Header Ads



மெஸ்றோவின் 19வது வருடாந்த மாநாடு


(ஏ.எம்.எம்.றியாத்)

தேசிய வாத அரசியல் சூழமையில் முஸ்லிம் சமூகம், சமயம் மீதான அச்சுறுத்தல்களும் அவதானங்களும் எனும் தொனிப்பொருளில் மெஸ்றோவின் 19வது வருடாந்த மாநாடு எதிர்வரும் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்;தியாலயத்தில் காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

மெஸ்றோ நிறுவனம் 19வது வருடத்தில் காலடி வைக்கும் தருணத்தில் கடந்த காலங்களில் இந்நிறுவனம் முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்களில் பாரிய பங்களிப்பு செய்துள்ளது.

குறிப்பாக கல்வி, அரசியல், சமூக பாதுகாப்பு விடயத்தில் விஷேட கவனம் செலுத்தி பல தாக்கங்களை செலுத்தியுள்ளது. மேலும் தற்போதைய சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கூர்மையான பார்வையை செலுத்தி வருகின்றது.

அந்ந அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தின் உயிர் நாடியான மார்க்கத்தின் மீதான அச்சுறுத்தல்கள், 13வது சீர்திருத்த சட்டமும், முஸ்லிம் அரசியலில் சிந்திக்க வேண்டிய பக்கங்களும், பலமான ஆட்சியுடையோர் தேசிய அரசியலில் முஸ்லிம் அரசியலின் நகர்வுகள், தமிழ் தேசியக் தலைமைகளின் அரசியலில் முஸ்லிம்களின் வகிபங்கு கடந்த காலமும், எதிர்காலமும், இலங்கை முஸ்லிம்களின் அரசியல் இருப்பு தொடர்பாக இந்திய மற்றும் மேற்கத்திய நாடுகளின் கூர்மையான நோக்கு, இலங்கையில் தீவிரமடையும் முஸ்லிம் சமூகத்தின் மீதான மத அச்சுறுத்தல்கள் எனும் தலைப்புக்களில் துறைசார்ந்த நிபுணர்களின் சிறப்புரை இடம்பெறுவுள்ளதுடன் மெஸ்றோ நிறுவனத்தின் இந்ந வருடத்திற்கான புதிய நிர்வாக அறிமுகமும் இடம் பெறவுள்ளது.

இம்மாநாட்டுக்கு நிறுவனத்தின் அங்கத்தவர்களுக்கு கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் புதிதாக இணைய விரும்புவோரும் இதில் கலந்து கொள்ளமுடியும் என அதன் செயலாளர் சட்டத்தரணி ஏ.ஆர்.எம்.சுல்பி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.