Header Ads



முஸ்லிம்களுக்கு எதிராக மூளைச் சலவை செய்யப்பட்ட மலாலா..!

(அபூஹாலித்)

இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக தொடர்ந்துவரும் மேற்கத்தேயத்தின் சதிவலைகள் இறைவனின் நாமத்தால் அழித்தொழிக்கப்பட்டே வருகின்றன. இதனால் பெருங் கவலை கொண்டுள்ள மேற்கத்தேயம் மட்டுமன்றி இஸ்லாத்திற்கெதிரான ஏனைய சக்திகளும் பெரும் விரக்தியடைந்துள்ளன.

ஒன்றுக்குப் பல கற்கள் அடித்தால் ஒன்றேனும் ஒன்று தாக்கமலா இருக்கும் என்று ஓயாமல் சதிவலை பின்னுகிறது இஸ்லாமிய எதிர்ப்புச் சக்திகள். தங்கள் பருப்பு வேகாது எல்லாம் வல்ல அல்லாஹ் முஸ்லிம்களுடன் இருக்கின்றான். அவர்களை உடல் உள ரீதியாக எவ்வாறு தாக்கினாலும் அல்லாஹ்வின் அருள்மழை அவர்களுக்குப் பொழிந்து கொண்டேயிருக்கின்றது என்பதை அவர்கள் விரும்பாமலும் ஏற்றுக் கொள்ளத்தான் செய்கின்றனர் என்பதை நாம் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக அறிந்து வருகின்றோம்.

தம் பணபலத்தைக் கொண்டு முஸ்லிம்களை மத மாற்றம் செய்வதற்கும் தயங்காத இந்த வக்கிரபுத்தியுடைய மேற்கத்தேயவர்கள், முஸ்லிம் நாடுகளில் வாழ்கின்ற சில இஸ்லாமிய பெயர் தரித்த புல்லுருவிகளை தம் பணிக்காக ஏவி, அவ்வவ் நாட்டு முஸ்லிம்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி, அப்பிளவுகைள தாம் கண்டு அனுதாபப்படுவதுபோலும் பூதகரமாக்கி இஸ்லாமிய உம்மா கொழுந்துவிட்டெரியும் சதிகளைத் தீட்டினர். வெற்றியும் கண்டனர்.

இந்தவகையில் பல முஸ்லிம் நாடுகளில் பசுமைப் புரட்சி செய்த பல தலைவர்கள் அவர்களால் கொன்றொழிக்கப்பட்டு இன்று மாலுமி இல்லாக் கப்பல் போல நட்டாற்றில் விட்டவர்கள் அந்நாட்டு மக்கள் நிற்கின்றனர் என்பதே உண்மை.

பாகிஸ்தானில் தம் முஸ்லிம் சமூகத்திற்காகக் குரல் கொடுத்து சர்வதேச பயங்கரவாதி என்ற பெயரைக் கொண்டிருக்கின்றனர் தலிபான் சிங்கங்கள். தலிபான்களின் ஒருபக்கத்தை அதாவது கொன்றொழிப்பவர்கள் என்பதை மட்டுமே சர்வதேசத்துக்குக் காட்டுகின்ற மேற்கத்தேயமும், சியோனிட்டுக்களும் இன்று தங்களது கருத்துக்களை வலுவடையச் செய்வதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி மலாலாவை ஆயுதமாக்கிக் கொண்டுள்ளது.

தலீபான்களால் சுடப்பட்டு மயிரிழையில் உயிர்தப்பியவர் மலாலா என்பதே சர்வதேசத்துக்குக் காட்டப்பட்ட பதாதை. மலாலா கல்வி பயிலும் வயதுடைய அதாவது வெறும் பதினாறே வயதுடைய கன்னி. மலாலா மயிரிழையில் உயிர் தப்பியதை அறிந்த மேற்கத்தேயம் அவளை கைப்பொம்மையாக்கி, அவளுக்கு ஆதரவளித்து, அவளை நன்கு போஷித்து அவளது மூளையைச் சலவை செய்துவிட்டது. 

