எகிப்தில் இஹ்வான்களுக்கும், சலபிகளுக்கும் காத்திருக்கும் ஆபத்து..!
(Tn) எகிப்தில் இடைக்கால அரசால் திருத்தங்கள் கொண்டு வரப்படும் அரசியல் அமைப்பில் மத அடிப்படையிலான அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சி அரசினால் தயாரிக்கப்பட்ட இஸ்லாமிய ஆதரவு கொண்ட புதிய அரசியல் அமைப்பு கடந்த ஆண்டில் மக்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இராணுவ சதிப்புரட்சிக்கு பின் இந்த அரசியல் அமைப்பில் திருத்தம் கொண்டுவர 10 பேர் கொண்ட நிபுணர் குழுவை இடைக்கால ஜனாதிபதி அட்லி மன்சூர் நியமித்தார்.
இந்நிலையில் திருத்தங்களுடனான புதிய அரசியலமைப்பு நாளை புதன்கிழமை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 50 பேர் கொண்ட பொதுக் குழு இந்த திருத்தங்கள் குறித்து மீள் பரிசீலனை செய்து சர்வஜன வாக்கெடுப்புக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் இஸ்லாமியவாதிகளால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பின் அடிப்படைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக மேற்படி நிபுணர் குழு வட்டாரங்கள் எகிப்தின் அரச ஊடகமான அஹ்ரம் இணைய தளத்திற்கு கூறியுள்ளன.
இதன்படி புதிய அரசியலமைப்பில் மத அடிப்படையிலான அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.
இது 2007 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் அரசினால் கொண்டுவரப்பட்ட திருத்தத்துடன் ஒத்துப் போவதாக உள்ளது. இதன் மூலம் எகிப்தை ஒரு மத அடிப்படை தேசமாக மாற்றும் முயற்சி தடுக்கப்படுகிறது என நிபுணர் குழு வட்டாரம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏற்கனவே முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை சட்ட ரீதியில் தடைசெய்ய இடைக்கால அரசு ஆலோசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் முர்சி அரசினால் வரையப்பட்ட அரசியலமைப்பின் 232 ஆவது கட்டுரையில், முபாரக் அரசின் முன்னணி அதிகாரிகள் மற்றும் அவரது தேசிய ஜனநாயக கட்சிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. புதிய திருத்தத்தில் இந்த தடை நீக்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது.

Change the heading...
ReplyDeleteIkhwans face threat from saudi backed salafis