Header Ads



பள்ளிவாசல்கள் பற்றிய வாக்குறுதிகள் காற்றோடு காற்றாக பறந்துவிட்டன - அஷ்ஷெய் ஹனீபா

பூர்வீகக் காலந்தொட்டு இந்த நாட்டு முஸ்லிம்கள் சந்ததி சந்திதியாக அனுபவித்து வந்த சமயம் சந்பந்தமான உரிமைகள் அண்மைக்காலமாக குறிவைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சிறிதும் பெருதுமாக ஏறக்குறைய 17க்கு மேற்பட்ட பள்ளிவாசல்களிலிருந்து முஸ்லிம்களைத் தொழுகை நடாத்தவிடாது தடுக்கும் அடாவடித்தனங்கள் அப்பட்டமாகவே அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நேற்று முன்தினம் அக்கரைப்பற்றில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு கூட்டத்தைத்தொடர்ந்து மத்திய குழுவின் உபதலைவர் ஏ.எல். மர்ஜுனின் ஏற்பாட்டின் கீழ் இடம்பெற்ற இப்தார் நிகழ்வின் பின் மத்திய குழுவின் தலைவரும், கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளரும், மாநகரசபையின் எதிர்கட்சி தலைவர் அஷ்ஷெய் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையில் தெரிவித்தார்.  அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

புனித ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு நோற்று இராத்தொழுகைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கடந்த  15.07.2013ம் திகதி இரவு முஸ்லிம்கள் தொழுகைக்காக பாவித்துக்கொண்டிருந்த மஹியங்கனை பள்ளிவாசல் மீது இனந்தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தியதோடு மட்டும் நின்றுவிடாமல், குர்ஆன் மூலம் விலக்கப்பட்ட பன்றியின் இரத்தத்தையும் பள்ளி எங்கும் வீசி அசிங்கப்படுத்தியிருக்கின்றனர். 

உண்மை முஸ்லிம் ஒருவரின் விசுவாசத்தையும், சமயம்சார் உணர்வையும் சீண்டிப்பார்ப்பதற்கென்றே இந்த இழி செயலை மேற்கொண்டிருகின்றனர். உரோசமுள்ள எந்தவொரு முஸ்லீமாலும் இதனை ஜீரணித்துக்கொள்ள முடியாது.

முஸ்லிம்கள் சமயக்கடமைகளில் ஈடபட்டு எழுச்சியடைகின்ற, பயபக்தியில் மேலோங்குகின்ற புனித றமழான் மாதம் வந்தவுடன் இந்த நாட்டில் சிலவருடங்களாக ஏதாவது ஒரு குழப்பம் பூதாகரமாக வந்துவிடுகிறது. 2011ம் ஆண்டு இந்த நாட்டு முஸ்லிம்கள் நோன்பு நோற்றுக்கொண்டிந்த வேளையில் கிறிஸ்பூதங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இதனூடாக முஸ்லிம்களின் இரவு வணக்கங்கள் பாழாக்கப்பட்டதுடன் உயிரிழப்புக்களும் ஏற்பட்டன. குறிப்பாக இப்பூத விளையாட்டுக்களின் ஆடுகளமாக சிறுபான்மை மக்கள் வாழும் பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. பொத்துவில், கிண்ணியா, பூனகரி, யாழ்ப்பாணம் போன்ற பிரதேச மக்கள் இதில் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். 

அரசியல் வாதிகளின் தயவில் ஒழிந்திருந்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ளும் பாதாள உலக கும்பல் போன்றே பள்ளிவாசல்களுக்கும். முஸ்லிம்களின் சமய கடமைகளுக்கும் எதிராக இடையூறுகளையும், சட்ட விரோத நடவடிக்கைகளையும் அடாவடித்தனங்களையும்; புரிகின்ற இனந்தெரியாத கும்பல்கள்கூட சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு பகிரங்கமாக சட்டத்திற்கும், நீதிக்கும் எதிராக பேயாடித்திரிய தலைப்பட்டுவிட்டனர். சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய பாதுகாப்பு அதிகாரிகளும், இவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாக தெரிகின்றது. சட்டத்தை கையில் எடுத்து குற்றம் புரிகின்றவர்களை கைது செய்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்கவும், தவறிவிடுகின்றதாகவும் உணரப்படுகின்றது. 

இந்நாட்டின் ஜனாதிபதி அவர்கள் 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு நாட்டு மக்களை நோக்கி பின்வருமாறு பிரகடனம் செய்தார்கள்;. ' இதன் பிறகு இந்த நாட்டில் இரு இனங்களே இருக்கப்போகின்றன. இந்த நாட்டை நேசிக்கின்ற தேசப்பற்றாளர்கள், மற்றது தேச விரோதிகள். எனவே இந்த நாட்டில் சிங்களவர், தமிழர், முஸ்லிம், பேகர், மலாயர் என்ற வேறுபாடுகள் இனி இருக்கவே மாட்டாது என மிகத் தெளிவாகவும், வெளிப்படையாகவும் தெரிவித்தார்கள். கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போதும் கல்முனையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசா மேடையில் தோன்றி அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் அம்மேடையில் அமைச்சர்களான பௌசி, அதாஉல்லா ஆகியோருடன் ஏனையவர்களும் அமர்ந்திருக்கத் தக்கதாக பின்வருமாறு மக்களுக்கு வாக்குறிதியளித்தார்கள்.  

