சுத்தமான தண்ணீருக்கான போராட்டத்தில் மரணித்தோர் 3 ஆக உயர்வு
(Tm) வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தோர் தொகை மூன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சுத்தமான தண்ணீர் வழங்குமாறு கோரி கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பொதுமக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்த 19 மற்றும் 17 வயதான இருவர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தோர் தொகை மூன்றாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனி நாடு கேட்டதற்காக வடக்கில் மக்கள் சாவு!
ReplyDeleteகுடி தன்னீர் கேட்டதற்காக மேற்கில் மக்கள் சாவு!!
இது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம்?
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
சுத்தமான தண்ணீர் கேட்டமக்களை சுட்டுக்கொன்ற அரசாங்கத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச்சொல்வோம்.
ReplyDelete