Header Ads



CIMA பரீட்சையில் அதிகூடிய புள்ளிகள் பெற்று முஸ்லிம் மாணவன் சாதனை

அக்கரைப்பற்றைச் சேர்ந்த கே. எம். அகீல் மொஹமட் (வயது 16) CIMA  - Enterprise Strategy பரீட்சையில் சர்வதேச ரீதியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதல் மாணவனாக சித்தியடைந்து அதற்கான பரிசினையும் அண்மையில் பெற்றுக்கொண்டார். சர்வதேச ரீதியாக 4990 பரீட்சார்த்திகள் தோற்றிய மேற்படி பரீட்சையில் வயதில் குறைந்த முதல் மாணவன் என்ற பெருமையை அகீல் மொஹமட் பெற்று சாதனையை நிலைநாட்டியுள்ளார். 

இவர் தனது ஆரம்ப, இடை நிலை கல்வியை மருதானை சென் ஜோசப் கல்லூரி, பொன்ட் சர்வதேச பாடசாலையிலும் உயர் கல்வியை நுகேகொட லைசியம் சர்வதேச பாடசாலையிலும் கற்றார். 

இங்கிலாந்து ரோபர்ட் கார்டன் பல்கலைக்கழகத்தில் Top CIMA இறுதியாண்டில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் இவர், அக்கரைப்பற்றைச் சேர்ந்த பிரதி சுங்க அத்தியட்சகர் எஸ். டி. கே. மொஹமட் மற்றும் ஆசிரியை சித்தி சலீமா தம்பதிகளின் புதல்வராவார்.

5 comments:

  1. wish you all the best brother akeel

    ReplyDelete
  2. Congratulation all the best keep it up

    ReplyDelete
  3. ما شاء الله
    காபிர்களுக்கு அல்லாஹ் நிறையக்கொடுப்பான் ஆனால் கைவிட்டுவான் !
    முஸ்லீம்களை அல்லாஹ் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான் !

    அகீல் முஹம்மதே..................... உமக்கு நல்லதோர் எதிர்காலம் இருக்கின்றது. முன்னேறிச்செல்வயாக! அத்துடன் நீ இந்த நிலைக்கு வர முதலாவது காரணமாக இருந்த உனது இறைவனுக்கு நன்றி செலுத்துவதட்கு மறந்து விடாதே.

    தயவு செய்து இந்த நட்செய்தியை பொது பல சேனாவிட்கு தெரியப்படுத்த வேண்டாம். வகுத்தெரிச்சலாக இருக்கும் என்பதனால்.

    ReplyDelete
  4. masha allah. la hawla wala kuwwatha illa billah.allahumma laa maania lima a:thaitha wala moothia lima mana:tha.baarakellah.

    ReplyDelete

Powered by Blogger.