Header Ads



மாடுகள் அறுப்பதை நிறுத்தினால்..!

(அய்மன் அம்மார்)

பௌத்த இனவாதிகளின் மற்றுமொரு நவீன கண்டு பிடிப்பும் குற்றச்சாட்டும் என்னவென்றால், இலங்கை முஸ்லிம்கள்  மாடுகளை இறைச்சிக்காக அறுக்கின்றனர் என்பதாகும். 

உண்மையில் மாட்டிறைச்சியையோ அல்லது ஏதாவது மாமிசங்களையோ உணவாகக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் ஒரு போதும் கட்டாயப்படுத்தவில்லை. அதே போன்று, மாட்டிறைச்சியையோ அல்லது வேறு ஏதாவது மாமிச உணவுகளையோ உண்ணத் தவறுபவர்கள் குற்றவாளிகள் என்றும் இஸ்லாம் போதிக்கவில்லை. எனினும் எக்காலத்துக்கும் எச்சூழலுக்கும் பொறுத்தமான போதனைகளையே இஸ்லாம் முன்வைத்துள்ளது. 

பாலை வணங்களில் வசிப்போர், காடுகளில் வசிக்கும் வேடர்கள், ஐஸ் மழைகள் கொட்டும் நாடுகளில் வசிப்போர்களைப் பார்த்து, மரக்கறிகளையே உண்ண வேண்டும், மாமிசங்களை உண்ண வேண்டாம் என்று அர்த்தமற்ற, பொறுத்தமற்ற போதனைகளை இஸ்லாம் போதிக்க வில்லை. 

அப்படிப் பனித்திருந்தால் இஸ்லாம் எக்காலத்துக்கும் பொறுத்தமானது என்ற வாதமும் பொய்யாகிவிடும். 

இது இவ்வாறிருக்க, புத்த தர்மத்தில் மாடுகள் அல்லது உயிரினங்கள் பலியிடவேண்டாம் என்று எந்தத் தடைகளும் காணப்படவில்லை. புத்த பெருமான் இறுதியாகச் சாப்பிட்ட உணவு பன்றி இறைச்சியாகும். அவர் பல ஆண்டுகள் காட்டில் தவம் இருந்தார். அப்போதெல்லாம் அங்கு மரக்கறி சாப்பிடுவதற்கான எந்த சாத்தியமும் இருக்கவில்லை. அப்படி என்றால் ஏதாவது மாமிசங்களையே அவர் உண்டிருக்க வேண்டும் என்று எம்மால் ஒரு முடிவுக்கு வரமுடிகின்றது.

அப்படியாயின் நவீன கால பௌத்த இனவாதிகள் மாடுகளை அறுப்பதை தடுக்க வேண்டும் என்று தென் மாகாணத்தில் இருந்து கொழும்பு வரை பாத யாத்திரை மேற்கொண்டமை, மாடுகள் ஏற்றும் வாகணம் ஒன்றை தீயிட்டமை, இறைச்சிக் கடைகளைத் தகர்த்தமை போன்ற செயற்பாடுகள் எதனைக் குறிக்கின்றன? இவை உண்மையில் காழ்ப்புணர்சியும், இன வெறியுமேயாகும் என்பதையே குறிக்கின்றன.

இத்தகைய இனவெறியர்களுக்கு நமது உண்மையான நிலைப்பாட்டையும், சகவாழ்வுக்குச் சாத்தியமான வழிகள் என்ன என்பதையும் சிந்தித்து செயலாற்றுவதும் எமது சமூகப் பொறுப்பாகும்.

அந்த அடிப்படையில் எனது பின்வரும் கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

01- மாடுகள் வளர்ப்பதையும் அவற்றை விற்பதையும் தொழிலாகக் கொண்டவர்கள் பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த கிராமவாசிகளேயாவர். நாம் மாடறுப்பதை நிறுத்தினால் அவர்களது வாழ்வாதாரமே பெரிதும் பாதிக்கப்படும், அப்பொழுது அவர்களே இனவாதிகளுக்கு எதிராக வீதியில் இறங்கும் சந்தர்ப்பம் வெகு கடுதியாக ஏற்படுமல்லவா?

02- மாடுகள் அறுப்பதை நாம் நிறுத்தினால் கட்டாக்காளி மாடுகளின் தொல்லைகள் வீதியில் வந்து நிறையும், அது சூழலை பெரிதும் மாசுபடுத்தும். அப்பொழுது அரசாங்கமே மாடறுப்பை ஊக்குவிக்கும் நிலை ஏற்படாதா?