அவளது தந்தை மேற்கத்தேய அடிவருடி. மேற்கத்தேயத்தின் பால் ஈர்ப்பு கொண்டவர். அவரது எண்ணங்கள் மேற்கத்தேயரின் எண்ணங்களுடன் ஒன்றித்துப் பயணிப்பவை. தந்தை வழி மகளும் மாறிவிட்டது பெரும் ஆச்சரியத்திற்குரியதொன்றல்ல. என்றாலும், இஸ்லாமிய ஆடையில் முழுமையாக தற்காக்கும் மலாலா எப்படியோ இஸ்லாமிய சிந்தனைகளை தவறென்று சொல்லும் அளவுக்கு அவள் மாற்றப்பட்டு விட்டாள்.

அவள் நான்கு மாற்றம் பெற்றதால் மேற்கத்தேயத்தின் புகழ்பூத்தவர்களுடன் அவளுடன் படங்கள் எடுத்துக்கொள்வதற்கும் போட்டா போட்டி போடுகின்றனர். அவளது பெயரில் கல்விக்கான விருதை வழங்கப் போவதாக ஐக்கிய நாடுகள் சபையும் அறிவித்துள்ளது. 

வெறும் பதினாறே வயதுடைய மலாலா இலங்கையில் பிறந்திருந்தாள் அவர் க.பொ.த சாதாரணதரப் பரீட்சை எழுத வேண்டியவள். அவள் என்னதான் சாதித்தாள். கல்விக்காக என்னதான் செய்தாள்... விருதுகள் வேறு கல்வியாளர்களின் பெயர்களில் வழங்கப்படாமல் மலாலாவின் பெயரில் வழங்கப்படுவதற்கான காரணம் என்ன? இதன் பின்னணி என்ன? என்ற கேள்விக்கணைகள் எல்லோர் அடிமனதிலும் எழத்தான் செய்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று (13) மலாலா உரையாற்றினாள். ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுவது என்பதே பெரிய விஷயமாக நம்மவர் மத்தியில் பேசப்படுகின்றது. ஆனால் அவள் பேசினாள். தன்னை மறைத்து வந்திருந்த மலாலா, இறைவனின் நாமத்தைக் கொண்டு தனது பேச்சை ஆரம்பித்தாளா? இல்லவே இல்லை. அவள் இன்று சர்வதேச ரீதியில் புகழ்ப+த்த நடிகையாகிவிட்டாள்....

அவளது உரை அவளது உரைதானா? அவள் எழுதியதுதானா? அவளால் எப்படி அவ்வாறு பேசமுடிந்தது. எல்லாம் கண்துடைப்புத்தான்.

'ஒரு புத்தகத்தின் மூலமோ, பேனாவினாலோ, ஒரு ஆசிரியரினாலோ ஒரு உலகத்தையே மாற்றியமைக்கலாம்....", தாலிபான்கள் மீது எனக்கு எந்தவிதக் கோபமும் இல்லை. அவர்கள் என் முன்னால் நின்று என்னைக் கொலை செய்யட்டும்." என்று மலாலா கூறிய வார்த்தைகள் எல்லோர் வாயிலும் தற்போது உச்சரிக்கப்பட்ட வண்ணமுள்ளது.

இது கல்வியலாளர் மலாலாவின் கூற்று.... இல்லை மேற்கத்தேய அடிவருடிகள் அவளை மூளைச் சலவை செய்து அவளுக்குப் பயிற்சி கொடுத்து, அவர்களுடைய வெள்ளைத் தாளில் இஸ்லாமியர்கள் பயங்கவாதிகள் என்று சிவப்பு மையினால் எழுதிக் கொடுத்தவை.

இஸ்லாமிய பெயர் தாங்கிய இஸ்லாமிய எழுத்தாளர்களையும் இந்த மேற்கத்தேயம் விட்டுவைக்கவில்லை. சாத்தானிய வசனங்கள் எழுதிய ஸல்மான் ருஷ்திக்கும், லஜ்ஜாவை எழுதிய தஸ்லிமா நஸ்ரினுக்கும் அடைக்கலம் கொடுத்தது ஏன்? ஈரானின் தலைவர் ஆயத்துல்லா அலி கொமெய்னி ருஷ்தியின் தலைக்கு பேரம் பேசிய போது உடனே அடைக்கலம் கொடுத்தது மேற்கத்தேயம்...... இன்று மலாலா... 

