Header Ads



கோத்தாவின் இப்தாருக்கு ஹெலிகெப்டரில் அழைத்து வரப்பட்ட முஸ்லிம் பிரதிநிதிகள்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஸ ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு இன்று வியாழக்கிழமை, முதலாம் திகதி கொழும்பில் நடைபெற்றது. இதில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள், முஸ்லிம் அமைப்பின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

வடக்குகிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 42 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் ஹெலிகெப்டர் மூலம் அழைத்து வரப்பட்டு, ஹெலிகெப்டர் மூலமே அவர்களின் ஊர்களுக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கோத்தபய ராஜபக்ஸவின் இந்த இப்தார் நிகழ்வில் மௌலவி உமர் சிங்கள மொழியில் துஆ பிரார்த்தனையில் ஈடுபட, மற்றுமொரு மௌலவி ஆங்கிலத்தில் உரையாற்றியுள்ளார்.

9 comments:

  1. ஹெலிகெப்டரை கண்டதும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இஸ்லாமே மறந்திருக்கும். குட்ட குட்ட குனிகிறவனும் மடயன் குற்றவனும் மடயன்.

    ReplyDelete
  2. அநியாயத்திற்குத் துணை போனவர்கள்!

    -புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. It's not Ifthar but it's Buddhisthar.

    ReplyDelete
  4. சரியாக சொன்னீர்கள் அப்துர்ரஹீம் and புவி ரஹ்மதுழ்ழாஹ்

    ReplyDelete
  5. if they invite us we should participate that is way of islam

    ReplyDelete
  6. srilankan jamiyathul ulma is doing drama their not fearing allah only kotha. jamiathul ulama cant do any thing for muslims their doing politics only how can they attend like this function? its haram they don't know? jamythullama be came very cheaper.

    ReplyDelete
  7. அம்பாரையின் தெயடகிருளவுக்கு வட்டா வெச்சும் நம்மாளுகள் கணக்கெடுக்வில்லை தானே. அதுதான் ஐயா வாகனத்தையே அனுப்பி இருக்கார்.

    பாவம் ஹெலியில் கால் வைக்க வேறு சந்தர்ப்பம் அவர்களுக்கு இல்லையே! அவர்கள் என்ன நமது அரசியல்வாதிகள் போல ஆண்டாண்டு காலத்துக்கா இதையெல்லாம் அனுபவிக்கப் போகின்றாகள். சும்மா சில மணித்தியாலங்களுக்குத் தானே! அவர்களுக்கு என்ன ஆசையிருக்காதா பின்னே!

    ReplyDelete
  8. it fantastic they with islam and muslim it's not iftar ifthar shuld be for the saim
    ya allah nee anaivarukkum valikaddu

    ReplyDelete

Powered by Blogger.