Header Ads



மெஸ்றோவின் 19 ஆவது வருடாந்த மாநாடு (படங்கள்)


(அப்துல் அஸீஸ் + அஷ்ரப்கான்)

முஸ்லிம் கல்வி சமூக ஆய்வு நிறுவனத்தின் (மெஸ்றோ) 19ஆவது வருடாந்த மாநாடு இன்று சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. தேசியவாத அரசியல் சூழமைவில் முஸ்லிம் சமூகம், சமயம் மீதான அச்சுறுத்தல்களும் அவதானங்களும் என்ற தொனிப்பொருளில் இம் மாநாடு இடம்பெற்றது.

மெஸ்றோ அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர்கள்,  அரசியல் பிரமுவர்கள், சிரேஸ்ட சட்டவல்லுனர்கள், புத்தி ஜீவிகள், சமயப் பெரியார்கள், சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் இம் மாநாட்டில் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர்களான கலாநிதி எம்.எப். ஜலால்டீன், கலாநிதி ரமீஸ் அப்துல்லா மற்றும் மீள்பார்வை பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சிராஜ் மசூர், சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.ரகீப் ஆகியோர்களால் நான்கு தலைப்புக்களில் ஆய்வுச்சிறப்புரைகள் வழங்கப்பட்டன.

No comments

Powered by Blogger.