யூசுப் முப்தியின் வழிகாட்டல் - வைத்தியசாலை புனர்நிர்மாணம் செய்து திறக்கப்பட்டது
(Zafran M Mansoor - படம். KB)
பேராதெனிய, பெனிதெனிய மாம்பிடிய வைத்தியசாலையின் முதலாம் இலக்க வாட் முழுமையாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் கொழும்பு நகர் தலைவர் அஷ்ஷெய்க் யூசுப் முப்தி அவர்களின் வழிகாட்டலில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இந்த வாட் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இன்று நம்மத்தியில் பலரும் பல நல்ல விடயங்களை சொல்வார்கள், சமூகத்திற்காக நல்ல விடயங்களை செய்யவேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு இருக்கும், என்றாலும் அனைவருக்கும் தனது நல்லெண்ணங்களை செய்வதற்கான பாக்கியம் கிடைப்பதில்லை. இறைவன் அந்த பாக்கியத்தை எனக்கு கொடுத்தான், அதற்காக முதலில் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன் என்று அஷ்ஷெய்க் யூசுப் முப்தி அவர்கள் உரையாற்றும் பொழுது தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்:
கடந்த 18 மாதங்களுக்கு முன்பதாக எனது தயார் உயிரிழந்தார். அவர் இந்த வைத்தியசாலையுடன் மிகவும் நெருக்கிய உறவு வைத்திருந்தார். எனது குடும்பத்தாரும் இந்த வைத்தியசாலையின் மூலம் பல சேவைகளை பெற்றுள்ளனர். ஆகவே இந்த வைத்தியசாலைக்கு எம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டிய கடமைப்பாடு எமக்கு இருந்தது.
இறைவன் கூறியுள்ளான், ஒருவன் நோயாளியாக இருக்கும் பொழுது அவனிடம் சென்று சுகம் விசாரித்து ஆறுதல் வார்த்தைகள் சொல்வதன் மூலம் எமக்கு நன்மைகளை கிடைக்கும் என்று. பொதுவாக நோயாளர்கள் என்றாலே வைத்தியசாலைகள் தான் நினைவிற்கு வரும், அங்கே பல நோயாளர்கள் இருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் விதத்தில், அவர்களுக்கு தேவையானவைகளை அமைத்துக்கொடுத்து, மனத்திருப்தியுடன் இருப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தால் எவ்வளவு ஆறுதலாக இருக்கும்.
இதனை ஒவ்வொரு உள்ளங்களும் நினைத்தால் இன்று எமது நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் மிகவும் சிறந்த மட்டத்தில் இருக்கும் என அவர் தெரிவித்தார். பொதுப்பணி என்றதும் பள்ளிவாசல்கள், மார்க்கக் கல்வி வழங்கும் நிறுவனங்கள், அனாதை இல்லங்கள், ஆதரவற்றோர்கள் என்று மற்றும் வரையறுக்கப்படவில்லை. மாறாக உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும், மிருகங்களுக்கும் கருணை காட்டுவதைக் கூட நன்மையான காரியங்கள் என்று எமக்கு எமது மார்க்கம் கற்றுத்தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மாம்பிடிய வைத்தியசாலையின் உயர் வைத்திய அதிகாரி, வைத்தியர்கள், பிரதேச அரசியல் பிரமுகர்கள் உட்பட வைத்தியசாலை ஊழியர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.


paththup per immaru sheizal bodubala senavukku shinkalawarhale kal eriwarhal.
ReplyDeleteஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள இது போன்ற வைத்திய சாலைகளின் முன்னேற்றம், புணர் நிர்மாணம் விடயங்களில் எமது செல்வம், முயற்சி ஆகியவற்றை செலவிடுவது மிகப்பெரிய ஒரு காரியம் ஆகும். இதன் மூலம் அல்லாஹ்வின் அருளையும், மக்களிடையே நல்லிணக்கத்தையும் அடைவதில் எந்த சந்தேகமும் இல்லை. எனது கிராமத்தில் உள்ள வைத்திய சாலை என்ற ரீதியில் அதிக மகிழ்ச்சிக்குள்ளாவதோடு வாழ்த்துக்களையும் தெரிவிக்க நாடுகிறேன். Nazeem - Hendeniya .
ReplyDelete