முஸ்லிம் எய்ட் ஏற்பாட்டில் மாற்றுமத சகோதரர்களுக்கு உலர் உணவுப்பொதிகள் விநியோகம்
(ஏ.எஸ்.எஸ்.தாணீஸ்)
முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் அனுசரனையில் கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் புனித ரமழானை முன்னிட்டு பல்லின சமூகம் வாழும் பிரதேசங்களில் வறுமைக்கோட்டின் கீழ் மற்றும் விஸேட தேவைக்குட்பட்ட குடும்பங்களின் அன்றாட ஜீவனோபாயத்துக்கான உலர் உணவுப்பொதிகள் சமீபத்தில கந்தளாய் வட்டுக்கச்சி முஸ்லிம ஜீம்ஆ பள்ளிவாயல் வளாகத்தில் வழங்கி வைக்கப்பட்டன. முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் ஏ.ஜி.முஹம்மட் பஹி உட்பட றெக்டோ நிறுவனத்தின் தலைவர் ஜே.எம்.அஸார் மற்றும் கந்தளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.நிமல் பண்டார ஆகியோர்கள் கலந்துகொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.



Post a Comment