Header Ads



யாழ் முஸ்லிம்களில் சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா

1990 இல் வெளியேறிய முஸ்லிம்கள் வெறும் கைகளுடன் வேறு பிரதேசங்களுக்கு சென்று குடியிருந்தாலும் யாழ்ப்பாணத்தில் அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்த காலத்தில் பல்வேறு துறைகளில் பல சாதனைகளை நிகழ்த்தி வரலாற்றில் ஒரு முத்திரையை பதித்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர். 'துருக்கித் தொப்பி புகழ்' அட்வகேட் மர்ஹும் எம்.சி.அப்துல் காதர், கொழும்பு ஸாஹிராவின் முதல் தலைமை ஆசிரியர் மர்ஹும் ஏ.எஸ்.அப்துல் காதர், சுப்ரீம் நீதிமன்ற நீதியரசர் மர்ஹும் எம்.எம். அப்துல் காதர்,  இலங்கை அரசாங்க சேவை ஆணைக்குழு அங்கத்தவர் செனட்டர் மர்ஹும் ஏ.எம்.ஏ.அஸீஸ், அரசாங்க அதிபர் மர்ஹும் எம்.எம். மக்பூல், வடகிழக்கு கல்வியமைச்சின் செயலாளர் எம்.எம். மன்சூர், முதல் முஸ்லிம் பெண் எம்.பி.பி.எஸ். வைத்தியர், முதல் முஸ்லிம் விமானி என்றவாறு ஏராளமான வரலாற்றுச் சாதனைகளுக்கு சொந்தக்காரர்கள் இந்த யாழ்ப்பாண முஸ்லிம்கள்.

இவ்வாறானவர்கள் மறைந்து விட்டாலும் அவர்கள் சார்ந்திருந்த தாய் மண்ணுக்கு பெருமை தேடித்தந்து விட்டு அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டனர். இவர்களில் பெரும் பாலானவர்களின் பெயர்கள் இலங்கை முழுவதும் அறியப்பட்டனவாக இருக்கின்றது. அதே போன்று தற்காலத்திலும் யாழ்ப்பாண முஸ்லிம்களில் பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்கள் காணப்படுகிறார்கள். யாழ் முஸ்லிம் சமூகம் இடம் பெயர்வினால் சின்னாபின்னமாகி சிதறுண்டு வாழ்வதால்  சாதனைகள் படைத்தவர்களின் விபரங்கள் யாழ்ப்பாணத்தவர் எல்லோரையும் சென்றடைவதில்லை. இதனால் ஒருவரை ஒருவர் அறியாமல் மாற்றான் போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 

எனவே யாழ்ப்பாண முஸ்லிம்கள் மத்தியில் சாதனையாளர்களாக விளங்கிய பிரமுகர்களினதும் ஏனைய துறை சார் பங்களிப்புகளை வழங்கியுள்ளோரையும் கௌரவிக்கும் முகமாக  ஒரு  விழாவை ஏற்பாடு செய்ய முயற்சி செய்து வருகிறார்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு யாழ்ப்பாண முஸ்லிம்களின் சாதனையாளர் விருது விழா ஏற்பாட்டுக் குழு ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். 

அந்த ஏற்பாட்டுக் குழுவின் பிரதான நோக்கங்களாக: சாதனை படைத்து வாழ்ந்து மறைந்தோரை எமது சமூகத்துக்கு ஞாபகப்படுத்துதல், தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பிரமுகர்களை இளையவர்களுக்கு அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வித்துறை, விளையாட்டுத்துறை, சமூக வேவை, மார்க்கக் கல்வி, தொழில்நுட்பம் போன்றவற்றினூடாக சமூகத்துக்கும், நாட்டுக்கும், தாம் சார்ந்த பாடசாலைக்கும் பங்களிப்புகளை வழங்கியோரை பரஸ்பரம் அறிமுகப்படுத்தல் அவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தல், தற்போது பல்வேறு துறைகளில் கல்வி கற்போரை அடையாளப்படுத்தல்  போன்ற பல்வேறு செயற்பாடுகளினூடாக முஸ்லிம் மாணவ சமுதாயத்தை தாமும் மேற்படி துறைகளில் முன்னேற வேண்டும், சமூகத்துக்கு பங்களிப்பு வழங்க வேண்டும் என்ற ஊக்கத்தை வழங்குதல் என்பன பிரதான இலக்குகளாக உள்ளது. 

