Header Ads



எதிர்காலங்களில் துயரங்களை எதிர்நோக்க நேரிடலாம் - ஏ.எம்.ஜெமீல்

எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் ஆட்சியாளர்கள் தமது அதிகார பசிக்காக அப்பாவி மக்கள் மீது ராணுவத்தினரை ஏவி விட்டு கொடூர தாக்குதல் நடத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம் என கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் மு.கா.இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

இத்தகைய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடவடிக்கைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் அரபு நாடுகளின் கூட்டமைப்பும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

"எகிப்தில் நீண்ட கால ஏகாதிபத்திய ஆட்சிக்குப் பின்னர் ஜனநாயக ரீதியில் அந்நாட்டு மக்களின் ஏகோபித்த ஆணையுடன் ஆட்சி பீடமேறிய முற்போக்கு சிந்தனை நிறைந்த இஸ்லாமிவாதியான முஹம்மட் முர்சியை பலாத்காரமாக பதவி நீக்கி விட்டு மேற்குலகின் கைப்பொம்மையாக செயற்படக் கூடிய ஒருவரை பதவியில் அமர்த்துவதற்காக இன்று அந்நாட்டின் அப்பாவி குழந்தைகள், பெண்கள், முதியோர் என்ற பாகுபாடில்லாமல் குண்டு மழையினால் மனிதப் படுகொலைகள் புரியப்படுகின்றன. இதனால் அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை சிரியாவில் தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக அங்கு பாசிச ஆட்சி நடத்தி வருகின்ற மன்னர் அந்நாட்டின் அரபு வசந்த போராட்டத்தை முறியடிப்பதாக சூளுரைத்துக் கொண்டு அப்பாவி மக்களை கொன்றொழித்து வருகின்றார்.

இந்த காட்டு மிராண்டித்தனமான தாக்குதலினால் சிரியாவில் கடந்த ஒரு வருட காலத்தில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இதனை விட தற்போது அங்கு இரசாயன குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதால் குழந்தைகள், பெண்கள் மயோதிபர்கள் என ஆயிரக்கணக்கானோர் துடி துடித்து மரணிப்பதை தொலைக்காட்சிகளில் பார்த்து கண்ணீர் சிந்துகிறோம்.

இக்கொடூரமான இரசாயன குண்டுத் தாக்குதல் சிரியாவில் ஒரு ஹிரோஷிமா, நாஹசாக்கியை உருவாக்கி விடும் என்பதில் சந்தேகமில்லை.

பொதுவாக எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் தமது அதிகார பசிக்காக அப்பாவி மக்களின் உயிர்களை ஆட்சியாளர்கள் வேட்டையாடி வருகின்ற போதிலும் சில மேற்குலக நாடுகள் அதில் மூக்கை நுழைத்து தமது அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனவே தவிர மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கு முனையவில்லை.

அதேவேளை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அரபு நாடுகளின் கூட்டமைப்பு ஆகியன கூட இக்கொடூரமான தாக்குதல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு ஆக்கபூர்வான முயற்சிகளை எடுக்காமல் இருப்பது மிகவும் கவலைக்கும் கண்டனத்திற்கும் உரிய விடயமாகும்.

ஆகையினால் இவ்விரு சர்வதேச அமைப்புகளும் எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் கொடுங்கோல் ஆட்சியாளர்களிடமிருந்து அப்பாவி மக்களை காப்பற்றுவதற்கு முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எமது மக்கள் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன் அவ்விரு நாடுகளிலும் தாக்குதல் நடவடிக்கைகளினால் காயமடைந்து உயிருக்கு போராடி வருகின்ற மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பாரிய நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் நமது நாட்டு வைத்தியர்கள் அங்கு சென்று மனிதாபிமான உதவி புரிவதற்கு முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்.

கடந்த காலங்களில் நமது நாட்டில் நிகழ்ந்த யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தங்களின் போது வெளிநாடுகளைச் சேர்ந்த தொண்டர்களே இங்கு வந்து மீட்பு பணிகளிலும் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர் என்பதை நாம் எளிதில் மறந்து விட முடியாது.         

