Header Ads



எகிப்திய இராணுவ சர்வதிகாரிக்கு துருக்கியின் முன்னாள் இராணுவ தளபதியின் கடிதம்

(அபூ உஸ்மான்
+
மொஹமட் ஆஷிக்)

நான் ஜெனரல் கெனன் ஏவ்ரன், துருக்கிய ஆயுதப்படைகளின் முன்னால் தளபதி. நானும் கண்டவர்களுடன் எல்லாம் கூட்டுச் சேர்ந்து கொண்டு துருக்கியைத் துண்டாடும் வேலையை செய்தேன்.

அந்த நாட்களில் நான் செய்த வேலைகளில் சில இதோ உங்களது பார்வைக்காக...

நான் 1980ம் ஆண்டு ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட துருக்கி ஜனாதிபதிக்கெதிராக சதி செய்து அவரது ஆட்சியைக் கவிழ்த்து அவரை சிறைக்கனுப்பினேன்.

ஒன்பது வருடங்கள் துருக்கியை ஆட்சி செய்தேன். அந்தக் காலப்பகுதியில் துருக்கியின் சட்ட யாப்பை தூக்கி கிடப்பில் போட்டேன். என்னை எப்போதும் யாரும் சட்டத்தின் முன் நிறுத்த முடியாத வகையில் புதிய சட்டயாப்பை உருவாக்கினேன்.

சுமார் ஆறரை இலட்சம் துருக்கியர்களை அவர்கள் அனைவரும் சட்டபூர்வ ஜனாதிபதிக்கு ஆதரவளித்தார்கள் என்பதற்காக மட்டும் சிறைக்கனுப்பினேன். அவர்களில் 144 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்

இரண்டு இலட்சத்து முப்பதாயிரம் துருக்கியர்களை சட்டத்தின் முன் நிறுத்தி விசாரித்தேன். அவர்களில் 177 பேரை சித்திரவதை செய்து கொன்றேன்.

எனது ஆட்சியில் 300 துருக்கியர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களில் 57 பேருக்கு அத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.

எனது ஆட்சியில் மூன்று இலட்சம் துருக்கியர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றார்கள்.

நான் ஜெனரல் கெனன் ஏவ்ரன். இப்போது 96 வயதை எட்டிக் கொண்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி. எனது வாழ்வில் நான் ஒரு கூண்டிலடைக்கப்பட்டு மக்களுக்கு முன்னால் இழிவு படுத்தப்படுவேன் என்று கனவில் கூட நான் நினைத்ததில்லை.

இப்போது வயோதிபத்தின் உச்சகட்டத்தில் எனது கெட்ட முடிவை நான் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றேன்.

அப்துல் பத்தாஹ் ஸீஸீ யே! 

நீங்களும் நிச்சயமாக எனது அடிச்சுவட்டைப் பின்பற்றி நடந்து வருகின்றீர்கள். ஆனால் உங்களால் ஒரு போதும் வரலாற்றுத் தடயங்களை அழித்து விட முடியாது. ஏனெனில் வரலாறு அதற்கேயுரிய உறுதியான எட்டுக்களை வைத்து திடமாக முன்னேறி வருகின்றது.

1 comment:

Powered by Blogger.