Header Ads



அன்புள்ள இஸ்லாமிய சகோதரர்களுக்கும், நண்பர்களுக்கும்..!

கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் குழுப் பிரிவினைகளும் சமூகத்தினுடைய பிளவிற்கே வழிகோலும்...!!நபி (ஸல்) அவர்கள் தன் இறுதி உரையான '' ஹஜ்ஜதுல் விதா '' வில் முஸ்லீம்களை குறைந்த பட்சம் " அறபியாகவோ அஜமியாகவோ " பிரிந்து விடாதீர்கள் என்றார்கள்...!!

இஸ்லாம் மார்க்கமானது அல்லாஹ்வால் சொல்லப்பட்டு நபியவர்களால் வாழ்ந்து காட்டப்பட்ட அழகிய வாழ்க்கைக் கலை.அல்லாஹ்வால் சொல்லப்பட்டதும் நபிகளாரினால் வாழ்ந்து காட்டப்ப்டட்டது தவிர மற்றைய அனைத்தும் புனையப்பட்டது என்பது என் கருத்து.

கருத்து முரண்பாடுகள் வருகிற போது சமூகத்திற்கு ஏற்பவும் சமூக நன்மைகள் கருதியும் குழப்பங்கள் ஏற்படுகின்ற அளவிற்கு இல்லாமலும்  எடுக்கப்படுகின்ற முடிவுகள் அமைய வேண்டும்.அதற்கு அத்தனை சமூகமும் ஒத்திசைய வேண்டும்.

முஸ்லீம் சமூகத்தினுள் விதைக்கப்பட்டிருக்கின்ற குழுப்பிரிவினைகள் அமைப்புக்கள் அத்தனையும் களைந்தெறியப்பட்டு " அனைவரும் முஸ்லீம்கள் " என்ற பொதுவான மிகப்பெரும் குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும்.

இன்றைய நிலையில் முரண்பாடுகள் மட்டும் இஸ்லாம் என்ற அளவிற்கு சமூகம் வந்திருக்கிறது.இது அவ்வளவு தூரத்திற்கு ஆரோக்கியமான நிலைப்பாடு அல்ல....!!முழு உலக சமூகத்திற்கும் நற்செய்தியாக அருளப்பட்ட இஸ்லாத்தில் இருக்கும் செய்தியை மற்ற சமூகத்திற்கு எத்தி வைக்காமல் அதில் இருப்பவர்கள் அதில் முரண்பட்டு காலத்தைக் கடத்துவது கேவலமான நிலைப்பாடாக எனக்குத் தெரிகிறது.

மற்ற சமூகத்திற்கு நற்செய்தியை சொல்லாதது பற்றிய விசாரணைகளுக்கான பிடி அல்லாஹ்விடத்தில்  கடுமையாகவே இருக்கும் என்பதை சமூகமும் பெரியார்களும் மறந்து விட்டார்கள் போலும்..!

எத்தனை பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டாலும் ஏன் இலங்கையில் இருக்கும் அத்தனை பள்ளிவாயல்களும் மூடப்பட்டாலும் பரவாயில்லை இறையச்சம் மிகுந்த தொழுகையாளர்களை உருவாக்க முயற்சிப்போம்..!!

பேணுதல் மிக்க இஸ்லாமிய யுவதிகளையும் இளைஞர்களையும் உருவாக்குவோம்...!!

ஹராம் ஹலால் பேணுகின்ற சமூகத்தை உருவாக்குவோம்..!!

அல்லாஹ்வின் மீது அன்பும் பயமும் சம அளவில் வைக்கக் கூடிய சமூகத்தை உருவாக்க முயற்சிப்போம்...!!

நபியவர்களின் வாழ்க்கையை பேணுதலாக பேணும் சமூகத்தை உருவாக்க முயற்சிப்போம்...!!

வயதில் பெரியாருக்கு மரியாதை செலுத்தும் மற்றும் சிறியோருக்கு அன்பு காட்டும் சமூகத்தையும் இல்லாதோருக்கு கொடுத்துதவும் சமூகத்தை உருவாக்குவோம்.....!!

இறையச்சம் மிகுந்த சமூகத்தை உருவாக்குவோம்...!!

மற்ற மதத்தையும் அவர்களால் வணங்கப்படுகின்ற சமூகத்தையும் அவர்கள் உணர்வுகளை மதிக்கக் கூடிய சமூகத்தைய் உருவாக்குவோம்....!!

சிறந்த அரசியல்வாதிகளையும் கன்விமான்களையும் எம் சமூகத்தில் உருவாக்குவோம்....!!

சமூகம் சாக்கடைப் பாதைக்கு சென்று கொண்டிருக்க எங்கள் ஒவ்வொருவரின் சுய கொள்கைகளுக்காகவும் கருத்துகளுக்காகவும் சண்டை பிடித்துக் கொண்டிருப்பது அவ்வளவு ஆரோக்கியமல்ல....!!

