Header Ads



விமானத்தின் கதவை நடுவானில் திறப்பதற்கு நான் ஒன்றும் முட்டாள் அல்ல - அமைச்சரின் மகன்

தூக்கத்தில் நடந்து சென்றே விமானத்தின் கதவைத் திறக்க முயன்றதாக, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகனும் சிறிலங்கா துடுப்பாட்ட அணி வீரருமான ரமித் ரம்புக்வெல தெரிவித்துள்ளார். 

பிரிட்டிஸ் எயர்வேய்ஸ் விமானம் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, ரமித் ரம்புக்வெல மதுபோதையில் விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற சம்பவம் உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தநிலையில், இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ரமித் ரம்புக்வெல, 

“நான் அப்போது மது அருந்தியிருக்கவில்லை. தூக்கத்தில் நான் என்ன செய்கிறேன் என்பதை அறியாமல் செய்யும் பழக்கம் சிறுவயதில் இருந்தே உள்ளது. அப்படித் தான், விமானத்தின் வெளிப்புறக் கதவைத் திறக்க முயன்றுள்ளேன். பின்னர் தான் நான் என்ன நடந்தது என்று புரிந்து கொண்டேன். 

எமது இறுக்கமான நிகழ்ச்சி நிரல் காரணமாக முதல் நாள் தூங்க முடியவில்லை. அதனால் நாம் மிகவும் சோர்வாக இருந்தோம்.  விமானத்தின் கதவை நடுவானில் திறப்பதற்கு நான் ஒன்றும் முட்டாள் அல்ல.  நான் மதுபாதையில் இருந்ததாக குற்றம்சாட்டுபவர்கள் மருத்துவ அறிக்கை வரும் வரை பொறுத்திருக்க வேண்டும்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

அதேவேளை, தனது மகன் மது அருந்துபவன் அல்ல என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் தெரிவித்துள்ளார். 

கழிவறைக் கதவும், விமானத்தின வெளிப்புறக் கதவும் அருகருகாக இருந்ததால், தவறுதலாக அவர் அதனை திறக்க முயன்றுள்ளார். எனது மகனுக்கு இது தான் முதல் விமானப் பயணம் அல்ல,” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

4 comments:

  1. That's inherited from his father. He has the similar ailment and escape from the balcony in Australia. The government has choose a suitable man as it's media spokesman,They might tell in future,what Kheliya said are same as his son did in mid Air.

    ReplyDelete
  2. அன்புள்ள அமைச்சர் அவர்களே,

    ஒழுக்க கோவையை முதலில் தமக்குள்ள கொண்டுவரணும் அன்புக்குரிய அமைச்சர் அவர்களே

    ReplyDelete
  3. மகனுக்கு இதுதான் முதல் தடவையல்ல ஆனால் கக்கூஸ் கதவுக்கும் வெளிக்கதவுக்கும் வித்தியாசம் தெரியாதா சார் ரொம்ப கேவலமா இருக்கு கக்கூஸ் கதவின் வடிவம் எப்படி இருக்கு வெளிக்கதவின் வடிவம் எப்படி இருக்கு, அதுவும் வெளிக்கதவில் திறக்கக்கூடாது என்று எத்தனை அறிவுறுத்தல்கள் போடப்படுள்ளது இதிலிருந்து புரிகின்றது அப்பாவின் புத்திசாலித்தனம்.

    மகன் குடிபோதையில் இருக்கவில்லையாம் சிறுபிள்ளையில் இருந்து அவருக்கு தூக்கத்தில் என்ன செய்கின்றார் என்பது புரிவதில்லையாம் இதுபோன்ற நோயுள்ள நீ எதற்கு விமானத்தில் போகவேண்டும் தூங்கவேண்டும் இதெல்லாம் ஒருகாரணமா?

    மொத்தத்தில் அப்பாவுக்க் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கின்றான். தவறு செய்வாங்களாம் அதை மறைப்பதற்கு மண்டைக்குள் மசால இல்லையாம் இவங்க மட்டும் இப்படியா இல்ல நெறயப்பேர் இப்படியா?

    ReplyDelete
  4. Son says, he has somnambulism, but dad says by mistake, his son opened the door thinking, its toilet door. Can someone, think and act, if he is under the influence of somnambulism? Contradicting, is not it?

    ReplyDelete

Powered by Blogger.