'தம்புள்ளை பள்ளிவாசல் உடைத்த சம்பவத்தை இதுவரையில் எனக்கு யாரும் தெரியப்படுத்த வில்லை ஆனால் இதற்குப் பிறகு இந்த நாட்டில் உள்ள எந்தவொரு பள்ளிவாசலையோ பன்சலையையோ கோவிலையோ யாரும் உடைப்பதற்கு நான் அனுமதிக்கமாட்டேன்.' 

துரதிஷ்டவசமாக ஜனாதிபதியின் இந்த வாக்குறுதிகள் காற்றோடு காற்றாக பறந்துவிட்டன. ஜனாதிபதியின் இந்த உறுதி மொழிக்குப் பின்பு இந்நாட்டில் ஏறத்தாழ 17க்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இறுதியாக மஹியங்கனை பள்ளிவாசல் உடைக்கப்பட்டு பன்றி இரத்தம் வீசப்பட்டு பின் அப்பள்ளியில் ஜும்ஆ தொழுகையும் நடைபெறாது தடுக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி அவர்கள் நாட்டின் தலைவர் என்ற வகையிலும், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும் தனது நாட்டின் பிரஜைகளையும் அவர் தம் வணக்கஸ்தலங்களையும் பாதுகாக்க வேண்டிய தார்மீகக் கடமையும், பொறுப்பும் அவருக்குள்ளன. ஆட்சி ஆதிகாரத்தில் அமர்த்தப்பட்டுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் இவ்விடயங்கள் தொடர்பாக அமைதி காக்கின்றனர் என்பதற்காக இவ்வனியாயங்களை எந்த வகையிலும் நியாயப்படுத்திவிட முடியாது.

விசுவாசிகளையும், வணக்கவாளிகளையும் பாதுகாப்பதாக அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் வாக்களித்துள்ளான்;. எனவே நாம் எமது கரங்களை எமது இரட்சகன் அல்லாஹ்வின் பக்கம் உயர்த்தவேண்டியுள்ளது. இதற்கு நம்மை வந்தடைந்திருக்கின்ற இப்புனித றமழானை பூரணமாக பயன்படுத்தவும் வேண்டியுள்ளது. நோன்பு நோற்றிருக்கும் வேளையிலும் நோன்பு 15ம் நாளிலிருந்து வித்று தொழுகையில் ஓதப்படும் குனுத்தின் போதும் அல்லாஹ்வின் இல்லங்களை நாசப்படுத்துவர்களினதும், அவர்களுக்கு துணை புரிபவர்களினதும் தீங்குகளிருந்து நம்மையும், நமது சமூகத்தையும் குறிப்பாக நமது பள்ளிவாசல்களையும் பாதுகாக்கும்படி காத்திரமான பிரார்த்தனைகள் புரிவதில் நாம் அனைவரும் கவனம் செலுத்துவோமாக...

5 comments:

  1. You people are saying to whom about this? No point of giving statements to media especially Jaffnamuslim. Where is your leader Mr.Hakeem? Yesterday another statement from Mr.Hasan Ali.Why can't they voice them in Parliament? Cowardish act. All these statements are coming now because of the coming election, isn't it? Come out and act independently if you all are real Muslims. Don't cheat the Muslim community by your series of dramas.

    ReplyDelete
  2. You are right Brother Wise Man!

    ReplyDelete
  3. உங்களின் கட்சித் தலைவர்கள் எப்போது காற்றோடு காற்றாகப் பறக்கப் போகின்றனர்?

    ஆமாம்.. நீங்கள் அக்கரைப்பற்று மாநகர சபையில் இந்தப் பள்ளிவாசல் தாக்குதல்கள், பல சேனாக்களின் அட்டகாசங்கள் பற்றி ஒரு தனி நபர் பிரேரரண சமர்ப்பித்தால் என்ன?

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  4. ஈமான் கொண்டோரிடமிருந்து அவர்களின் உயிர்களையும் செல்வங்களையும் சொர்க்கத்திற்கு பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர்.அவர்கள் கொல்கின்றனர், கொல்லப் படுகின்றனர். இது தவ்ராத், இன்ஜீல், மற்றும் குர்ஆனில் அவன் தன் மீது கடமையாக்கிக் கொண்ட வாக்குறுதி, அல்லாஹ்வை விட தன் வாக்குறுதியை நிறைவேற்றுபவன் யார்? நீங்கள் ஒப்பந்தம் செய்த இந்த வியாபாரத்தில் மகிழ்ச்சியடையுங்கள், இதுவே மகத்தான வெற்றியாகும். (சூரா அத்தவ்பா 111)

    ReplyDelete
  5. அவரை எடுத்துச்சொல்ல விடுங்கோவன்

    ReplyDelete

Powered by Blogger.