அகற்றப்படும் போதி மரம் சொல்லும்செய்தி...!
(மஸிஹுத்தீன் இனமுல்லாஹ்
தமிழில் நண்பர் ஹரீஸ் ஸாலிஹ் (குவைத்)
போதி மரத்தின் பிரசன்னம் பள்ளிவாயிலுக்கு அண்மையில் உள்ளது அல்லது போதி மரத்தின் அண்மையில் பள்ளிவாயில் உள்ளது என்பதை அடிப்படை வாதிகள் காரணம் காட்டியதனாலேயே பழைய பள்ளிவாயிலினது புனர் நிர்மான பணிகளை மேற்கொள்ள முஸ்லிம்ககளுக்கு தடையாக இருந்தது. அதற்கு முஸ்லிம்களும் உடன்பட்டு புது பள்ளியை கட்டவே அதுவும் அதே அடிப்படை வாதிகளால் இடிக்கப்பட்டது.
இந்த தீவிரவாதிகள் தமது சொந்த நம்பிக்கைகளுக்கும் ,சமாதானத்தை விரும்பும் பெரும்பாலான சிங்கள பௌத்தர்களுக்கும் ,நாட்டுக்கும் விஷேடமாக யுத்தத்துக்கு பிந்திய இலங்கையில் ,இழைத்த சேதமானது சர்வதேஷ சமூகத்தின் பார்வையில் பள்ளியை சேதப்படுத்தியதை விட பன்மடங்கு பரிதாபகரமானது இந்த தீவிரவாதிகள் இந்த விடயத்தை உயர் அதிகாரிகள் முன்போ, மகா சங்கத்தினர் முன்போ அல்லது சட்ட அமு லாக்க அதிகாரிகள் முன்போ முன் அவதானத்துடன் வைத்திருந்தால் புதுப் பள்ளிவாசலை நிர்மாணிக்கப்பட முன்பே இனவாத விரோதச் செயல்கள் தவிர்க்கப்பட்டிருக்கூடும்.
சமரசமான முடிவுக்கு வந்திருப்பினும் கூட இந்த தீவிரவாத சக்திகளால் காட்சிப்படுத்தப்பட்ட காழ்ப்புணர்ச்சியையும் , கிராண்ட்பாஸ் பொலிஸ் அதிகாரிகள் இந்த முழுச் சம்பவத்தையும் ஆராயாமல் விட்ட விதத்தையும் நாம் ஒரு போதும்அனுமதிக்கப்போவதில்லை மேலும், இனவாதத்தை , வெறுப்பை , விரோதத்தை அனுமதிக்காத புனித நம்பிக்கை ஒன்றின் பெயரால் தீவிரவாதிகள் சட்டத்தை கையில் எடுப்பதையும் , கலகம் உருவாக்குவதையும் தடுப்பதற்கு நாம் ஜனாதிபதிக்கும் , சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கும் மேல் முறையீடு செய்கிறோம்.
அச்சுறுத்தலின் கீழ் தொடர்புபட்ட 24 பள்ளிவாசல்ளினதும் விடயங்கள் உயர் அதிகாரிகளின் முன் நாகரீகமான முறையில் முன் வைக்கப்பட்டிருந்தால் அவை யாவும் அமைதியான முறையில் தீர்க்கப்பட்டிருக்கும் மாறாக மனித மதிப்புகளை பொருத்தவரை நாடு தசாப்தங்கள் பின்னோக்கி இழுக்கப்படுவதைவிட
தீவிரவாதிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு அச்சுறுத்தப்பட்ட மேற்கூறப்பட்ட அனைத்து வணக்கஸ்தளங்களும் பல தசா ப்தங்களாக சமாதானத்தை விரும்பும் சிங்கள பௌத்தர்களுக்கு மத்தியில் இருந்தும் ஒரு சிறிய தீங்கு கூட ஏற்படாதவாறு இரண்டு சமூகங்களுக்கும் இடையே சக வாழ்வுக்கான மதிப்புகள் பேணப்பட்டுள்ளன.
இது வன்முறை ஊடாக இனவாதத்தை உருவாக்கி இலங்கையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் எண்ணத்துடன் அவர்களது உள்ளூர் மற்றும் உலகலாவிய எஜமானர்களை திருப்திபடுத்தும் நோக்கோடு செயற்படும் ஏற்பாடு செய்யப்பட்ட வெளிக்கூறுகளே தவிர வேறில்லை.
இலங்கை முஸ்லிம்களாகிய நாம் உலகம் முழுவதும் 2 பில்லியன் மக்கள் பின்பற்றும் நம்பிக்கையைச் சேர்ந்தவர்களாயிருப்பினும் தொடர்ந்தும் இலங்கையர்களாகவே இருந்து எமது தாய்நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையான்மை சுபீட்சம் போன்றவற்றை பாதுகாப்பதுடன் ஒருநாளும் அரசியலை சந்தைபடுத்தும், தேசப்பற்று என்ற உன்னத பெயரில் பூகோள அரசியல் சூழ்ச்சி செய்யும் உள் ,வெளி தீய சக்திகளின் கையில் விழவும் மாட்டோம்.
அநியாயத்துக்கெதிராக குரல் கொடுத்த பெரும்பாலான சிங்கள பௌத்தர்களுக்கும் , மஹா சங்கத்தினருக்கும் ,புத்திஜீவிகளுக்கும், சிவில் மற்றும் அரசியல் தலைமத்துவத்திற்கும் அதேபோல் எமது வரலாற்றின் கஷ்டமான நேரத்தில் மத சகிப்புத்தன்மை,பொறுமையை கடைபிடித்த கொழும்பு வாழ் முஸ்லிம்கள் , அயல் வாழ் சிங்கள பௌத்தர்களுக்கும் நாம் எமது நன்றி ,மரியாதையை செலுத்திக்கொள்கிறோம்a

இப்படியான தீவிரவாதிகளின் தாக்குதல்களின் போது பாவிப்பதற்கென்று சில எறிகுண்டுகளை கையில் வைப்பாக வைத்துக்கொண்டிருக்கவேண்டும் வரும்போது நாமு வீசிவிட்டு இருக்கவேண்டியதுதான். இதுதான் சரியான பதிலடி.
ReplyDeleteஇனாமுல்லா அவர்களே!
ReplyDeleteநீங்கள் கட்டார் வந்து தேசிய சூறாசபை பற்றி வாய் கிழிய பேசியது இன்னும் நினைவிருக்கிறது. கிரான்ட்பாஸ் சம்பவம் நம்நாட்டு அனைத்து முஸ்லிம்களின் மனநிலையை மாற்றிவிட்டது. நாட்டில் அரங்கேறும் இனவெறி செயல்களுக்கு உங்கள் தேசிய சூறாசபை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை என்போன்று நம் இனத்தினதும் மதத்தினதும் சுதந்திரத்திற்காக போராட துடிக்கும் இளைஞர்களின் கேள்வியாக இருக்கிறது. குறைந்த பட்சம் நடைபெற்று வரும் காழ்ப்புணர்வு சம்பவங்களில் உங்கள் நிலைபாடு என்னவென்றாவது அறிவிக்கலாமே.
போட்டோவுக்கு போஸ் குடுப்பது மட்டுமல்ல பிரதிநிதிகளின் கடமை எனபது நினைவிருக்கட்டும்.
கட்டுரையின் தலைப்புக்கு என்ன ஆனது?
ReplyDeleteWhere is my comment? Why you didn't post yet? Justice?
ReplyDeletefowmy cool down.
ReplyDelete