மலாலா தலிபான்களால் உண்மையில் தாக்கப்பட்டிருந்தால், சுடப்பட்டிருந்தால் அது தவறு என்று எல்லோரும் சொல்லும் அதேவேளை, இன்று மலாலா இறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றே மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

அவளை அரங்கத்து நாயகியாக்கி இஸ்லாத்திற்கு சேறு பூச மேற்கத்தேயம் எந்த வழிவகைகளைக் கையாண்டாலும் அனைத்தும் ஆற்றில் கரைத்த புளி போல ஆகிவிடும் என்பதில் கிஞ்சித்தேனும் சந்தேகம் இல்லை என்பதே அல்லாஹ்வை நம்புகின்ற முஸ்லிம்களின் ஒரே எண்ணப்பாடு....!

ஆப்ரஹாவின் யானைப் படையை சிறிய கூழாங்கற்களைக் கொண்டு அபாபீல் பறவைகள் மூலம் அழித்தொழித்த இறைவன் குன் (ஆகுக!) என்றுவிட்டால் இவர்களின் சுதியாட்டமெல்லாம் கற்களாகிவிடும் என்பதே உண்மை! அதற்குரிய நாட்களும் வெகுதூரத்தில் என்று நம்பலாம்!!

11 comments:

  1. அது அபுலஹபின் யானைப்படை அல்ல அப்ரஹாவின் யானைப்படை

    ReplyDelete
  2. இதெல்லாம் ஜுஜுபீ.......!!
    எவ்வளவோ பாத்துட்டம் இது என்ன பெரிய விஷயம்....!!!!

    ReplyDelete
  3. abukalidh! fools like you (Taliban minded extremists) should not allow to write articles. Think mala in your sisters point of view.

    Taliban never allow our sisters to goto school. What a team of idots they are under islamic name.

    abukalidah, if we are under taliban rule, your sister will not able to goto school. She will be married to a 60 year old man. you agree with this?

    ReplyDelete
  4. நல்லதொரு ஆக்கம்-
    தன்கையால் தன்கண்ணையே குத்திக்கொள்ளும் மேற்கத்தேயேம்

    ஆப்ரகா வின் யானைப்படை என திருத்தி வாசியுங்கள்

    ReplyDelete
  5. the author of this article seems to support talibans. talibans and al qaida are both same alike. they never fight for freedom. just some jumped up goons

    ReplyDelete
  6. just watch this malala speech, she is starting with allah's name
    -link of malala speech www.facebook.com/scorpiofans

    ReplyDelete
  7. @Zamaan: Well Said Bro...

    ReplyDelete
  8. Talibans killers are working wholeheartedly under the name of Islam and give islam a bad name, while from histories we know that Talib is a person who used to stay in Mosques with the Scholars and he was devoting his life for the sake of getting Islamic education.

    Before the advent of Islam, woman had no position in society. They were at the mercy and caprice of the menfolk and were treated as good and chattels. It was Islam that, for the first time, vindicated the rights of woman and gave them a status unknown and even unthought of this day. They are granted all the fundamental rights. Islam is the unique religion in this respect to endow woman with equal rights and to put her on the same level with man.

    Islam teaches that education of men and women is of equal importance. The Holy Quran holds learning as priceless and tells that only the learned can understand the signs of God and His wisdom, and come close to Him. The Holy Prophet (peace be upon him) has said:

    "It is the duty of every Muslim man and woman to seek knowledge."

    TALIBANS HAVE NO RIGHT AT ALL TO STOP WOMEN'S EDUCATION WHICH IS ENCOURAGED BY ISLAM AND ANY ONE WHO AGAINST EDUCATION IS AGAINST TO ISLAM.

    ReplyDelete
  9. Malala mel kutram solla mudiyathu Ithu Talibankal vitta thavaru Avarkalthaan Ithatkku Pathil solla Vendum.

