத முஸ்லிம் தலைமைகள்.....

    ReplyDelete

Powered by Blogger.