Header Ads



ராஜீவ் காந்தியை துப்பாக்கியால் அடித்த இலங்கை கடற்படைவீரர் மாகாண முறைமைக்கு எதிர்ப்பு

30  வருடகால போரை வெற்றிக் கொண்டுள்ளதால், இந்தியாவின் முன்னால்  இலங்கை அரசாங்கம், மண்டியிடும் தேவையில்லை என இந்திய முன்னாள் பிரதமரை தாக்கிய முன்னாள் கடற்படைச் சிப்பாய் விஜித ரோஹன விஜேமுனி தெரிவித்துள்ளார். 

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை - இந்திய உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்காக இலங்கை சென்றிருந்தார்.

அப்போது,  அவருக்கு வழங்கப்பட்ட கடற்படை அணி வகுப்பு மரியாதையில் அணி வகுத்து நின்றவர்களின் விஜேமுனி ராஜீவ் காந்தியை துப்பாக்கியால் தாக்கினார்.  இதனையடுத்து   சிறையில் அடைக்கப்பட்ட விஜேமுனி, மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கொழும்பில் நேற்று முன்தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், மாகாண சபை முறைமை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும்  மாகாண சபையை ஏற்படுத்தியவர்களில் எவரும் தற்போது உயிருடன் இல்லை என்வும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில் தேர்தல் நடத்தப்பட்டு மாகாண சபை ஏற்படுத்தப்பட்ட போது,  நோர்வே, சுவிஸர்லாந்து  ஆகிய நாடுகள் ஈழம் என்ற தனி நாட்டு கோரிக்கையை அங்கீகரிததன.  இந்த நிலையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் ஏற்படுத்தப்படும் மாகாண  சபையை 15க்கும் மேற்பட்ட நாடுகள் அதனை அங்கீகரித்தால்,  ஆபத்தான நிலைமை ஏற்படும்.

வடமராட்சி இராணுவ நடவடிக்கையின் போது, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது  இராணுவம் தாக்கல்  நடத்தியதன் காரணமாகவே புலிகள் தோல்வியடையும் நிலையில் இருந்தனர் இதனையடுத்தே இந்தியா, இலங்கையில் தலையிட்டு மாகாண சபைகளை ஏற்படுததியது என விஜேமுனி மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.