முஸ்லிம் வர்த்தகரின் படுகொலையுடன் வாஸ் குணவர்தனவின் மகனுக்கும் தொடர்பு..?
முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தனவின் புதல்வரான ரவிந்து என்பவர், பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலையூடன் தொடர்புபட்டுள்ளதாக குற்றவிசாரணை பிரிவினர் 09-07-2013 நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக சந்தேகத்திற்குரியவரான ரவிந்துவை கைது செய்ய வேண்டும் எனவூம் அவரகள் குறிப்பிட்டு;ள்ளனர். அவரைக் கைது செய்வதற்காக 3 தினங்கள் வரை சந்தேகத்திற்குரியவரின் இல்லத்திற்கு சென்றதாக குற்றவிசாரணை பிரிவினர் தெரிவித்தனர்.
எனினும், புதல்வரை கைதுசெய்வதற்கு வாஸ் குணவர்தனவின் மனைவி இடமளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டனர். முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன எதிர்வரும் ஜூலை 19 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலையூடன் தொடர்புபட்டதாக கடந்த மாதம் 10ஆம் திகதி கைது செய்யப்பட்ட வாஸ் குணவர்தன இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கான விளக்கமறியல் எதிர்வரும் ஜூலை 19ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தகர் தொம்பே பிரதேசத்தில் வைத்து கடந்த 22 ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், நீதிமன்றத்திற்கு சென்ற முன்னாள் பிரதி காவல்துறை மாஅதிபர் வாஸ் குணவர்தனவை பேருந்தில் ஏற்ற முற்பட்ட போது பெண்ணொருவர் குற்றச்சாட்டை முன்வைத்து தூற்றியதன் காரணமாக அங்கு தீவிர நிலை ஏற்பட்டது. குறித்த பெண்ணின் புதல்வர் கடந்த 2009 ஆண்டு ஜுன் மாதம் 24 ஆம் திகதி கொழும்பு குற்றதடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்பின்னர் அவர் ஜுலை முதலாம் திகதி கொல்லப்பட்டதாகவூம் அதற்கு வாஸ் குணவர்தன தொடர்புபட்டிருப்பதாகவூம் அந்த குற்றம்சுமத்தினார்.
.jpg)
Post a Comment