முஸ்லிம் மாணவியின் கழுத்தை நெரித்தவரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்த மக்கள்
(நஷ்ஹத் அனா)
ஓட்டமாவடி – தியாவட்டவான் பிரதேசத்தில் ஏழு வயதுச்சிறுமியை கடத்த முயற்சித்த ஒருவர் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு வாழைச்சேனை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இன்று (03.07.2013) தியாவட்டுவான் அறபா வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி கற்கும் அபூபக்கர் அரூஸியா என்ற மாணவி பாடசாலை விட்டு வீடு செல்லும் வழியில் சந்தேக நபர் சிறுமியின் கழுத்தை நெரித்த போது கண்ட பொது மக்கள் அவரைப் பிடித்து வாழைச்சேனைப் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
இச் சந்தேக நபர் தன்னைப் பற்றி எதுவும் கூற வில்லையென்றும் இவர் மன நோயாளியாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் அவரது அடையாள அட்டையில் பிறப்பிடம் மாத்தளை என்றும் வசிப்பிடம் ஆலய வீதி ஊத்துச்சேனை வடமுனை என்று உள்ளதாகவும் இவர் தொடர்பாக விசாரித்து வருவதுடன் இவரை இன்று வாழைச்சேனை நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாவும் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதினாரி எம்.பி.ஈ.ஜயவிர தெரிவித்தார்.
.jpg)
Post a Comment