    ReplyDelete
  10. சிலரின் கருத்துரைகள் அவர்களது அறியாமையை வெளிப்படுத்துகின்றன. அதனாற்றான் மலாலா மீது மேலை நாடுகள் சொல்வதையே திருப்பிச் சொல்கின்றனர் அவர்கள்.
    மலாலா இற்றைக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னரேயே தாலிபான் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கியவள். அவள் ஒன்றும் கல்வி மேதையல்ல. அவள் கல்வி கற்கச் சென்றதென்னவோ உண்மை. ஆயினும் தான் சென்ற இடத்தில் கல்வி கற்றுவிட்டு வெறுமனே வீட்டுக்கு வந்திருந்தால் எதுவுமே நடந்திருக்காது.
    சென்ற இடத்தில் சக மாணவர்களிடம் தாலிபான்களைப் பற்றித் தாறு மாறாகப் பேசத் தொடங்கினாள். அவர்களின் பதில்களை வீட்டுக்கு வந்த பின்னர் தன் தந்தையுடன் அலசுவாள். அவளது தந்தை ஒன்றும் இஸ்லாமிய மேதை அல்ல. அவர் ஏற்கனவே மேலை நாடுகளின் அடிவருடி. அவர் தன் மகளின் சாகசத்தைத் தன் எசமானர்களிடம் எத்தி வைத்தார். அவர்களும் அவருக்கு மேலும் வசதியும் ஆலோசனையும் வழங்கினர். மென்மேலும் எதிர்க்கத் தூண்டினர். எனினும் மலாலாவுடன் கற்ற மாணவர்களின் உறவினர்களும் அவ்வியக்கத்தில் இருந்தமையால், எளிதில் இச்செய்தி அவர்களை அடைந்து விட்டது.
    தாலிபான்கள் அவளைப் பல தடவைகள் எச்சரித்தனர். கல்வி கற்று விட்டு வெறுமனே வீட்டுக்கு வந்து உன் வேலையைப் பார் என்றனர். ஆனால் அவள் செய்ததென்ன? மேடை மேடையாக ஏறி, தாலிபான்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினாள். வயதிற் சிறிய ஒருத்தி இப்படித் தொடர் பிரச்சாரம் செய்யும் போது யாரும் சற்று நின்று கவனிக்கத்தான் செய்வர். அவளுக்குப் பின்னாலிருந்து இயங்கியோர் மேலை நாட்டினர் என்பதெல்லாம் அதன் பின்னரே தெரிய வந்தது. அவளது செய்கைகளினூடாக மேலை நாட்டினர் செய்த அட்டகாசம் அளப்பரியன.
    இத்தனைக்கும் தாலிபான்கள் அவளைக் கல்வி பெற வேண்டாமென்றோ பாடசாலைக்குச் செல்ல வேண்டாமென்றோ கூறவில்லை. அவர்கள் கூறியது அவர் தம் இயக்கத்தை வீணாக எதிர்த்துத் தொடர் பிரச்சாரம் செய்ய வேண்டாமென்று தான். ஓர் இயக்கத்தை எதிர்த்துத் தொடர் பிரச்சாரம் செய்யும் எவரும் அவ்வியக்கத்தின் எதிரியாகவே கணிக்கப்படுகின்றனர். அவ்வகையில் அரசியல் அடிப்படையில் மலாலா தாலிபான்களின் எதிரியாகிவிட்டாள்.
    தாலிபான்கள் மட்டும் தம் எதிரிகளுக்கு புரியாணியும் வட்டிலாப்பமும் கொடுத்து, போய் வா மகளே, என்று கூற வேண்டுமா? முஹம்மது நபியையும் இஸ்லாத்தையும் எதிர்த்துத் தொடராகத் தூசித்தோருக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டதென்பது இங்கு கருத்துக் கூறியிருக்கும் ஏனையோர் அறிவரென்று நினைக்கிறேன். இங்கேயும் அதுவே நடந்தது.

    ReplyDelete
  11. இரு நாட்களுக்கு முன்னர் நான் சொன்ன அதே விடயத்தை உறுதிப்படுத்தி தாலிபான்கள் மலாலாவுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். அவள் சுடப்பட்டது அவளது கல்வி நடவடிக்கைகளுக்காகவல்ல, அவள் தாலிபான்களைத் தூசித்துப் பிரச்சாரம் செய்ததற்காக என்று தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள்.

    மேலை நாட்டினரின் செய்திகளை மட்டுமே வாசித்து மேலை நாட்டாருக்குச் சார்பாக எழுதித் தள்ளிய சகோதரர்களின் கவனத்திற்கு மேற்படி விடயம் தொடர்பான இணைப்பை வழங்குகிறேன்.

    http://shine.yahoo.com/video/taliban-pens-letter-gunshot-victim-145750653-cbs.html

    The Taliban wrote a letter to Malala Yousafzai, the Pakistani girl the Taliban shot in the head. The letter does is not apologetic but instead explains she was not shot for her activism for girl's education, but because she criticized the Taliban. Norah O'Donnell reports.

    ReplyDelete

Powered by Blogger.