அதுபோல் எதிர்காலங்களிலும் நமது நாட்டு மக்கள் இவ்வாறான துயரங்களை எதிர்நோக்க நேரிடலாம் என்பதை கருத்தில் கொண்டு இத்தகைய மனிதாபிமான பணிகளுக்கு நமது மைந்தர்கள் அர்ப்பணிப்புடன் களமிறங்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்

5 comments:

  1. I appreciate your saying,we should pray Allah to get help for innocent people in Syria and Egypt

    ReplyDelete
  2. சார், சிரியாவில் ஜனாதிபதி ஆட்சி தான் நடக்கிறது. திருத்திக் கொள்ளுங்கள்.

    இவ்வளவு உணர்வுள்ள உங்களுக்கு இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள் கண்ணுக்கு தெரியவில்லையோ..?

    முஸ்லிம்களின் குரல் பாராளுமன்றத்திலும் இந்த முழு உலகத்திலும் ஒலிக்க வேண்டும் என்பதற்காக பெரும் பெரும் தியாகத்துக்கு மத்தியில் ( பணம், பொருள், காலம், நேரம், உயிர் ) இந்த முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது அதன் போக்கு நீங்களும் உங்கள் தலைமத்துவவும் தன்மானம் இழந்து , உடமைக்கும் பதவிக்கும் அலையும் கூட்டமாக உள்ளது. எப்படி உங்களால் இப்படி எல்லாம் அறிக்கை விட முடிகிறது...????.

    சட்டமும் ஒழுங்கும் இந்த நாட்டில் நிலை நாட்டப்படவில்லை என்று உங்கள் தலைமைத்துவம் கூறுகிறது ஏன் இந்த விடயத்தை அரபு நாடுகளும், ஜக்கிய நாடுகள் சபை போன்றவை தலையிட வேண்டும் என உங்களால் அறிக்கை விட முடியவில்லை.

    தயவு செய்து சிந்தியுங்கள், தன்மானம் உள்ளவர்களாக நீங்களும் உங்கள் தலைமைத்துவமும் செயற்படுங்கள்.

    ReplyDelete
  3. SIRIYAVUKKAHA KOOPPADU PODUM UNKALIN ELUTHTHALARUKKU NANRY,
    13VATHU THIRUTHTHA SATTATHTHAI NEEKKAKOODATHU ENRU MAHANASABAIL PIRERANAI KONDU POHA UNKAL KATCHIENAL THANTHA PORUPPAI URIYA KALATHTHUKUL KODUKKAMAL ARASUDANUM BAZEERUDANUM SERNTHU SALAPPI VITTEERKALE (Bazeer anru trincovil ninrathodu unkaludan pesium ullar) , ITHU EMATHU SAMOOHATHTHUKKU SEITHA THUROKAM ALLAVA,NEELIKKANNEER SIYAVUKKAHA VADIKKINREER.......... PAVAM EMATHU SAMOOKAM....

    ReplyDelete
  4. ஒரு மனிதன் நல்லதை எண்ணும்போதும் நல்லதைப்பற்றிப்பேசும் போதும் நாம் அவற்றை வரவேற்று பாராட்டி தட்டிக்கொடுப்பதே நல்லது அதில் குறைகண்டு நோகடிக்கவேண்டாம். மனிதர்கள் நல்லவைகள் செய்வதற்கும் தீயவழியில் நடப்பதற்கும் அவனது சுற்றுச்சூழலே காரணமாக அமைகின்றது.

    ReplyDelete
  5. ஒரு மனிதன் நல்லதை எண்ணும்போதும் நல்லதைப்பற்றிப்பேசும் போதும் நாம் அவற்றை வரவேற்று பாராட்டி தட்டிக்கொடுப்பதே நல்லது அதில் குறைகண்டு நோகடிக்கவேண்டாம். மனிதர்கள் நல்லவைகள் செய்வதற்கும் தீயவழியில் நடப்பதற்கும் அவனது சுற்றுச்சூழலே காரணமாக அமைகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.