Header Ads



வபாத்தான முஸ்லிம் எம்.பி.க்களின் மின்சார கட்டணத்தை செலுத்துவது யார்..?

பாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ மாதிவல இல்லத்திற்கு வாடகை, மின்சார மற்றும் நீர் கட்டணங்களை செலுத்தாத முன்னாளர் பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 பேரில் 11 பேர் அக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கு இன்று (16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது 11 உறுப்பினர்கள் குறித்த கட்டணங்களை செலுத்தினர். 

2001 டிசெம்பர் தொடக்கம் 2004 பெப்ரவரி வரையிலான காலப்பகுதியில், வாடகை, மின்சார, நீர் கட்டணங்களை செலுத்தாத முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

கட்டணங்களை செலுத்தி குற்றச்சாட்டில் இருந்து விடுதலையான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

தம்பி மொகமட் - 31,000.00 

இதேவேளை கட்டணங்களை செலுத்தாத முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8ஆம் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களது விபரம் 

மொகமட் அப்துல் மஹ்ரூப் - 77,200.00 

மொஹிதீன் பாவா அப்துல் அசீஸ் - 35,600.00 


No comments

Powered by Blogger.