Header Ads



முஸ்லிம் காங்கிரஸிலிருந்து உடனடியாக 5 பேர் பதவி நீக்கம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கட்டுபாட்டை மீறிய அரசியல் உச்சபீட உறுப்பினர்கள் பதவி நீக்கம்,  கட்சி அங்கத்துவத்திலிருந்தும் இடைநிறுத்தம்

கட்சியின் அரசியல் உச்சபீடத்தில் இருந்து நீக்கப்பட்ட சகோ. ஆப்தீன் எஹியா, ஏ.எல்.எம். மில்ஹான், எஸ்.எச்.ஏ. கரீம், எம்.கே.எஸ் முனாஜித், எம்.எச்.எம். நஜாத் ஆகியோருக்கு முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகத்தினால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பொருளடக்கம் பின்வருமாறு,

தற்போது நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தல்களுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்களின் வேட்பாளர் பட்டியல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் புத்தளம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் தாங்கள் வேறாக கையொப்பமிட்டுள்ளதாக அறியக்கிடக்கிறது. 

இத்தேர்தல்களில் தாங்கள் மனுத்தாக்கல் செய்துள்ள மாவட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மரச்சின்னத்தில் போட்டியிடுவதற்காக எடுத்துள்ள முடிவை தாங்கள் உதாசினம் செய்துள்ளதுடன் கட்சியின் யாப்பையும் கட்டுப்பாட்டையும் மீறியுள்ளீர்கள். 

எனவே கட்சியின் யாப்பின் அடிப்படையில் தனக்குள்ள அதிகாரத்தினைப் பாவித்து தலைவரவர்கள் உடனடியாக அமுலாகும் வண்ணம் தாங்களை அரசியல் உச்சபீட உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியும், கட்சியின் அங்கத்துவத்திலிருந்து இடைநிறுத்தியும் உள்ளார் என்பதனை அறியத் தருகின்றேன். 

இவ்வறிவித்தல் ஏற்கனவே பதிவுத்தபால் மூலம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ரி. ஹஸன் அலி பா.உ.,
செயலாளர் நாயகம் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  

10 comments:

  1. இந்த நாடகம் இன்னும் எத்தனை நாட்களுக்கோ தெரியவில்லை

    ReplyDelete
  2. Arashiyal laapatthukkah katchiyai mattuma amzu shamooham tharai waatthuk koduppazu?...

    ReplyDelete
  3. இவர்களையெல்லாம் கொண்டுபோய் சேர்த்த தவிசாளரை எப்போது தூக்கி எறிவீர்கள்?

    ReplyDelete
  4. செத்த பாம்புக்கு அடிக்காமல் உள்ளுக்குள் இருக்கும் புடையன் பாம்புக்கு அடியுங்கோ

    ReplyDelete
  5. Allah kooruhinra waliyilum, Mohammad Nabi kooriya waliyilum Nadaththe muyarchi seiyungodaaaaa

    ReplyDelete
  6. தலைவர் அவர்களே, உங்களுக்கு திராணியிருந்தால் கட்சியில் தவிசாளர் பதவியில் இருந்துகொண்டு குள்ளநரியாக வேலை பார்க்கும் ப.சேகுவை முதலில் நீக்குங்கள். இப்படிக் கேட்க எங்களுக்கு உரிமை உண்டு. ஏனென்றால், உண்மையான போராளிகள் நாங்கள்தான்!

    ReplyDelete
  7. தலைவர் அவர்களே, உங்களுக்கு திராணியிருந்தால் கட்சியில் தவிசாளர் பதவியில் இருந்துகொண்டு குள்ளநரியாக வேலை பார்க்கும் ப.சேகுவை முதலில் நீக்குங்கள். இப்படிக் கேட்க எங்களுக்கு உரிமை உண்டு. ஏனென்றால், உண்மையான போராளிகள் நாங்கள்தான்!

    ReplyDelete
  8. இன்னுமா உங்களுக்கு நம்பிகை இரிகி மக்கள் எமரும்மண்டு அத்தா நம்பிக்க இருத்த நிங்கா முட்டாள்

    ReplyDelete
  9. Appa Eastern Provincial Mampar Annach.....................?
    Thivunuk Nagu Kama
    ===========Kalmunai Mohamed Fowse+++++++++++

    ReplyDelete

Powered by Blogger.