இந்த அடிப்படையில் முதலாவது கூட்டம் நீர்கொழும்பில் கடந்த 17.08.2013 அன்று இடம் பெற்றது. ஏற்பாட்டுக் குழுவின் இரண்டாம் கூட்டம் எம்.எஸ்.கியாரத் ஆசிரியர் அவர்களின் கொழும்பிலுள்ள வீட்டில் 21.08.2013 புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது. இக்கூட்டத்துக்கு ஏ.சி. நஜுமுதீன் ஆசிரியர், எம்.எஸ்.எம்.கியாரத் ஆசிரியர், எம்.எஸ்.எம்.ஜான்ஸின், அபுஸாலி சப்ரின், அக்பர் முஹம்மத் இப்ரீன், இப்றாகிம் இம்தியாஸ் ஆசிரியர் மற்றும் அபுபக்கர் ஜவாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்தனர். இதனடிப்படையில் யாழ்ப்பாண முஸ்லிம்களில் சாதனை படைத்த மூதாதையாகளின் விபரங்கள், தற்போதுள்ள பிரமுகர்களின் விபரங்கள், கல்விமான்கள் மற்றும் ஆசிரியர்களின் விபரங்கள், பட்டதாரிகள், வைத்தியர்கள், என்ஜினியர்கள், கம்பியுட்டர் துறைகளில் கற்றவர்கள், மாநகர சபை உறுப்பினர்களாக இருந்தவர்கள், விளையாட்டு வீரர்கள், கிறிக்கட் வீரர்கள், உதைப்பந்தாட்ட வீரர்கள், சைக்கிள் ஓட்ட வீரர்கள், மரதன் ஓட்ட வீரர்கள், குர்ஆன் போட்டிகளில் பரிசில்களை வென்றவர்கள், ஆலிம்கள், காபிழ்கள், காரிகள், தற்போது பல்கலைக்கழக கல்விகளை கற்றுக் கொண்டிருப்போர் போன்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அனைத்து ஆண் பெண் சாதனையாளர்களினதும் விபரங்களை சேகரித்து ஒரு நூலை வெளியிடவும் ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டது.  

அத்துடன் சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கும் விழா ஒன்றை கொழும்பில் ஏற்பாடு செய்யவும் அங்கு வருகை தருபவர்களுக்கு பகல் போசன விருந்துபசாரத்தை வழங்கி கௌரவிக்கவும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது. இதற்கான பண பொருள் உதவிகளை பெற்றுக் கொள்ள யாழ்ப்பாண முஸ்லிம்களிடையே காணப்படும் செல்வந்தர்களின் உதவியை நாடுவதெனவும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. 

எனவே தமது விபரங்களையோ அல்லது தம்மைச் சார்ந்தவர்களின் விபரங்களையோ  இந்த நிகழ்வில் இடம்பெறச் செய்வதற்கு  விரும்புபவர்கள் முழுப் பெயர், அதிகூடிய கல்வித்தகமை, தற்போது வகிக்கும் பதவி, சமூகத்துக்கு எந்த துறையில் பங்களிப்புகளை வழங்கினீர்கள் என்ற விபரம், யாழ்ப்பாண முகவரி, தற்போதைய முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் ஈமெயில் முகவரி என்பவற்றுடன்  பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ ஒன்றையும் பின்னால் பெயர் எழுதி பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்.  எம்.எஸ்.எம்.கியாரத், இலக்கம் 40, பொகுன வீதி, தெஹிவல என்ற விலாசத்துக்கோ அல்லது எம்.எஸ்.எம்.ஜான்ஸின், இலக்கம் 12, மூர் வீதி, நீர்கொழும்பு என்ற விலாசத்துக்கோ அனுப்பவும். jansin@hotmail.co.uk செல்லிடத் தொலைபேசிகள்: எம்.ஏ.எம்.சப்ரின் 071 4402776 எம்.ஐ. இம்தியாஸ் 0772916744 புத்தளம் - ஜனூஸன் 0713119911  பாணந்தறை –  அபுபக்கர் ஜவாஹிர் 0777412381 அக்பர் இப்ரின் 0713091492

2 comments:

  1. IS THIS VERY IMPORTANT MATTER FOR JAFFNA MUSLIM PEOPLES NOW DAYS BROTHERS????

    ReplyDelete
  2. muslim muslim ena koorukireerkal aanal ennudan veelai seiyum somali nanparkal kooruvarkal arabikkararkal mikavum mosamanavarkal enrum thammai mathikkamaddarkal ilivaka nadaththuvarkal enrum koorukirarkal mathatthil alla manithaneeyam manitharil than manithaneeyam ullathu ithatku utharanam emmai bramarikkum europpiya nadukal

    ReplyDelete

Powered by Blogger.