03- நாட்டின் பல பகுதிகளில் நகர சபைகள், பிரதேச சபைகள் மேற்படி மாட்டிறைச்சிக் கடைகளைத் 'டெண்டர்' மூலம் குத்தகைக்கு விடுவதன் மூலம், கோடிக் கணக்காக ரூபாய்களை ஈட்டிக்கொள்கின்றன. மாடறுப்பதை நாம் நிறுத்தினால், பிரதேச சபைகளுக்கும் நகர சபைகளுக்கும் கோடிக்கணக்காக ரூபாய்கள் நஷ்டங்கள் ஏற்படும். அப்பொழுது அச்சபைகளே மாடறுப்பை கண்டிப்பாக ஊக்குவிக்கும் அல்லவா?

04- மிருகக் காட்சிச் சாலைகளில் உள்ள சிங்கம், புலி போன்ற மிருகங்கள் மரக்கறிகள் சாப்பிடுவதில்லை. புலி பசித்தாலும் புல் திண்ணாது என்பார்கள். எனவே, இவற்றுக்காக மாடுகள் அறுக்க வேண்டிய கட்டாயத் தேவையில் அரசு உள்ளதல்லவா?

05- இராணுவ வீரர்கள், படைப்பிரிவினருக்கு உணவு வழங்கும் போது, அவர்களுக்கும் மாமிச உணவே கொடுக்க வேண்டிய தேவையில் பாதுகாப்பு அமைச்சு உள்ளதல்லவா? அத்Nதைவையை எப்படி சமாலிக்கும்?

06- மேற் கூறப்பட்ட விடயங்களை சிந்தித்து, சாதித்து பெரும்பான்மை இன வெறியர்களுக்குப் பாடம் புகட்ட, எமது இறைச்சிக் கடை வியாபாரிகள் சற்று விட்டுக் கொடுப்புடன் தற்காலிகமாகவேணும் வேறு ஒரு தொழிலை மேற்கொள்ள முடியுமா என்று சிந்திக்க வேண்டும்.

07- எல்லாத் பௌத்தத் தேரர்களும் ஒன்றிணைந்து கொழும்புக்கு வந்து, பெற்றோலை ஊற்றித் தீக்குளித்தாலும், விலங்குகளை அறுப்பதை நிறுத்த முடியும் என்று நான் நினைக்க வில்லை என்று முன்னாள் ஹெல உறுமய கட்சியின் தலைவரும் அதன் தாபகருமான சங்கைக்குரிய மேதானந்தா தேரர் குறிப்பிட்டிருந்தமையும் நினைவு படுத்தப்பட வேண்டிய அருமையான ஒரு கருத்தாகும்.

இவ்விடயங்களை சிந்தித்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் திறந்த உளத்துடன் கலந்துரையாடி ஒரு தீர்வுக்கு வருவோமேயானால், இனவாதிகளின் அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்களை குப்பையில் போடலாம். (இன்ஷா அல்லாஹ்). அல்லாஹ்வே போதுமானவன்.

11 comments:

  1. Masha Allah Arumayana Karutthu. Kalatthin tavaiyana Karutthu

    ReplyDelete
  2. மிஸ்டர் அய்மன் அம்மார். நீங்கள் பொதுபல சேனாவுடய கைஆல் போல தெரிகிரது.

    மாட்டு அருப்பதை தடை செய்வதற்க்கு முக்கியமான காரனம் இந்த இனவாதிகளுக்கு உயிரினங்களின் மீது அன்போ பாசமோ இல்லை. ஒன்று முஸ்லிம்களின் இந்த மாட்டிரைச்சி வியாபாரத்தை அடியோடு இல்லாதொலிப்பது. அடுத்தது முக்கியமான திட்டம் பெரும்பான்மை இநத்தவர்களின் மூலமாக வெளிநாட்டில் இருந்து மாட்டிரைச்சியை இரக்குமதி செய்வது.

    இவர்கள் மாட்டிரைச்சியை தடை செய்வதாக இருந்தால், மாட்டிரைச்சி இரக்குமதி திட்டத்தையும் கைவிடவேன்டும். வெளிநாட்டில் மாடு அருத்து இரக்குமதி செய்வது மிருகவதை இல்லையா. உள்நாட்டில் மாடு அருத்தால் மட்டும் மிருகவதையா????

    இது ஒரு பொய் குற்றச்சாட்டு. இது முஸ்லிம்களின் மாடடிரைச்சி வியாபாரத்தை ஒட்டுமொத்தமாக இல்லாதொலிக்க ஒரு சதி.

    இதை நாம் விட்டுக் கொடுக்க முடியாது. அப்படி இந்த இனவாதிகளுக்கு உயிரினங்களின் மீத பாசம் இருக்குமேயானால் முதலாவது அதிகமாக அறுக்கப்படக்கூடிய மீன், கோழி இரச்சியை தடைசெய்யட்டும். அதற்கு பிறகு மாட்டிரைச்சியை தடைசெய்ய கூறினால் நாங்கள் சம்மதிப்போம்.

    ReplyDelete
  3. Dears

    In Sri Lanka almost 5000 ( legally) cattled will be cut and may be 500 will be cut illegally.
    1. Monthly 165,000 will be
    2. yearly - 1,980,000.
    Suppose we stop this operation.

    a) in 2 years we will end up with 3,960,000. and suppose - 45% will be cow( female) after 2 years they will start pregnancy.

    b) do the famers will feed male cows???? for what reasons? what to do - allow farmers to Kill them or leave them on Road?

    c) even in female cow there are 12% will have no ability for pregnancy - what to do with them?-

    d) lacks of Singhalese will come on Road against the BBS and Goverment?

    e) in 5 years may be the population of the cattle will be more than human in Sri Lanka?

    f) All the plants and trees will be eaten up by cattles and lackes , pond and rivers will be not enough for them?

    g) Enviormental unbalancing will be araising and pollution and many soacial issue will araises?

    h) may be after one year of stopping we may find the buy one and get one free sales mode for cow? may be

    i) sure with in 6 month the Goverment will be thrown out by the singhalese.

    ReplyDelete
  4. இவையெ்லாம் நடகமே எந்த வகையில்
    மடறுப்பை நிறுத்தலாம் என்ற எண்ணத்தி்ல் தி்துக்கொண்டிருக்கிறார்கள்.
    முஸ்லம்களை மூடர்களாக்க என்னமா கஷ்டப்படுகிராங்கப்பா

    ReplyDelete
  5. very nice and good statement pls send one letter to srilankan president let him realize thank you

    ReplyDelete
  6. bro.heladiva!
    iman ammaar thanakku manathil patta karuththai solli irukkiraar.athu ungalthu sinthanai utpada palarathu sinthanaiyaiyum thoondi irukkirathu. athatkupooi awarai bhuthu bala senavin kaiyaal endru sollalama?

    ReplyDelete
  7. @Heladiva உங்கள் கருத்தை பார்த்தால் மாட்டிறைச்சி இல்லாவிட்டால் முஸ்லிம் சமூகம் அழிந்துவிடும் போன்றல்லவா தோன்றுகிறது ....ஒரு குறிப்பிட்ட காலத்திக்கு மாட்டிறைச்சுக்கு பதிலாக மாற்றீடு போசனை முறையை மேற்கொண்டால் முஸ்லிம் சமூகம் குடி முழுகி போகுமா...??

    ReplyDelete
  8. Mr Helediva is right once we lose any thing we cant get it back.
    the superior's idea to import beef from Australia by one of his hence as a gratitude for his election expenses

    ReplyDelete
  9. ippothu yaru mattu irachchi tholil seihinrarhalo 95% langem kodukkindarhal kodukkamal seiya mudiyathu anda tholilaha irundalum langem koduththu tholil seithal haram nabihalarin hadees langem koduppathum aduppathm haram enawe inda tholilai vittal nichchayam barakath undu naam allorum aruppathu sariya pilaya enbathai aaraiwathai vittu vittu haraththil irundu pathukappu peruwoom allah allawatraium hairakkuwan

    ReplyDelete
  10. Mr. Marzuk
    மடயர்களை போல விலங்காம சும்மா புலம்ப வேண்டாம். மாட்டிறைச்சி இல்லா விட்டால் முஸ்லிம் சமூகம் அழிந்துவிடாது.

    குறிப்பிட்ட காலத்திக்கு விட்டுக்கொடுத்து விட்டால், திரும்ப கிடைக்கிரது சந்தேகம். எங்களுக்கு நலவு ஒன்றும் நடக்காது. அதற்கு பதிலாக முஸ்லிம்களின் மாட்டிரைச்சி வியாபாரம் ஒட்டுமொத்தமாக பெரும்பான்மையினரிடம் சென்றுவிடும். அவர்கள் மாடை அருப்பதற்கு பதிலாக வெளிநாட்டில் இருந்து அல்லாஹ்வின் பெயரால் அருக்கப்படாத ஹராமான மாட்டிரைச்சியை இரக்குமதி செய்து ஹலால் என்று சந்தெயில் விர்பனை செய்வார்கள். குறிப்பிட்ட காலத்திக்கு விட்டுக்கொடுத்து இதையா எதிர்பார்க்கப்போரீங்க.

    கடைசியில் ஹலால் சான்றிதழ்கு நடந்த கெதிதான்.

    ReplyDelete

Powered by Blogger.