'முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதியின் தலையீடு வேண்டும்'
(மொஹமட் பாயிஸ்)
மகியங்கனையில் உள்ள மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசல் மூடப்பட்டிருப்பதையும், தம்புள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் விடப்பட்டுள்ள எச்சரிக்கையையும், கண்டித்து அதற்காக இரா தொழுகையில் இறைவனிடம் மன்றாடுமாறும் அகில இலங்கை தௌஹீத் ஜமாத் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் அதன் தலைவர் ஸீ.எம். அபுசாலி விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகியங்கனை மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளமை, மற்றும் தம்புள்ள பள்ளிவாசலை அகற்றவும், அங்குள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களை அப்புறப்படுத்துமாறும், பிரிவினைவாத தீய சக்திகள் வலியுறுத்தி வருவது கவலைக்குரிய விடயமாகும். இதனால் முஸ்லிம்கள் தமது புனித நோன்புகால கடமைகளைக் கூட சுதந்திரமாக செயற்படுத்த முடியாதுள்ளமை வருந்தக் கூடிய விடயமாகும்.
ஆகையினால், முஸ்லிம்கள் தற்போது புனித நோன்பு காலங்களில் மேற்கொண்டு வரும் இராத் தொழுகையில் அதாவது, கியாமுல் லைல் தொழுகையில் ஸுஜுதில் இறைவனை மன்றாடி பிராத்திக்குமாறு அகில இலங்கை தௌஹீத் ஜமாத் தன்னுடைய அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், முஸ்லிம் மீது கட்டவீழ்க்கப்பட்டுள்ள வன்முறைகளை தவிர்ப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் தலையிட்டு உடன் நடவடிக்கை எடுப்பதன் ஊடாக முஸ்லிம்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாங்கத்தின் ஒத்துளைப்புடன்தான் இத்தனை அராஜகங்களும் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பது இன்னும் புரியவில்லையா? இவர்களின் அழிவிற்கு துஆ செய்யுங்கள்.
ReplyDeleteநாம் தொழுவது தராவீஹ்
ReplyDeleteஇரவு நேரத்தொழுகைக்கு எந்த இடத்திலும் தராவீஹ் என்று சொல்லப்படவில்லை அதைப்படியுங்கள் முதலில்
ReplyDelete