தொழுகையில் குனூத் ஓதுவதும் அத்தஹிய்யாத்தில் விரலாட்டுவதும் பிரச்சனை அல்ல..எம்மால் நிறைவேற்றப்படுகின்ற தொழுகை இறையச்சம் உள்ளதா என்பதும் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் வகையில் அமைகிறதா என்பதும் தான் பிரச்சனை என்பதை எம் சமூகம் உணர்ந்து அதனடிப்படையில் தொழுகைகளை நிறைவேற்றுவோம்...!!

பிறை பார்ப்பதும் அதற்கு சண்டை பிடிப்பதும் அல்ல பிரச்சனை பிடிக்கப்பட்ட நோன்பு அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு பரிந்துரை செய்யுமளவில் எங்கள் நோன்புகளை ஆக்கிக் கொள்ள வேண்டும்...!!

சமூகத்தில் ஆக்கபூர்வமாக ஆக்கிக் கொள்ள ஆயிரமாயிரம் இருக்கிறது தோழர்களே...!!

எதெதற்கோ சண்டை பிடிக்கும் முஸ்லீம்கள் நாளை அல்லாஹ்வையும் ரசூலையும் தங்கள் அமைப்புகளிற்காக பேரம் பேசாதிருக்கட்டும் அல்லது சந்ததிகளை உருவாக்காமல் இருக்காடும்.!

முரண்பாடுகளுக்காக ஒன்று சேரும் சமூகமாக இல்லாமல் பொதுவான கருத்துகளில் ஒன்றிணைய முயற்சிக்க அழைப்பு விடுக்கிறேன். 

எழுத்தாற்றல் மிக்க நண்பர்கள் சமூகத்தில் நச்சு கருத்துகளை விதைக்காமல் நல்லதை பொதுவானதை மட்டும் எழுதட்டும்.

இப்படிக்கு

எந்த அமைப்பையும் சாராமல் ஒரு முஸ்லீம் என்ற அடிப்படையில் பிளவுகளை விரும்பாத நண்பன்..

Thouseef Ahmed


5 comments:

  1. அன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
    அஸ்ஸலாமு அலைக்கும்
    மேற்சொன்ன விடயங்கள் அணைத்தும் ஒரு இஸ்லாமிய சமூகத்தில் காணப்படக்கூடிய முக்கிய பண்புகளாக இருக்கின்றன .இந்த பண்புகளை சமூகத்தில் வேரூன்ற செய்வதற்கு சிறந்த முன்மாதிரியான இஸ்லாமிய பிரச்சாரகர்கள் தேவை .அவர்கள் சம்பளத்திற்கு இஸ்லாமிய பிரச்சாரம் செய்யாமல் தனது சொந்த உழைப்பில் செலவு செய்து பிரச்சாரம்
    செய்பவர்களாக இருந்தால் அதன் விளைவு வெற்றிகரமாக அமையும் .எனவே பொருளாதார வசதி படைத்த குடும்பங்களில் இருந்து இஸ்லாமிய பிரச்சாரகர்கள் உருவாக வேண்டும் .

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள THOUSEEF AHMED,

    உங்கள் ஆக்கம் உங்களை ஒரு பெயரில்லாத அமைப்பில் கொண்டுபொய் விட்டுள்ளதை நீங்கள் உணரவில்லை என்பதை உங்கள் ஆக்கத்தின் நடுப்பகுதியும் இருதிபகுதியும் அதை எடுத்துக்காட்டுகிறது. நான் இறுதியிலிருந்து வருகிறேன்.

    முதாலாவது, ”எந்த அமைப்பையும் சாராமல் ஒரு முஸ்லீம் என்ற அடிப்படையில் பிளவுகளை விரும்பாத நன்பன்” என்று முடித்தீர்கள். இது சரியாக ஒரு நாஸ்திக கூட்டம் சொல்வது பொலல்லவா இருக்கின்றது. ஏனென்றால், அவரகளும் சொல்வார்கள் நாம் எந்த கடவுள் கொள்கையும் அமைப்பும் அற்றவர்கள் என்று. அடிப்படையே இல்லாத இந்த நாஸ்திக கூட்டம் உளருவது போல் நமக்கு உளரமுடியாது. முஸ்லீம் என்றால் நல்ல கொள்கை கோற்பாடுகள் கொண்ட ஒரு அடிப்படை வாதியாக இருக்கவேண்டும். அப்படியென்ரால், அந்த நல்ல கொள்கை கோற்பாட்டை எங்கு இருந்து பெறுவது இந்த அடிப்படையை விட்டு எப்படி ஒரு முஸ்லீம் நான் முஸ்லீமென்பது. வெறுமனே முஸ்லீம் என்பதால் அவர்கள் முஸ்லீம் ஆவார்களா? அப்படியென்றால் கீழுள்ள முஸ்லீம்களை எந்த அடிப்படையை கொண்டு வித்தியாசப்படுத்துகிறோம்?

