Header Ads



கண்டியில் தக்கியா பள்ளிவாசலும், மதரஸாவும் மூடப்படும் அபாயம்

(நவ)

கண்டி வட்டாரதன்னையில் 2008ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் வட்டாரதன்னை தக்கியாவின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

வட்டாரதன்னை தக்கியா கண்டி மாநகர எல்லைக்குள் அமைந்துள்ள வட்டார தன்னை, மாபனாதுவர, கொஸ்மே காடன், லேடி மக்கலம், டினாவ் ஆகிய இடங்களில் வாழும் 300க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்களுக்குள்ள ஒரே வழிபாட்டுத் தலமாகும்.

கண்டி கடுகொடல்ல வீதியைச் சேர்ந்த மர்ஹூம் அல்ஹாஜ் வஹாப்தீனினால் வக்பு செய்யப்பட்ட காணியிலே தக்கியாவும் மத்ரஸாவும் நிர்மாணிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் பிரதேசத்தில் வசிக்கும் சிங்களவர்கள் சிலர் இந்த தக்கியாவை எதிர்த்து கற்களை எறிந்ததனையடுத்து பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதனையடுத்து காணப்பட்ட சமரசத் தீர்வினையடுத்து மத்ரஸாவும் தக்கியாவும் இயங்கி வருகிறது.

பதிவு செய்யப்படாத பௌத்த வழிபாட்டுத் தலங்கள் தவிர்ந்த வழிபாட்டுத் தலங்களை மூடிவிடுமாறு சில கடும்போக்கு அமைப்புக்கள் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் வட்டாரதன்னை தக்கியாவைப் பதிவு செய்வதற்கு அதன் காணியின் உறுதியை அல்ஹாஜ் வஹாப்தீனின் மகன் மறுத்து வருவதனால் தக்கியா மூடப்படும் ஆபத்தை எதிர் நோக்கியிருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

2011 முதல் காணியின் உறுதியை வழங்குமாறு அல்ஹாஜ் வஹால்தீனின் மகனிடம் கேட்டு வந்த போதும் அதனை வழங்க அவர் முன்வராததனால் அவர் தைக்காவை மூடிவிடுவதற்கு முயற்சிக்கின்றார் என்ற அச்சம் தோன்றியிருப்பதாக கண்டி இஸ்லாமிய கலாச்சார நிலையம் தெரிவிக்கின்றது.

கண்டி ஜம்மியத்துல் உலமாவும் இக்காணியின் உரிமையாளரான அல்ஹாஜ் ஏ.டபிள்யூ.ஏ பாரிசினைச் சந்தித்து காணிக்குரிய உறுதியை தைக்காவுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

2 comments:

  1. Owner of the land where the thaikka situated has learned from AMYS (Jamyathusshabab). They promised saying wallahi billahi thallahi that they would register the Zoo mosque under waqfu board within two weeks but so many weeks, months and years passed no registration done. I think, that is the one of the mosques built by them, which mostly sticks on quran and sunnah. During the turmoil created by monks, it was under direct attack you can see of the attack on YouTube , only handful of people in the calibre of good quality strove to get over it, I can name few of them one Minister Rizad , kiyas Hj, Rafeeka Hj and few others but in the end AMYS tried to shut down the house of Allah impliedly by having not registered but Almighty Allah keeps it for true worshippers. Alhamdulillah.

    ReplyDelete
  2. Namathu muslimum sernthu namaku sathi seihiran.what a pity world is this

    ReplyDelete

Powered by Blogger.