Header Ads



'அல்லாஹ்' என்ற வார்த்தையை முஸ்லீமல்லாதவர்களும் பயன்படுத்தலாம் என்பதற்கு எதிர்ப்பு

மலேசியாவிற்கான வத்திக்கானின் முதல் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவரை விலக்கிக்கொள்ளுமாறு கோரி பல முஸ்லீம் ஆர்வலர்கள் மலேசியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றனர்.

மலேசியாவிற்கான முதல் வத்திக்கான் தூதரான பேராயர் ஜோசப் மரினோ, 'அல்லா' என்ற வார்த்தையை முஸ்லீமல்லாதவர்களும் பயன்படுத்தலாம் என்ற வாதத்துக்கு ஆதரவு தந்ததற்காக நாட்டிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

மலாய் மொழியில் மொழியாக்கம் செய்யப்படும் பைபிள்களிலும் மற்ற இலக்கியப் படைப்புகளிலும் , 'கடவுள்' என்ற பதத்தை , 'அல்லா' என்று மொழி பெயர்க்க உள்ள உரிமை குறித்து ஒரு சட்டரீதியான போராட்டம் நடந்துவருகிறது.

அது குறித்து ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்த முஸ்லிம் பெரும்பான்மை நாட்டுக்கு தூதராக நியமிக்கப்பட்ட மரினோ கருத்து கூறியிருந்தார்.
ஆனால் மலேசியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தான் தலையிட முயலவில்லை என்று அவர் இப்போது மறுத்திருக்கிறார்.  bbc

1 comment:

  1. அல்லாஹ் என்ற வார்த்தையை சொல்லாமலும் அவனைப்பற்றி ஆய்வுசெய்யாமலும் இஸ்லாமல்லதவர்கள் எப்படி இஸ்லாத்தினுள் நுளைய முடியும் இவர்களைப்போன்ற முட்டாள்களின் செயல்பாட்டினால்தான் இன்று இஸ்லாம் என்றால் சிலர் ஏதோ ஒரு பயங்கரவாதச்செயல்பாடு என்ற கண்ணோடு பார்க்கின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.