உலகில் கடனட்டை மோசடி நடக்கும் முதல் 10 நாடுகளில் இலங்கையும் ஒன்று
இலங்கையில் சீனக் குற்றவாளிகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு, காவல்துறையை எச்சரித்துள்ளது. நிதி தொடர்பான குற்றச்செயல்களில் வெளிநாட்டவர்கள் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சீனர்களும், தாய்வானையும் சேர்ந்தவர்களே என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
2010 ஜனவரி தொடக்கம், 2013 ஜுலை 5ம் நாள் வரையான காலப் பகுதியில், நிதி தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 136 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 105 பேர் சீனா மற்றும் தாய்வானைச் சேர்ந்தவர்களாவர்.
ஏழு பேர் இந்தியாவையும், 5 பேர் ரஸ்யாவையும், ருமேனியா, உக்ரேன், மொசாம்பிக் நாடுகளைச் சேர்ந்த தலா 4 பேரும், கமரூனைச் சேர்ந்த 2 பேரும், உகண்டா, இத்தாலி, மாலி, நைஜீரியா, சியராலியோன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் இந்தக் காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் சீனர்களின் வருகை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் கட்டுமானத்துறையில் பணியாற்றுவதற்காகவே வருகின்றனர்.
2005 தொடக்கம், 2011 வரையான காலப்பகுதியில் 26,404 சீனர்களுக்கு இலங்கையில் வேலை செய்வதற்காக நுழைவிசைவு வழங்கப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு இலங்கையில் வந்த சீன அதிகாரிகள் உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து நடத்திய தேடுதல் ஒன்றில், 2 மில்லியன் டொலர் நிதியை மோசடி செய்த கும்பலை சேர்ந்த 17 சீனர்களை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி, உலகில் கடனட்டை மோசடி நடக்கும் முதல் 10 நாடுகளில் சிறிலங்காவும் ஒன்று எனக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
.jpg)
கடன் அட்iடை மோசடியில் இலங்கையில் சீனர்கள் பெரும்பாலும் ஈடுபட்டு உலகில் 10 வது இடம்பெற வழி செய்துள்ளனர்.....நமது அரசியலாளர்கள் செய்யும் மோசடிகளை கணக்கில் எடுத்தால் ....????
ReplyDelete