Header Ads



'முஸ்லிம்கள் அரசுடன் இல்லை என்பதை மத்திய மாகாண தேர்தல் முடிவுகள் பொய்யாக்கும்'


(எம்.எம்.எம். ரம்ஸீன்)

முஸ்லிம்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இல்லை என்ற வசனத்தை எதிர்வரும் மத்திய மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் பொய்யாக்கும் என்று முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.ஆர்.எம். ஹம்ஜாத் குறிப்பிட்டார். 

கம்பளையில் அம்பகமுவ வீதியில் நேற்று 0.08.2013 1மாலை அவருக்கு ஆதரவாளர்களால் வழங்கப்பட்ட வரவேற்பின் போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

முஸ்லிம்கள் ஆளும் கட்சியுடன் இல்லை என்ற கருத்து நிலவுகின்றது. ஆனால் இக்கருத்தை மாற்றியமைக்கும் காலம் வந்துள்ளது. இம்மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் கண்டி மாவட்ட முஸ்லிம்கள் ஆளும் கட்சியுடன் இருப்பதை நிரூபிக்கும் என்றார். இதில் பிரதியமைச்சர் அப்துல் காதரும் கலந்து கொண்டார். 

6 comments:

  1. Ok, we'll see on Sept 22nd.

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வதும் ஒரு வகையில் சரிதான் முஸ்லிம்களின் ஈமான் மிகவும் பலஹீனம் அடைந்துள்ளது அல்லாஹ்வை மாத்திரம் பயப்படவேண்டிய உள்ளம் உங்களைப்போன்ற இஸ்லாத்திற்கு எதிரான அரசியல்வாதிகளை கண்டு அஞ்சுகின்றனர்
    அரசாங்கம் பகிரங்கமாகவே முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வளவு அட்டகாசம் புரிந்தும்கூட இன்னும் முஸ்லிம்களில் அதிகமானோர் ஏன் இஸ்லாமிய விரோத ஆட்சிக்கு ஆதரவு வழங்குகின்றனர் என்பதை நினைத்தால் கண்களில் கண்ணீர்தான் வருகின்றது
    முஸ்லீம்களே நமது நிரந்ததர வசிப்பிடம் மறுமை எனவே இவ்வுலக வாழ்கையின் சுகபோகங்களுக்காக உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள்

    ReplyDelete
  3. A good joke...

    ReplyDelete
  4. Mama ..............Mama ..................Mama....................hhhhhhhh/

    ReplyDelete
  5. அவர் சொல்வது சரிதான். முஸ்லிம்கள் பொது பல சேனாவுக்கு எதிராக இல்லை என்பதை கண்டி மாவட்ட முஸ்லிம்கள் எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி நிரூபிப்பார்கள். அதைத்தான் அவர் அப்படிச் சொல்லுகின்றார்.

    -புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  6. யுத்தத்துக்குப் பின்னாலான பெரும்பான்மையான நாட்டு மக்களின் அரசியல் மற்றும் வாழ்வியல் போக்குகளை கவனத்திலெடுத்து மதிப்பளிக்காது தொடர்ந்தும் ஒரு சமூகம் அடங்காப்பிடாரியாக செயற்பட முயலுமானால் அதன் தலைவிதிக்கு அதுவே காரணமாகிவிடும்.
    கண்டி மாவட்ட முஸ்லிம்கள் மாத்திரமல்ல சிதறி வாழும் பிரதேசங்களிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் தமது அரசியல், சமயத் தலைமைகளின் பலம்-பலவீனம் ஆகியவற்றின் சக்திமட்டத்தை உணர்ந்து சிந்தித்துச் செயற்பட வேண்டும். மாறாக தூண்டப்படும் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டால், ஒட்டகத்தைக் கட்டிவைக்கத் தவறிய சமூகமாய் கைசேதப்பட வேண்டிய நிலைக்கு அது தள்ளப்பட்டுவிடும் என்பதில் சந்தேகமில்லை.

    ReplyDelete

Powered by Blogger.