Header Ads



கிரண்ட்பாஸ் பள்ளிவாசலை தாக்கியது பௌத்தர்கள் இல்லையாம்...!


(முபாஸல் மபாஸ்)

நாங்கள் பள்ளிக்கு அடிக்கவும் இல்லை. அடித்தது பௌத்தர்களும் அல்ல. நேற்று டி.என் எல் தொலைக்காட்சியில் கிராண்ட்பாஸ் விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. 3 தேரர்களும், முஜிபுர் ரஹ்மான், ஹமீட் மற்றும் அஸாத் சாலி என்போர் கலந்து கொண்டனர்.

ஆரம்பத்தில் உரையாற்றிய தேரர்கள் இருவரும் அந்த இடமானது ஒரு களஞ்சியசாலை எனும் தோற்றத்தை முன்வைத்தனர். ஒருவர் நிறுத்தி மற்றவருக்கு பேச சந்தர்ப்பம் கிடைத்த போது அவர் விட்ட இடத்திலிருந்து மற்றவர் தான் தொடர்வதாக கூறியே களஞ்சியசாலை என வாதிட்டனர்

அவர்கள் இருவரும் கூறியதன் சுருக்கம், முஸ்லிம்கள் வஞ்சகமான முறையில் அப்பள்ளியை நிறுவினர் என்பதாகும். அதாவது களஞ்சியசாலை என கூறிக் கொண்டு தந்திரமாக பள்ளியை அமைத்தனர். இதன் போது ஏனைய பள்ளிகள் தாக்கப்பட்டதற்கும் இவ்வாறான வஞ்சகமான முறையில் அப்பள்ளிகள் கட்டப்பட்டமை காரணமாக இருக்கலாம் என்ற கருத்தையும் முன்வைத்தனர்.

மூன்றாவதாக உரை நிகழ்த்திய தேரர் அவர் பாடசாலை அதிபர். தாக்கப்பட்டது பள்ளிவாயல் அல்ல என்பதை வெளிப்படுத்தினார். அந்நேரம் அவர் பழைய மற்றும் பதிய பள்ளிவாயல்களின் புகைப்படத்தை காட்டி கட்டிட அமைப்பு வித்தியாசத்தை சுட்டிக் காடடி அது ஒரு பள்ளி அல்ல. கட்டிடம் ஒன்று. தாக்கப்பட்டது அக்கட்டிடம்தான் என பல விடுத்தம் அவ்விரு புகைப்படங்களை காட்சிப்படுத்தி கூறினார். அத்துடன் தாக்கியது பௌத்தர்கள் அல்ல. அவர்களுக்கும் ஒரு கலாச்சாரம் உண்டு. பழைய பள்ளியை கட்டுவதற்கு இடம் கொடுத்தது ஒரு பௌத்தர் மற்றும் அரச மரத்துக்கு அருகில் பள்ளிவாசல் அமைக்கும் போது சாந்தமாக இருந்தவர்கள் பௌத்தர்கள் . எனவே அவர்கள் தான் தாக்கினர் என கூற வேண்டாம் என முடித்தார்.

முடிவாக அவர்களின் கருத்து,

அது ஒரு பள்ளிவாசல் அல்ல.
அது களஞ்சியசாலை.
தாக்கியது பௌத்தர்களும் அல்ல.
என்பதை உலகுக்கு எடுத்துக் கூற வேண்டுமாம்.

அதேவேளை கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்கப்படுவதற்கு முன்னர் அருகிலிருந்த பௌத்த விகாரையில் மணி அடிக்கப்பட்டு, ஆட்கள் திரட்டப்பட்டு, விகாரையிலிருந்து வெளிக்கிளம்பிய காடையர் கூட்டமே கிரன்ட்பாஸ் பள்ளிவாசலை தாக்கியதாக கண்கண்ட சாட்சிகளும், வீடியோ ஆதாரங்களும் நிரூபித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

8 comments:

  1. யா அல்லாஹ் உனக்கே வெளிச்சம் உன் பள்ளிவாசல் நீ பாதுகாத்துக்கொள். உன் மாளிகையை எம்மை விட நீ தான் பாதுகாக்க தகுதியானவன்.

    ReplyDelete
  2. Then are they came from India? are they Hindus? Are they Christians?

    They are lying on their on their religion not with the nation. They are wearing the yellow rob because of politics and the money not because of the real Buddhism.

    all the videos are still available let them see their Police department and them self

    http://www.colombotelegraph.com/index.php/cctv-video-footage-of-grandpass-mosque-attack/

    ReplyDelete
  3. உண்மைதான் உண்மையான பொளத்தன் தாக்க மாட்டான் ஆனால் தாக்கியவர்கள் சிங்கள காடையர் கூட்டம்
    இலங்கையில் இன்று இருப்பது ராஜபக்ஸ பயங்கரவாதம் அந்த பயங்கரவாதத்துக்கு முட்டுக் கொடுப்பவர்கள் நமது 18 முஸ்லிம் அமைச்சர்கள் சமூகம் இவர்களுக்கு செருப்பால் அடுக்காதவரை இன்னும் அராஜகம் தொடரும்

    ReplyDelete
  4. அரசிலே சில முஸ்லிம் கோடரிகம்புகள் இருக்கும் வரை இந்த தேரர் என்ன இனி வருகின்றவேர்களும் இவ்வாறுதான் பேசுவார்கள். நாம் எமது அரசியல் தலைமைத்துவத்தை தெரிவுசெய்யும் பொது தகுதியானவர்களை தெரிவுசெய்தால் இவ்வாறன பிரச்சினைக்கு சரியான பாடம் படிப்பித்து இருப்பார்கள்.

    ReplyDelete
  5. Asaad sali and mujeeburrehman what they said?

    ReplyDelete
  6. இந்த தேரர்கள் இப்படி சொல்லும்போது முஜிபுர்ரஹ்மான்,ஹமீட்,அசாத்சாலி மூன்றுபேரும் வாயை மூடிகிட்டா இருந்தனர்.அவர்களிடம் வீடியோ ஆதாரம் எதுவும் காட்டுவதற்கு கிடையாதா?

    ReplyDelete
  7. அப்போ முஸ்லிம்கள் தான் தமது பள்ளியைத் தாக்கி விட்டு பழியை அந்த "அப்பாவி" பெளத்தர்கள் மீது சுமத்தியிருக்கின்றார்கள் போலும் !

    ReplyDelete
  8. Maatru matha vanakkasthalam galukku REAL BAUDHARHAL KAY VEYKA MAATTAAR. INGU PALLIYEY THAAKKA WANTHA VAR HAL PEYRALAVIL BAUDARHAL. unmayaana baudarhal allathaan.

    ReplyDelete

Powered by Blogger.