நிந்தவூரில் சின்னமுத்து நோய்க்கான தடுப்பூசி வழங்கும் நிகழ்வு
(MOHAMED ISMAIL UMAR ALI)
நாடளாவிய ரீதியில் இன்று 5/7/2013 ஆம் திகதி சின்னமுத்து நோய்க்கான தடுப்பூசி வழங்கும் நிகழ்வு தேசிய ரீதியாக நடைபெறுகின்றது,
MESLES எனப்படும் சின்னமுத்து நோய் MEASLES வைரஸ் இனால் பரப்பப்படுகின்றது கூடுதலாக சிறுவர்களைத் தாக்கும் இவ்வைரஸ் இருமும் போதும்,தும்மும் போதும் ஏற்படும் துளிப்பரவல் மூலம் ஒருவரிலிருந்து மற்றொருவருக்கு பரவுகின்றது. உலகில் இளம் சிறார்களில் அதிக இறப்பு விகிதத்தை ஏற்படுத்துகின்ற இந்நோய்க்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சிறுவர்கள் பலியாகின்றமை குறிப்பிடத்தக்கது
நிந்தவூர் சுகாதாரிய வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் மொத்தம் நான்கு இடங்களில் இந்நிகழ்வு நடைபெறுகின்றது.2012ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் திகதியிலிருந்து 2013 ஜனவரி 5 ஆம் திகதிவரை பிறந்து ஏற்கனவே தடுப்பூசி வழங்கப்பட்ட குழந்தைகளுக்கே இவ்வாறு மீண்டும் தடுப்பூசி வழங்கப்படுகின்றது.
MMR என்ற தடுப்பு மருந்து ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த போதிலும் சில இடங்களில் சின்னமுத்து நோயினால் குழந்தைகள் பாதிக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கையை சுகாதார அமைச்சு உடனடியாக நடத்துகின்றது.மக்களுக்கு பள்ளிவாசல்கள்,மூலம் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அறிவுறுத்தல்களை வளன்கியதைத்தொடர்ந்து மக்கள் குறிப்பிட்ட நிலையங்களுக்கு சென்று குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை ஈற்றுகின்றனர். இன்று தவறுபவர்களுக்கு எதிர்வரும் சனிக்கிழமைகளில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் தடுப்பூசி ஏற்றல் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment