பொதுமக்களுக்கான நன்மைகளை தற்போதைய அரசு சூறையாடுகிறது
(JM.HAFEEZ)
பொதுமக்களுக்கு இயல்பாகக் கிடைக்க கூடிய நன்மைகளையும், அணுகூலங்களையும் தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு சூறையாடுவதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்தார். கண்டி ஹேவாஹெட்ட பகுதியில் மேற் கொண்ட ஒரு தேர்தல் பிரசாரப் பணிகளின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,
இன்று இலங்கையில் 15 நிர் மின் உற்பத்தி நிலையங்கள் இயங்குவாதாகவும் அதில் 13 ஐ.தே.க. ஆட்சிகாலத்திலே அமைப்பட்டதாகும். ஜே.ஆர்.ஜயவர்தனா வின் ஆட்சி காலத்தில் மறைந்த அமைச்சர் காமினி திசாநாயக்கா நீர் மின உற்கத்தியில் பாரிய பாறுதல்களை ஏற்படுத்தினார்.
சந்திரிக்கா அம்மையார் டிஹல கொத்மலை நீர்மின் உற்பத்தித் திட்டத்தை மேற் கொண்டார். மறைந்த அமைச்சர் சி.பி.டி. சில்வா உடவலவ திட்டத்தை மேற் கொண்டார்.ஏனையவை ஐ.தே.க.யால் மேற்கொள்ளப்பட்டவை. இப்படியான திட்டங்கள் மூலம் மின் உற்பத்திக்கான மூலப் பொருள் கொள்வனவு செய்யத் தேவையில்லை. நீர் இயல்பாகக் கிடைக்கும் ஒன்று.
ஆனால் இன்று நடப்பதென்ன? தாராளமாக மழை நீர் இன்று கிடைத்துள்ளன. அதே நேரம் உலக சந்தையிலும் பெற்றோலியப் பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஏப்ரல் மாதம் முதல் மின் உற்பத்திச் செலவு குறைந்துள்ளது. எனவே மின் கட்டணம் குறைக்கப்படவேண்டிய காலம் இது. ஆனால் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இயல்பாக பொது மக்களுக்கு சேரவேண்டிய அணுகூலங்களை அரசு கொள்ளையிட்டு சூறையாடுவது இதன் மூலம் உறுதியாவதாக அவர் தெரிவித்தார்.

" தவளைக்கு தன் வாயினாலேயேதான் கேடாம் "
ReplyDeleteஈமான் இல்லாத ஒருவனையும் நம்பக்கூடாது
நீங்களெல்லாம் நல்ல விதமாக இந்த நாட்டை ஆட்சி செய்திருந்தால் ஏன் இந்தக் கேடெல்லாம் இன்று வந்து சேர வேண்டும்?
ReplyDeleteஇந்த நாட்டை ஒரு சிறுபான்மைத் தலைவன் ஆண்டு பெரும்பான்மை இனத்திற்கு உரிய இடத்தினை வழங்கும் காலம் வந்தால்தான் நாடு உருப்படும்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-