இந்த அரசாங்கத்தை இன்னும் 10 வருடங்களுக்கு அசைக்க முடியாது - ரிஸ்வி பாரூக்
(இக்பால் அலி)
மாகாண சபைத் தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. ஜனாதிபதி தேர்தலின் போதே அது சாத்தியமாகும். இன்று சிங்களப் பெருமான்மையின மக்கள் நூற்றுக்கு எழுபது விகிதமான மக்கள் அரசாங்கத்தை அதரிக்கின்றனர். இந்த அரசாங்கத்தை இன்னும் பத்து வருடங்களுக்கு எந்த வகையிலும் அசைக்க முடியாது. ஆட்சியை மாற்றுவது போன்று சமூகப் பொறுப்புணர்வு அற்ற நிலையில் ஒன்றுக் ஊதவாத கட்சிகள் முஸ்லிம்களுடைய வாக்குகளைச் சிறதடிப்பதற்காக களமிறங்கியுள்ளன. கடந்த காலங்களில் விட்ட தவறுகளைப் போல் அல்லாமல் . இவர்களை முற்றாக நிராகரித்து முஸ்லிம்களுடைய கல்வி, ஏனைய சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஆளும் தரப்பில் போட்டியிடுகின்ற முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யுமாறு என்று முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் கண்டி மாவட்ட பொதுசன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் அல்ஹாஜ் ரிஸ்வி பாரூக் தெரிவித்தார்.
ஹரிஸபத்துவ தேர்தல் தொகுதியில் கண்டி மாவட்டத்தில் பொதுசன ஐக்கிய முன்னணி சார்பாக போட்டியிடும் ரிஸ்வி பாரூக்கை ஆதரித்து கல்ஹின்னை ஹல்கொல்ல பிரதேசத்தில் பூஜாப்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர் ஏ. எல். எம். ராசான் தலைமையி நடைபெற்ற கூட்டத்தில் அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
முஸ்லிம்களுடைய உரிமைகள் நிலை நாட்டப்பட முஸ்லிம் மக்களுடைய பிரதிநிதிகள் பாராளுமன்றத்திலும், மாகாண சபைகளிலும், உள்ளூராட்சி மன்றங்களிலும் இருக்க வேண்டும் என்பது போய் இன்று அனைத்திலும் ஆளும் கட்சியின் பக்கம் இருக்க வேண்டும் என்ற கொள்கை முஸ்லிம்களுடைய அரசியலில் ஆட்சி செய்து வரும் நிலையில் முஸ்லிம்களுடைய உரிமை தனித்துவனம் என்பது வாக்குப் பெற்றுவதற்கான வெறும் துரும்புச் சீட்டாகவே மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கினறன. முஸ்லிம்களுடைய தேசிய உணர்வு எனப் பேசுவோர் கண்டி மாவட்டத்தில் எதனைச் சாதித்துள்ளார்கள். ஒரு உறுப்பினர்களைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத இவர்கள் முஸ்லிம்களுடைய வாக்குகளை சிதறடிப்பதற்காக மாத்திரம்தான் களமிறங்கியுள்ளனர்.
கடந்த காலங்களில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட உங்களுடைய பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாடசாலைகள் மற்றும் பாதை அபிவிருத்திகள் எனும் போது பாரிய அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அபிவிருத்திப் பணிகள் மேலும் எந்தவிதமான தங்கு தடைகளுமின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு அசுக்கு வாக்களித்து அரசைப் பலப்படுத்த மூலம்தான் எமது இலக்குகளை வெற்றி கொள்ள முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பொத்துவில் தேர்தல் தொகுதி ஸ்ரீ. சு. கட்சி அமைப்பாளர் மஜீட் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் உரை நிகழ்த்தினர்.


arivillatha kathaya pasuraya onakku nalla irukka ippothu muslim makkal vaakkalitthu palli udaikkappaduvathu pothamal vetrilaikku vaakkalitthu engkaludaya samuhatthai nadu theruvukka vara sollurai unakku onda vote a maddum paaru. muslim makkale neengkal unp kku allathu tamil thesiya kooddamippukku allathu slmc vaakkalingkal allathu vaakkalikkamal irungkal allahukkaha vetrilaikku vaakkalikkatjeerhal neengkal alikkum ovvoru vaakkum ungkalin pillaihalin kalutthil katthi vaippathu ponrathahum
ReplyDeleteஅசைச்சுப் போட்டுறுவானுகள் எண்ட பயத்துல உடுற அறிக்கைதான் இது.
ReplyDeleteநீர் என்ன முஸ்லிம் நாளை விடிவது நிச்சயமில்லாத உலகில் 10 வருடம் எப்படி
ReplyDelete