அமெரிக்காவுக்கு பீதி - 13 முஸ்லிம் நாடுகளுக்கான தூதரகங்கள் மூடப்படுகின்றன
முஸ்லிம் நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் மீது, அல்குவைதாகள் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதால், இம்மாதம், 4ம் தேதி, இந்த தூதரகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. முஸ்லிம் நாடுகளில் உள்ள தூதரகங்களில், அல்குவைதா வாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, அமெரிக்க புலனாய்வு நிறுவனத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
குறிப்பாக, பாக்தாத், கெய்ரோ, அபுதாபி ஆகிய நகரங்களில் உள்ள தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என, அமெரிக்கா சந்தேகிக்கிறது. இதையடுத்து, இம்மாதம், 4ம்தேதி, தூதரகங்களை மூடும் படி, அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல், ஜோர்டான், பக்ரைன், குவைத், லிபியா, ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஏமன், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் உள்ள தூதரகங்களையும், முன்னெச்சரிக்கையாக, இந்த ஞாயிற்றுக்கிழமை மூட, அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

Post a Comment