    ”சியா” (Iran 94%, Azerbaijan 75%, Iraq 63%, Bahrain 62%, Yemen 47%, Lebanon 41%, Pakistan 20%, Turkey 20% etc...)
    இவர்களில் இமாம் ரபிதி சியா, இஸ்மாயிலி சியா, அலவி-நுசைரி சியா, டுர்சியா, செzய்தி சியா இப்படி பல பிறிவுகள் அவர்களிளும் உள்ளன.

    ”ஸலபீ, ஸுபீ” இவர்கள் அதிகமா (Egypt, Libya, Syria, Sudan, Morocco, Turkey, Pakistan, India etc...) இன்னும் சில நாடுகளிலும் சிறுதலவிலும் இருக்கறார்கள்.

    இரண்டாவது, தொழுகையில் குனு”திலும், அத்தஹிய்யாத்தில் விரலாட்டுவதிலும் பிரச்சனை இல்லாமல் இறையச்சத்தோடு தொழுகையை நிறைவேற்றி அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தொழுகையாக அமைப்போம் என்று கூறுகிரீர்களே இதுவும் நீங்கள் ஒரு பெயரில்லா அமைப்பின் அடிப்படையிலே இருந்து தான் விலக்கின்றீர்கள் என்பது புரிகிறது.

    அல்லாஹ் ஏற்றுக்கொள்ளக் கூடிய தொழுகை முறையை சொல்லித்தந்தது யார்? இப்போ நீங்கள் காட்டவேண்டிய அடிப்படை எங்கே? முஸ்லீம் என்ற பெயரை மட்டுமா? அல்லது எம் பெறுமானார் (ஸல்) அவர்களையா? நபி பெறுமானர் (ஸல்) அவர்களை நீங்கள் எடுத்துக்கொள்வீர்கலானால் அதை எங்கிருந்து எடுக்கவேண்டும்? அஸ்சுன்னா அங்கே செல்வீர்கள் அஸ்சுன்னா எங்கிருந்து உதயமாகின்றது? அல்குர்ஆனுக்கு விலக்க உரையாக தான் அது அமைகிரது. எனவே ஒரு முஸ்லீமிக்கு அல்குர்ஆனும் அஸ்சுன்னாவும் முதலில் அவசியம். இவ்விரண்டிலுமிருந்து தான் உங்கள் செயல்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளக் கூடியவைகளாக பார்ப்பானே தவிர நீங்கள் சொல்வது போல் வெறுமனே முஸ்லீமை பார்த்தல்ல.

    ழூன்றாவது, பிறை பார்ப்பதும் அதற்கு சண்டை பிடிப்பதுமல்ல. அல்லாஹ் விடத்தில் எம் நோம்பு சிரியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்துள்ளதா என்று பார்க்கவேண்டுமென்று கூறுகிரீர்களே! அப்படியானால் நோம்பு மட்டும் தான் நமக்கு கடமை, பெறுனால்கள் ஒரு சம்பிரதாய விடயம் மட்டும் தான் என்று சொல்ல வருகிரீர்களா? உங்களுக்கு முஸ்லீம் என்ற பெயர் மட்டும் தான் தேவை, அவர்களின் அமல்கலை இறையச்சத்தோடு சரியான முரையில் செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் மட்டும் தான் தேவை. அவைகளை சரியா தவரா என்று உரசிப்பார்க்கத் தேவையில்லை. வெறுமனே முஸ்லீம் என்ற பெயரில் வாழ்வோம்.

    நீங்கள் சொல்வதை பார்த்தால் மதங்கள் தேவையில்லை, நாஸ்திக கொள்கை மேலானது. அங்கே சரியா தவரா என உரசிப்பார்க்க ஒரு கொள்கை கோட்பாடு கிடையாது, சண்டைகள் சச்சரவுகள் பிளவுகள் ஏதுமிருக்காது விரும்பியபடி வாழலாம்.

    எனவே, இஸ்லாத்தைப்பற்றி ஆக்கங்கள் அமைக்கும் போது அதன் அடிப்படை கொள்ககைகளைக் கொண்டு அமையுங்கள் அப்பொது வல்ல நாயன் நம் அனைவருக்கும் ஒளியை சீராக்குவான்

    ReplyDelete
  3. இதை நீங்கள் சொல்லிக்கொண்டே இருந்தால் சமுதாயம் உங்களை ஒரு பிரிவாக கருதும்

    ReplyDelete

Powered by Blogger.