கொழும்பு நகரை சுத்தப்படுத்துவதற்கு கைதிகளை ஈடுபடுத்த திட்டம்
(Nf) கொழும்பு நகரை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் கைதிகளை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளரின் ஆலோசனைக்கு அமைய புதிய திட்டத்தை செயற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திர ரத்ன பல்லேகம குறிப்பிட்டார்.
கொழும்பு மாநகர சபை, பொலிஸார் மற்றும் சுற்றாடல் பிரிவு என்பன இணைந்து இந்தத் திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் கைதிகளை அதிகாரிகள் விசேடமாக கண்காணிக்க உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கூறினார். கைதிகளை சாதாரண உடையில் வீதியை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக சந்திர ரத்ன பல்லேகம மேலும் தெரிவித்தார்.
.jpg)
Who will get this idea in Srilanka? very good. when the election is in the corner they want to let some thugs to run away and help them. There is no way to take them out, so its a fine idea use them for election. - light of Asia
ReplyDelete