தொண்டைக்குள் இறுகிய மீன் - 28 வயது இளைஞர் வபாத்
(TN) வீரவல வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் வலையில் அகப்பட்ட மீனை வாயால் கழற்ற முனைந்த வேளை மீன் வாய்க்குள் சென்று பொறுத்துக் கொண்டதால் அவர் உயிரிழந்தார்.
வாய்க்குள் பொறுத்த மீனை வெளியே எடுப்பதற்கு தெபரவேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மீனவர் பின்னர் உயிரிழந்தார்.
ஹம்பாந்தோட்டை சிரிபோபுரவில் வசித்து வந்த 28 வயது மொஹமட் பாயிஸ் எனும் ஒரு குழந்தையின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வாயினுள் உள்ளே சென்ற மீன் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தபோதே இவர் உயிரிழந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment