சீனாவில் தமது உரிமைகளுக்காக போராடிய 2 முஸ்லிம்களுக்கு மரண தண்டனை
சீனாவில் நடைபெற்ற கலவரத்தில் 21 பேர் பலியான வழக்கில், 2 பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.சீனாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணம் ஜிங்ஜியாங். இங்கு ஏராளமான முஸ்லீம் பழங்குடியினர் வசிக்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் இங்கு பழங்குடியினருக்கும், மற்றொரு பிரிவினருக்கும் மத்தியில் மோதல் வெடித்தது. இந்த கலவரத்தில் 15 போலீசார் 6 பொதுமக்கள் என 21 பேர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்துக்கு அப்பகுதியில் செயல்பட்டு வரும் முஸ்லிம் பழங்குடியினர்தான் காரணம் என்று சீனா அரசு அறிவித்தது.
இந்த கலவரம் தொடர்பாக வலதுசாரி 19 பேரை சீன போலீசார் கைது செய்தனர். கலவரத்தில் 21 பேர் கொல்லப்பட்டது, பிரிவினைவாதத்தை தூண்டியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் முசா ஹசேன், ரஹ்மான் ஹுபுர் ஆகியோரை ஜிங்ஜியாங் மாகாண போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வெடிபொருள் தயாரித்தது, சதி திட்டம் தீட்டி தாக்குதல் நடத்தியது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இருவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் 3 பேருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட்டது.
சீனாவில் முஸ்லிம்கள் பல்வேறு அடக்குமுறைகளுக்கு உட்பட்டுள்ளதாக சுயாதீன் ஊடகங்கள் கூறிவருகின்றமை கவனிக்கத்தக்கது.
.jpg)
Post a Comment