Header Ads



அல்குர்ஆனை படித்து அறிந்துகொள்ளுமாறு மலாலாவுக்கு தலிபான்கள் கடிதம்..!

பாகிஸ்தானில் பெண்களின் உரிமை மற்றும் குழந்தைகள் கல்வியை வலியுறுத்தி பேசி வந்த பள்ளி மாணவி மலாலா தலிபான்களால் நெற்றியில் சுடப்பட்டார். பின்னர் பிரிட்டன் மற்றும் துபாய் நாடுகளின் உதவியால் சிகிச்சை பெற்று தற்போது லண்டனில் இருந்து படித்து வருகிறார். 

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஐ.நா. சபை கூட்டத்தில் குழந்தைகள் கல்வியை வலியுறுத்தி உணர்ச்சி கரமாக பேசினார். இதனையடுத்து, முன்னாள் சர்வாதிகாரி முஷாரப்பை சுட்டுக்கொல்ல முயற்சித்த தலிபான் போராளி அட்னன் ரஷீத் 2000 வார்த்தைகள் அடங்கிய ஒரு கடிதத்தை மலாலாவுக்கு கடந்த 15-ம் தேதி எழுதியுள்ளார்.  

அதில் அவர் கூறியிருப்பதாவது,

நமது நாட்டிற்கு திரும்ப வர நான் உனக்கு அறிவுறுத்துகிறேன். இங்கு வந்து இஸ்லாத்திற்கு ஆதரவாகவும், பஷ்தூன் கலாச்சாரத்தை மதித்தும் நடக்கவும். உனது நகருக்கு அருகில் உள்ள பெண்கள் இஸ்லாமிய மதரசாவில் இணையவும். அல்லாவின் புத்தகத்தை படித்து அறிந்துகொள்ள வேண்டும். 

இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களின் மோசமான நிலை குறித்து எழுதவும். உலக உத்தரவு என்ற பெயரில் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் கெட்ட கொள்கைகளால் அடிமைபடுத்த விரும்பும் சக்திகளை தோலுறுத்தி காட்டவும். 

தலிபான்கள் பெண்கள் மற்றும் ஆண்களின் கல்விக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் உள்நோக்கத்துடன் எங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதை நாங்கள் எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தலிபான்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படும், மலாலா சுடப்பட்டதை அப்போது ரஷீத் நியாயப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.  

1 comment:

  1. உண்மையை உள்ளபடி சொல்வது நேர்மையான மனிதத்திற்கு அழகு.

    ReplyDelete

Powered by Blogger.