Header Ads



முஸ்லிம் காங்கிரஸிற்கு அரசுக்கு உள்ளேயும் வெளியேயும் எதிரிகள் - ரவூப் ஹக்கீம்

(எம்.எம்.எம். ரம்ஸீன்) 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அரசுக்கு உள்ளேயும் வெளியேயும் எதிரிகள் இருக்கின்றனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

மத்திய மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டம் யடிநுவர தொலுவையில் நேற்று 10.08.2013 இடம்பெற்ற போது அமைச்சர் கலந்து கொண்டு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

எமக்கு எதிராக சதிகள் இடம்பெறுகின்றன.   எமக்கு அரசாங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிரிகள் இருக்கின்றனர்.  இத்தேர்தல் முடிவுகளின் பின்பு கிழக்கு மாகாண சபை தேர்தலின் பின்பு இடம்பெற்றது போல் சுயாதீனமாக முடிவுகளை முஸ்லிம் காங்கிரஸ்  எடுக்கும்.  அரசியலில் எதிரித்தனம் எப்போதும் சாத்தியப்படாது என்பது யதார்த்தம். எனவே சகோதரத்துவ அரசியலில் கவனம் செலுத்த வேண்டிய யதார்த்தம் உள்நாட்டு அரசியலில் நிலவுகின்றது. 

முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு விரோதமாக செயற்படாத போதிலும் அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சிக்கும். இதற்கான சக்தியை மக்கள் முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கியுள்ளனர். 

மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றிக்கான வேலைத்திட்டங்களை வகுத்து செயற்படுகின்றது. கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் இழைக்கப்பட்ட அநீதியால் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற முடியாது போன புஸ்பா கொடிதுவக்கு என்ற சிங்கள வேட்பாளர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் களமிறங்கி வெற்றி பெற்றார். எனவே பெரும்பான்மை  கட்சியால் அநீதி இழைக்கப்பட்டவருக்கு நாம் நீதி வழங்கினோம். 

நாட்டில் மூன்று மாகாண சபைகளுக்காகுமான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களம் சூடேற  ஆரம்பித்துள்ளது. இத்தேர்தல் ஸ்ரீலங்கா லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு சவால்மிக்க தேர்தலாக அமையுமாயினும் ஸ்ரீலங்கா லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சவால்களைக் கண்டு  குலை நடுங்கும் கட்சியல்ல என்றார். 

இதில் முஸ்லிம் காங்கிரஸின் கண்டி மாவட்ட முதன்மை வேட்பாளர் ஏ.எல்.எம். உவைஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.  

1 comment:

  1. நீங்கள் இந்த கட்சியை பொறுப்பேற்றபின்பு தானே இத்தனை பிளவுகள். அப்படியென்றால் கட்சி சீரழிவதற்கு பிரிந்து செல்பவர்கள் மட்டும் தானா காரணம். புpரியக்காரணமான நீங்கள் காரணம் இல்லயா?
    நான் அல்ல. அமைச்சு ஆசைதான் காரணம் என்று சொல்லாதீர்கள்.
    'பிடரிபிடித்துத் தள்ளினும் போகேன்' தன்னிலை மறந்து சொல்லுமளவு அமைச்சின் மீது அமாறா உள்ளவர் நீங்கள். சுகபோக மல்ல. கட்சிதான் முக்கியம் எனச் சொல்லும் நீங்கள் கட்சியை விட்டு வெளியேறிப்பாருங்களேன். அப்படி என்ன கெடப்போகிறது எனப்பார்ப்போம்? இதுவரை உள்ள சீரழிவைவிடவுமா?

    ReplyDelete

Powered by Blogger.